பரலோக மணவாளன் மற்றும் பூமிக்குரிய மணவாட்டியின வருங்கால இருப்பிடம் The Future Home of the Heavenly Bridegroom And The Earthly Bride ஆகஸ்டு 2, 1964 பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. நம்முடைய ஆத்துமாக்கள் தேவனுக்கு முன்பாக பணிந் திருக்கும் நிலையில் நாம் சில நிமிடங்கள் நின்ற வண்ணமாக ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் இன்றைய தினம் நாங்கள் இங்கு கூடிவரும் சிலாக்கியம் பெற்றதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். மனித அறிவிற்கு எட்டாத நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நித்திய ஜீவனுக்கேதுவான காரியங்களிடம் எங்கள் கவனத்தை திருப்பத் தக்கதாக நாங்கள் இங்கு கூடி வந்திருக்கையில், எங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி ஜெபிக்கிறோம். வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட அந்த இடத்தை நாங்கள் ஆதாயப்படுத்திக் கொள்ளத்தக்கதாக, நாங்கள் எப்பக்கம் திரும்ப வேண்டுமென் பதையும், நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் நாங்கள் அறிந்துக் கொள்ளும்படி உம்முடைய வழிகாட்டலை எங்களுக்குத் தாரும் என்று ஜெபிக்கிறோம். தேசத்தில் அநேகர் வியாதியுள்ளவர்களாயும் தேவை யுள்ளவர்களாயும் தங்கள் பிரயாணத்தை முடிக்காதவர்களாயும் இருக்கிறார்கள். எங்களுடைய எதிரி மட்டுமல்ல, உம்முடைய எதிரியுமான பிசாசு, அவர்களின் காலம் வருமுன்னே ஜீவனை நிறுத்தி மரணக்குழிக்கு அவர்களை அனுப்ப வந்திருக்கிறான். கர்த்தாவே, அவர்களுடைய நாட்களை நீர் அவர்களுக்கு நியமித்த நாட்கள் வரை நீட்டிக்குமாறு உம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் முன்னிட்டு அவர்களுக்காக இன்றைய தினம் வேண்டிக்கொள்கிறோம். இங்கே பீடத்தண்டையில் கைகுட்டைகள் வைக்கப்பட்டி ருக்கின்றன. அங்கே கூடத்திலும் இதை சுற்றிலும் கட்டில்கள் மேலும், படுக்கைகளின் மேலும் வியாதியாயும், துன்புறுகிறவர் களாயும் இருக்கிறார்கள். அங்கே ஜனங்களிடையே அநேகர் நிற்பதற்கு பலமில்லாதவர்களாயிருந்தும் நின்று கொண்டி ருக்கிறார்கள். ஓ. நித்திய தேவனே, ஆசீர்வதிக்கப்பட்டவரே, எங்க ளுடைய அக்கிரமத்தைப் பாராமல். எங்களுடைய இடத்தில் நீர் நின்றபடியினாலும். இந்த ஜெபத்திற்காக தன்னை பிரதி நிதியாக்கினவருமான கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் இக்காலையில் எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். கர்த்தாவே, உம்முடைய மகிமைக்காக ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். இந்த கைக்குட்டைகளை ஆசீர்வதியும்; அவைகளை வியாதியஸ்தர் மேல் போடும்போது அவர்கள் சுகமாகட்டும். பிதாவே, மகத்தான சுகமாக்கும் ஆராதனை ஆரம்பிக்கப் போகிறதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்; அந்நேரம் வருவதற்கு முன்பு - கர்த்தாவே, ஜீவனுக்கான வழியையும் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் உம்முடைய வார்த்தையின் மூலம் அறிந்து கொள்ளும்படி பிட்டுத்தாரும். இயேசுவின் நாமத்தில் இவைகளை கேட்டுக் கொள்கிறோம். ஆமென். கர்த்தருடைய வீட்டிற்கு வந்து அவருடைய ஜனங்க ளோடு பேசுவதென்பதை மிக உயர்ந்த சிலாக்கியமாக நான் எப்பொழுதும் கருதுகிறேன். இங்கு நெருக்கம் அதிகமாயிருக்கிற தென்று நானறிவேன். நான் கொடுக்கப் போகும் செய்தியும் சற்று விரிவானதாயிருந்தாலும். இச்செய்தி முடியும் வரை நீங்கள் உங்களால் ஆன மட்டும் செளகரியமாயிருப்பீர்கள் என நம்புகிறேன். இங்கு உஷ்ணமாயுள்ளது. ஆனால் இந்த உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும் கருவிக்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். இருந்தாலும் இத்தகைய ஜீவக்கட்டத்திற்கு எந்த ஒரு கட்டுப்படுத்தும் கருவியும் போதாது. ஏனெனில் உங்கள் சரீரத்திலிருந்து 98.4 ° உஷ்ணமானது தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதினாலும். ஜனம் நெருக்கமாயிருப்பதினாலும் அதை நிலைப்படுத்துவது கூடாத காரியம். ஆனால் கர்த்தர் தாமே நீங்கள் செளகரியமாயிருக்கச் செய்வார் என்று நம்புகிறேன். இத்தகைய ஜனக் கூட்டத்தை நாம் கூட்டியிருக்கும் போது உங்களை நான் இங்கு அழைத்து உங்களுக்கு பிரயோ ஜனமாயிருக்கும் என நான் நினைக்காவிட்டால் நான் அவ்விதம் செய்திருக்கமாட்டேன். நீங்கள் இங்கு வருவதனால் உங்களுக்கு லாபம் உண்டாயிருக்கும் என எண்ணுகிறேன். நாம் முடிவின் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலும், இவ்விதமான கூட்டங்களை இன்னும் தொடர்ந்து நடத்த நீண்ட காலமில்லை என்பதையும் அறிந்தவனாய் அவருடைய ராஜ்யத்திற்காக ஒவ்வொரு நிமிஷத்தையும் பயன்படுத்த நான் விரும்புகிறேன். கர்த்தராகிய தேவன் தாமே நாம் கூடி வருகிறதை ஆசீர்வதிப்பார் என நான் நம்புகிறேன். ஒரு காரியத்தைக் குறித்து நான் உங்களை புகழ விரும்புகிறேன். விடுதிகளில் தங்கியிருக்கும் பல வியாதியுள்ளவர்களையும் கஷ்டங்களுக்குள் ளானவர்களையும், சில உணவருந்தும் இடங்களின் நிர்வாகிகளையும் பார்ப்பதற்காக நேற்றைய தினம் சென்றிருந்தேன். அவ்விதம் போகையில் "ரான்ச் வீடு என்னும் இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்து நாங்கள் புறப்படுகையில் அந்த இடத்தின் நிர்வாகி என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். அவர் என் பெயரை எவ்விதம் அறிந்திருக்கிறார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன். அப்பொழுது நான், "நீங்கள் தான் நிர்வாகியோ” என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் தான் உரிமையாளர். உம்முடைய ஜனங்கள் இங்கு வந்து என் உணவு விடுதியில் சாப்பிடுகிறார்கள்” என்றார். அப்போது நான், "அவர்கள் அதிக ஜனமாய் வந்து உம்மை நெருக்குகிறார்கள் என நான் நினைக்கிறேன்” என்றேன். அதற்கு அவர், "ஐயா, நான் இதுவரை இத்தகைய ஒரு நல்ல ஜனத்தை பார்த்ததில்லை, அவர்கள் உண்மையிலேயே மிகவும் நல்லவர்கள்” என்றார். நேற்றைய தினம் நான் ஒரு வாலிப் பெண்ணை பார்த்து பேசுவதற்காக (அவருடைய தகப்பனாரும், தாயாரும் அப்பொழுது உடனிருந்தார்கள்) வேறொரு உணவு விடுதிக்கு (ஓக் என்ற இடத்தில் உள்ளது) சென்றிருந்தேன். அவர்கள் எந்த அறையில் தங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய அவ்விடுதியின் நிர்வாகியிடம் சென்றிருந்தேன். அந்நிர்வாகி, "நீங்கள் தான் சகோதரன் பிரான்ஹாமா? என்று கேட்டார். அதற்கு நான் "ஆம் ஐயா” என்றேன். அப்பொழுது அவர், "நான் உம்முடைய கையை குலுக்க வேண்டும்” என்றார். (அந்த நிர்வாகி தன்னுடைய மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் மிகவும் நல்ல தம்பதிகள்) அவர்கள் என்னிடம், "இந்த விடுதியில் உள்ள ஒவ்வொருவரும் உங்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் அவர்களுக்கென்று இந்த விடுதியை முன்கூட்டி ஆயத்தப்படுத்தி எங்கள் மற்ற வாடிக்கையாளர்களையெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டோம்” என்றார்கள். அதற்கு நான், "அதற்காக நான் நன்றி கூறுகிறேன்" என்றேன். அப்பொழுது அவர், "சகோ. பிரான்ஹாமே உங்களுடைய கூட்டத்திற்கு வரும் ஜனங்களைப் போல நல்ல ஜனங்களை நான் இதுவரை கண்டதில்லை” என்றார். நேற்றைய இரவு, நான் என் நண்பரான திரு பெக்கர் என்பவரிடம் சென்றிருந்தேன். அவர் தயாரிக்கும் "சான்ட்விச் நான் எப்பொழுதும் விரும்புவேன். என் சிறு வயதிலிருந்தே அவரை நான் அறிவேன்; என் வாழ்நாள் பூராவும் நான் அவரை அறிந்திருக்கிறேன். ஆற்றோரம் அவரும் அவர் மனைவியும் அந்த விடுதியை அமைத்திருக்கின்றனர். திரு பெக்கர் என்னிடம், "பில்லி" என்று அழைத்தார். அதற்கு நான், "என்ன ஹோமர் அவர்களே (நாங்கள் இருவரும் அவ்வளவுக்கு பரிச்சையமானவர்கள்) என்றேன். அப்பொழுது அவர், "உம்முடைய ஜனங்களெல்லாருக்கும் நான் அங்கு உணவு கொடுக்கிறேன், இருநூறுக்கும் மேற்பட்ட வர்கள் ஒவ்வொரு ஞாயிறன்றும் அங்கு ப்ளுபோர் என்ற இடத்தில் உணவருந்துகிறார்கள், நான் எங்கு சென்றாலும் நீர் எவ்வளவு நல்லவராயிருக்கிறீர் என்று ஜனங்கள் உம்மைக் குறித்துப் புகழுகிறார்கள்” என்றார். 'ரிவர்வியூ" என்ற இடத்தில் உள்ள ஒரு மனிதர் என்னிடம், "உம்முடைய கூட்டத்தில் பங்கு கொள்ளும் ஜனங் களால் அந்த இடம் நிறைந்து விட்டதால், மற்ற வாடிக்கை யாளர்கள் நூறு பேர் அங்கு வர இயலவில்லை” என்றார். ஆகவே, என்னைப் பொறுத்தமட்டில் நீங்கள் தான் இவ்வுலகத்தின் உப்பாயிருக்கிறீர்கள். ஜனங்களுக்கும் பாவி களுக்கும் நான் பிரசங்கிக்கத்தக்கதான சிலாக்கியம் பெற்ற தற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இந்த ஜனங்களை நான் பாவிகள் என்று சொல்லவில்லை, தொழில் முறையாயிருக்கும் இந்த ஜனங்களைத்தான் குறிப்பிடுகிறேன். அவர்கள் தங்கள் தொழில் தொடர்பாக நீங்கள் அவர்களிடம் நடந்து கொண்ட முறைகளை பார்த்து உங்களை நல்லவர்கள் என்று சொல்வதை கேட்கும் போது அது உப்பாயிருக்கும் ஒரு காரியமாகும். காரியங்களை கவனமாக செய்யும் உங்கள் வழியையும், உங்கள் நல்நடக்கைகளையும் நான் மிகவும் மெச்சுகிறேன். நான் எப்பொழுதும், "யாராவது இங்கு வந்து தங்களுடைய சாப்பாட்டுத் தொகையை செலுத்துவதற்கு பணமில்லை என்பார்களாயின் என்னைக் கூப்பிடுங்கள், நாங்கள் அதைக் குறித்து ஏதாகிலும் செய்வோம். அதுமட்டுமல்ல ஜனங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று கூறுவேன்: ஏதாகிலும் செய்யப்படும் பாருங்கள்! நீங்கள் என்னுடைய பிள்ளைகள் என்று நான் உணருகின்றேன். பரலோகத்திற்கு நான் செல்லும்போது, என்னுடைய ஊழியமானது முடி சூட்டப்படும்போது அதில் வைக்கத் தக்கதான விலையேறப் பெற்ற ரத்தினங்களும் நட்சத்திரங்களும் நீங்கள் தான். ஏழு சபையின் காலங்கள் ஏழு முத்திரைகள் என்பவை களைப் பற்றி நான் முன்னறிவித்தபடி அச்செய்திகள் பேசப்பட்டு நிறைவேறுதலைக் கண்டன. இந்த காலை ஒரு முக்கியமான செய்தியை உடையவனாயிருக்கிறேன். என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு ஆசீர்வாதமான செய்தி. அதே விதமாக அது உங்களையும் சந்திக்கும் என்று நான் நம்புகிறேன். அதை நான் பெற்றுக் கொண்ட ஆவியின் ஊக்குதலோடு உங்களுக்கு கொடுக்க முடியுமானால் அற்புதமாயிருக்கும். ஆனாலும் அவ்விதமாய் செய்வது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. எங்கு, என்ன நடக்கும் என்பதைக் குறித்து உங்களுக்கு நான் கூறிக்கொண்டு வந்தேன், அவைகளெல்லாம் நிறைவேறி வருவதை நாம் பார்க்கின்றோம். பூமிக்குரிய மணவாட்டியின் இருப்பிடம் என்னும் பொருளின் பெயரில் இக்காலை நான் பேசவுள்ளேன். அவர்கள் எங்கே வாழப்போகிறார்கள் என்பதைக் கூறப் போகிறேன். தேவனுடைய மகத்தான திட்டத்தில் நாம் யாவரும் அதில் ஒரு பாகமென கர்த்தருடைய கிருபையை முன்னிட்டு நான் நம்புகிறேன். என்னோடுகூட நீங்கள் நேரத்தினிமித்தம் பொறுத்துக் கொள்வீர்களென நம்புகிறேன். உங்கள் வேதாகமங்களோடும் எழுதுகோல்களோடும் ஆயத்தப்படுங்கள். ஏனெனில் அநேக வேதவசனங்களை நான் குறிப்பிட்டு போதுமான நேரத்திற்குள்ளாக முடிக்க நான் முயற்சி செய்து, பின் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறேன். அவ்விதமாய் செய்யப் போகிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறேன். ஏறத்தாழ நம்பிக்கையற்ற நிலைமையுள்ளவர்களுக்காக அங்கே அறைகளில் சற்று முன்பாக நாங்கள் ஜெபம் செய்து கொண்டிருந்தோம். கர்த்தருக்குச் சித்தமானால் அநேகமாக வருகின்ற 16-ம் தேதியன்று வேறொரு ஆராதனை வியாதியஸ்தருக்காக நடத்தவிருக்கின்றேன். என்னுடைய விடுமுறையை நான் தற்பொழுது ஆரம்பித்திருக்கிறேன்; கடந்த ஜனவரியிலிருந்து நான் பிரயாணம் செய்து இங்கு திரும்பவும் வந்திருக்கிறேன் (நாளை காலை என் குடும்பத்தை டூசானுக்கு அழைத்து செல்லவிருக்கிறேன்). மீண்டும் இங்கு கென்டகிக்கு நான் வந்து கர்த்தர் என்னை எங்கும் வழிநடத்தாத பட்சத்தில் என்னுடைய சில நண்பர்களோடு 7 அல்லது 19 நாட்களளவு வேட்டைக்குச் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். நாம் எங்குச் செல்லப்போகிறோம் என்பதை நான் அறியாதவனாய் இருக்கிறேன் : நாம் ஒரு போதும் அதை அறியமாட்டோம். ஏனெனில் அது தேவனுடைய கரத்திலுள்ளது. தேவன் மட்டுமே அதை அறிவார். இப்பொழுது இந்த மகத்தான பொருளின் பேரில் நான் பேசவுள்ளேன். நான் அதை சொல்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்வேனென்றால் (ஏனெனில் அநேக காரியங்களை அத்துடன் கொண்டு வர வேண்டியதாயுள்ளது) பல வாரங்கள் அதற்கு செல்லும் என யூகிக்கிறேன். ஆனாலும் அதன் முக்கியமான காரியங்களைத் தொடத்தக்கதாக நான் சில வசனங்களையும், சில குறிப்புக்களையும் உங்கள் ஆராய்ச்சிக்கு விடுவதற்கென எடுத்து வைத்திருக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் அக்டோபர் மாதத்திலோ அல்லது சீக்கிரத்திலோ அல்லது அவருக்கு சித்தமான சமயத்தில் (அது எப்போது என்று எனக்குத் தெரியாது) இச்செய்தியுடன் வெளிப்படுத்தின விசேஷம் 12-ம் அதிகாரத்தைப் பொருத்தி ஒரு சில தினங்கள் தொடர்ச்சியாக கூட்டம் அமைக்க நான் விருப்பமாயுள்ளேன். அது மிகவும் மகத்தானது என்று நான் விசுவாசிக்கிறேன். ஓ, அவர் அதை எவ்விதம் செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் மகத்தாயிருக்கும். நாம் கூடி வரும்போது .... ஒவ்வொரு நாள் காலையும் போல, நான் இவ்விதமாய் யோசிப்பேன், "நான் இங்கு வரும்போது என்னுடைய ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கப் போகிறேன். இப்பொழுது நான் அதை எவ்விதம் செய்யப் போகிறேன்?" என்று யோசிக்கிறேன். இங்கே என்னுடைய நல்ல நண்பர் டாக்டர் லீவேயிலும் அவருடைய மனைவியும் மகளும் பின்னால் அமர்ந்திருக்கிறார்கள். சகோ. ராய் பார்டர்ஸ்; சகோ. ரடல்; சகோ. பீலர்; சகோ. பாமர்; சகோ. ஜாக்ஸன் இன்னும் பல பாகங்களிலிருந்து வந்த சகோதரர்களுக்கு சகோ. அந்தோனி மில்லானோ; ஓ எங்கு நோக்கினாலும் யாராகிலும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்) ஆர்க்கன்ஸாலிருந்து வந்த இன்னுமொரு சகோதரன், சகோ. யோவான், சகோ. ஏர்ல் மார்டின் : சகோ. பிளேயர்... ஓ, இதற்கு முடிவில்லை, பாருங்கள் எல்லோரும் இங்கிருக்கிறார்கள். நான் வார்த்தையை போதிக்கும் போது உண்மையான தேவனுடைய மனிதர்கள் என்று நான் யாரையெல்லாம் யோசிக்கிறேனோ அத்தகைய கூட்டம் என்னைச் சுற்றிலும் இருப்பதற்காக நான் மகிழச்சியாயிருக்கிறேன். இந்த சிறிய கூடாரத்திற்காகவும், ஜனங்கள் வருவதற் கென்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற ஐந்து கதவுகளுக்காகவும் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நமக்கு இங்கே ஆவியினால் நிரப்பப்பட்ட நான்கு உதவியாளர்களும், நான்கு தர்மகர்த்தாக்களும் உண்டு. ஒவ்வொரு கதவருகிலும் இரண்டு பேர் நிற்பார்கள். கூடாரத்தின் முன் வாசல் இரண்டு மேய்ப்பர்களுக்காக இரண்டு கதவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. உங்களை நாங்கள் பெற்றுக் கொண்டதற்காக தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவன் தாமே எப்பொழுதும் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது சில கணங்கள் நாம் நின்றவாறு II பேதுரு 3ம் அதிகாரத்தையும் பின்பு வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தையும் படிக்க விரும்புகிறோம். கர்த்தாவே, "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்ற உம்முடைய வார்த்தையையும், "எல்லா வசனங்களும் நிச்சயமாக நிறைவேற வேண்டும்" என்ற உம்முடைய வார்த்தையையும் நாங்கள் அறிந்திருக்கின்றபடியால் நாங்கள் நின்ற வண்ணமாய் உம்முடைய வார்த்தையை படிக்கையில் எங்களுடைய இருதயங்களை மகிழ்ச்சியினால் நிரப்பும். நாங்கள் இவைகளை படிக்கும்போது, நாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிற இந்த மணிநேரத்தை உம்முடைய உதவியால் புரிந்து கொள்ளச் செய்யும். இப்புத்தகத்தின் ஆக்கியோனாகிய இயேசுவின் நாமத்தில் இவைகளை கேட்டுக் கொள்கிறோம். ஆமென். II பேதுரு 3ம் அதிகாரம். பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மை யான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். முதலாவது நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 'அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? (இந்த வசனம் அந்த நாஸ்திக பெண்ணிற்கு பொருந்துகிறதல்லவா?) பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமும் தல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்த தென்பதையும் மனதார அறியாமலிருக்கின்றார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வரு ஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியா திருக்க வேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல்; ஒரு வரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை உள்ள வராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள்... (பெருத்த சத்தத்துடன் பூமியும்) மடமட என்று அகன்று போம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக் கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடு காத்திருங்கள்: அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமா மிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் மென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக்காத் திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும், பிழையற்றவர்களுமாய்ச் (கறை, பிழை காணப்படாமல்) சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்கு பிரியமான சகோ தரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிரு பங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசி மிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி யில்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங்களைப் புரட்டுகிறது (ஆங்கிலத்தில் WREST என்று உள்ளது. இதன் பொருள் "சண்டையிடுவது”) போல் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்ச கத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். II பேதுரு 3  இப்பொழுது கிறிஸ்துவின் வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்திலிருந்து (பிலிருந்து 7 வசனங்கள்) பின்வரும் வசனங்கள் வாசிக்கிறேன். பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்;. அது: இதோ, மனுஷர் களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர் களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர் களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்து போயின என்று விளம்பினது. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர் : இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும் அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவ தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். வெளி. 21: 1-7  நாம் மீண்டும் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் அணுகுகின்ற மணி நேரத்திற்கான அப்படிப்பட்ட வாக்குத்தத்தையும் உறுதியான பேச்சையும் அப்போஸ்தலனும் இயேசு தாமேயும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஓ கர்த்தாவே, இது வரப்போகிற ஓர் காரியமாயிருக்கிறபடியால், நாங்கள் அதை சரியான விதத்தில் அணுக தெரிந்துகொள்ளும்படி உம்முடைய வழி நடத்துதலைக் கொடும், வசனங்கள் நிச்சயமாக நிறைவேற வேண்டும்! அது அப்படியே ஆகட்டும். இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நாங்கள் ஆராயும்போது உம்முடைய இரக்கத்திற்காக மீண்டும் வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே, எங்களோடு கூட இருந்து இதை வெளிப்படுத்திக் காண்பியும், இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். இப்பொழுது, இங்கு மேடையில் உள்ள விளக்கை மட்டும் தவிர்த்து மத்திய கூடத்தின் விளக்குகளை அவர்கள் அணைத்து விடக்கூடுமானால் நலமாயிருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் மின்சாரம் குறைக்கப்படுமானால், ஒரு இரவு நடந்தது போல) மின்கருவி எரிந்து போகுதலை தவிர்க்கலாம். அடித்தளமான மத்திய பாகத்தின் விளக்குகளை கட்டிடக் காப்பாளர் அணைத்துவிடக்கூடுமானால் அதற்காக நாங்கள் அவரை மெச்சிக்கொள்வோம். அப்படி செய்யப்படுமானால் நீங்கள் பார்க்கவும் எழுதவும் தாராளமான வெளிச்சம் உண்டாயிருக்குமென நான் எண்ணுகிறேன். நாம் அணுகுகின்ற பொருளை மீண்டும் நான் அறிவிக் கிறேன். அது பூமிக்குரிய மணவாட்டியும், பரலோகத்தின் மணவாளனுமான இவர்களின் வருங்கால வீடு என்பதாகும். இங்கு அதிக உஷ்ணமாயிருக்கிறபடியால், நான் ஒரு காரியத்தை செய்யப்போகிறேன் (சகோ. பிரான்ஹாம் தன்னுடைய மேற்சட்டையை கழற்றுகிறார்). இவ்விதமாக நான் செய்வதை என் மனைவி விரும்பமாட்டாள். ஆனால் இங்கு மிகவும் உஷ்ணமாயுள்ளது. பாருங்கள், அங்கே இவ்விடத்தில் காற்றுள்ளது. இருந்தாலும் அது வரமுடியாதவாறு ஒரு சிறிய மறைவிடத்தினால் தடை செய்யப்படுகிறது. ஏழு சபையின் காலங்கள், ஏழு முத்திரைகள் என்பனவற்றைப் பற்றி கடந்த நாட்களில் நாம் ஆராய்ந்தோம். சகோ. வேயிலும், மற்றோர்களும் அவைகள் புத்தக வடிவில் வருவதற்காக உண்மையுள்ளவர்களாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இரகசிய காரியங்கள் நாம் வாழ்கின்ற மணிநேரத்தில் நிறைவேறுகிறதை கண்டு நிலைமையைப் புரிந்து கொண்ட பின்பு, என்ன நடந்தது என்றும், எது நிறைவேறுவ தற்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்றும், என்ன பேசப்பட்டது என்றும் யாராகிலும் உண்மையான அறிவுடன் அமர்ந்து ஆராய விரும்பாமற்போனால் அதைக் குறித்து என்ன சொல்வது என்று நான் யோசிக்கிறேன். ஆனால் தேவன் எதை சொன்னாரோ அதை அவர் துல்லியமாக செய்வார். அவர் அதை அப்படியே சரியாக செய்தார். பாருங்கள் . கர்த்தராகிய இயேசு எந்த நேரத்தில் தோன்றுவார் என்பதை அறியாமலிருக்கிறபடியால் இந்த பொருளைக் குறித்து பேசுவது நலமாயிருக்கும் என்றும், பரிசுத்த ஆவிக்கும் இது பிரியமானதாயிருக்கும் என்று நான் யோசித்தேன். அது மட்டுமல்ல, இக்காரியத்தைக் குறித்து எல்லா காரியங்களையும் சொல்வதற்கு போதுமான நேரமில்லாதபடியினால் திரும்பவும் வந்து இரண்டு மூன்று விசை இதை குறித்தே பேசலாம் என்றும் நினைத்தேன். இதை வெளிப்படையாக நாம் எடுத்து சொல்ல முடியாது. ஏனெனில் ஒரு பொருளைக் குறித்து தொடும்போது அது யாருக்காகிலும் சற்று இடறலாய் காணப் படலாம். ஆகவே, பின்பு திரும்பவும் வந்து வேறொரு பொருளைக் குறித்து பேசி, கர்த்தருக்குச் சித்தமானால் கர்த்தரின் வருகைக்கும், எக்காளங்களுக்கும் இடையேயுள்ள வெளிப்படுத்தின விசேஷம் 12ம் அதிகாரத்தைக் குறித்து பேசலாம் என்றும் நினைத்தேன். பின்பு சாத்தான் யார், அவன் என்ன செய்தான், அவன் எங்கிருந்து வந்தான், அவனுடைய நோக்கம், மகத்தான அவனுடைய அழகு எவ்விதம் அவன் விழக்காரணமாயிருந்தது என்பவைகள் பற்றியும் காண்பிப்பதற்கு முயற்சிக்கலாம். சர்ப்பத்தின் வித்தைக் குறித்து சரியாக புரிந்து கொள்ள முடியாத எந்த ஒரு மனிதனைக் குறித்தும் நான் யோசிக்கிறேன். முற்றிலும் பொதுவான புரிந்து கொள்ளுதலினால் அதைக் குறித்து பார்க்க விரும்புகிற யாராயிருந்தாலும் அவருக்கு நான் சவால் விடுகிறேன் - ஒரு குழந்தை கூட அதை புரிந்துக் கொள்ளக் கூடும். பாருங்கள். அதைக் குறித்து பின் பார்ப்போம். II பேதுரு 3ம் அதிகாரத்தையும் வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தையும் நான் ஒப்பிட்டு வாசித்ததன் நோக்கம் என்னெவன்றால் அவை இரண்டும் ஒரே பொருளைப் பற்றியே பேசுகிறது என்று நாம் அறிந்துக் கொள்கிறோம். ஆனால் பேதுரு எழுதினது போல் யேவான் இதை ஒருபோதும் எழுதவில்லை, பாருங்கள்? இந்த மணவாட்டியின் மகத்தான வீடு இந்த பூமியில் தான் ஸ்தாபிக்கப்படப்போகிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தின் அப்போஸ்தலன் அல்லது தீர்க்கதரிசியான யோவான், "நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்” என்ற காரியம் "சர்வ நாசம்” (annihilation) ஒன்று வர இருக்கிறது என்பதை போல் சொல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய செய்திகளை நான் எப்பொழுதும் ஜெபத்தினாலேயே பெற்றுக்கொள்கிறேன். நான் ஜெபத்தில் அமர்ந்திருக்கும் போது ஏதோ ஒன்று எனக்கு வெளிப்படுகிறது. அது சரிதானா என்பதை பார்ப்பதற்கு அதன் பேரிலே நான் ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கும் போது, அதனிடமாக இன்னும் நெருக்கமாக செல்வதை உணருவேன். சில சமயங்களில் அது ஒரு தரிசனமாக வரும்வரை நான் காத்திருப்பேன். அவ்விதமாய் அது வர ஆரம்பிக்கும்போது அது தேவனிடத்தினின்று வருகிறதென்று திருப்தியடைந்து பின்பு வசனத்திற்குள்ளாகச் செயல்வேன். ஒவ்வொரு ஆவிக்குரிய காரியமும் நடைபெற்றதற்கு அதுவே உறுதிபாடு, பாருங்கள். ஏனெனில் வேதாகமானது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழு வெளிப்பாடாயிருக்கிறது. வார்த்தை அவருடைய சரீரமாயிருக்கிறது. வசனத்தின் ஒரு பாகத்தை நான் பார்த்து அது எனக்கு சரியாக தோன்றவில்லையானால் நான் அதிசயப்பட்டு நான் திரும்பவுமாக ஜெபத்தில் செல்வேன். அது மறுபடியும் சம்பவிக்கும், பின்பு என்னுடைய வசனத்தை நான் ஆராய ஆரம்பிப்பேன். நம்முடைய வேதாகமானது ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வார்த்தைகள் அநேக சமயங்களில் மாறுகிறதாயிருக்கிறது. உதாரணமாக யோவான் 14ம் அதிகாரத்தில், "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு" என்று எழுதப்பட்டுள்ளது (ஆங்கிலத்தில் "mansions" என்று குறிப்பிடப்பட்டுள்ளது). ஒரு வாசஸ்தலம் என்றால் வீடு என்று பொருள்படும்! ஆகவே எபிரேய , அல்லது கிரேக்க (முதல் மொழிப்பெயர்ப்பு) மூல மொழிப்பெயர்ப்பில் இதே வார்த்தையை பார்க்கும்போது, அதில் ''In my Father's kingdom is many places" - அதாவது, "என்னுடைய பிதாவின் இராஜ்ஜியத்தில் அநேக இடங்கள் உண்டு' என்று காணப்படுகின்றது. நல்லது. யாக்கோபு அரசனுக்காக மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பாளர்கள் வாழ்ந்த நாளில் 'இராஜ்ஜியம்' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் "ஒரு வீடு" எனவும், அரசன் தன் குடிமக்களால் 'பிதா' என்றும் அழைக்கப்பட்டபடியால், மொழிபெயர்ப்பாளர் "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு' என்ற விதமாய் மொழி பெயர்த்து விட்டார். பாருங்கள், அத்தகைய வார்த்தைகளை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிருந்தது. அந்த விதமாகவே வசனமானது ஒருபோதும் தவறாததாய் சரியான முறையில் கொடுக்கப்பட்டது என்பதை இக்காலையில் இந்த பிரசங்க பீடத்திலிருந்து நான் அறிவிக்கிறேன். அந்த முறையாகத்தானே. 'சர்ப்பத்தின் வித்து' போன்ற அநேக காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. பாருங்கள்? "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு” என்ற காரியத்தை ஒரு மனிதன் அப்படியே படித்து அதைக் குறித்து நிதானித்து ஜெபிக்கவில்லை என்றால் அவன் முழுவதும் குழப்பத்திற்குள்ளாகி விடுவான். ஆனால் தொடர்ந்து ஜெபியுங்கள். அது தேவனிடத்தினின்று வருவதாயின், தேவன் அதை சரியாக்குகிறவராயிருக்கிறார். இங்கே, மாற்றம் வருவதைக் குறித்து யோவான் விவரிக்கிறார். ஆனால் அது எவ்விதம் வருகிறது என்பதை விவரிக்கவில்லை. ஆனால் பேதுருவோ அதை விவரிக்கிறார். யோவான், "பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன் ; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. "யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” என்று எழுதுகிறார். ஆனால் 2 பேதுருவில் அதையே நாம் பார்க்கும்போது அக்காரியம் எவ்விதம் நடக்க போகிறது (proCess) என்பதை பேதுரு விவரிக்கிறார். யோவான், "முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின்" என்று சொன்ன காரியம் “சர்வ நாசமாகிறது என்பது போல் காணப்படுகின்றது பாருங்கள்? அது எனக்கு விநோதமாக தென்பட்டதால் 'Pass away" "ஒழிந்து போயினர் என்ற வார்த்தையைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தேன். ஆனால் யோவானும், பேதுருவும் ஒரே காரியத்தைக் குறித்துப் பேசுகிறார்கள் என்பது தெளிவா யிருக்கிறது. . இப்பொழுது ஏசாயா 65: 17ல் (வசனத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்) ஏசாயா ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து பேசுகிறார் (தேவனுடைய ஜனங்களுக்கு ஆயிர வருட இளைப்பாறுதல்) முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, அங்கே அவர்கள் எவ்விதம் வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள் என்ற காரியத்தைக் குறித்து சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டு ஏசாயா 65ஐ நாம் சற்று படிப்போம். ஏசாயா 65 : 17லிருந்து தொடங்கி சில நிமிடங்கள் நாம் வாசிப்போம். "இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன். ஏசாயா என்னும் தீர்க்கதரிசி, தீர்க்கதரிசிகளில் ஒருவனாயிருந்து தன்னுடைய தீர்க்கதரிசனத்தில் முழு வேதாகமத்தையும் சரியாக எழுதியிருக்கிறார். அவர் சிருஷ்டிப்பில் ஆரம்பித்து, தன் புத்தகத்தில் மத்திய பாகத்தில் (ஏறத்தாழ 40ம் அதிகாரம்) யோவான் ஸ்நானனைக் குறித்து பேசி (புதிய ஏற்பாடு) பின்பு தன்னுடைய புத்தகத்தை ஆயிரம் வருட அரசாட்சியில் (வெளிப்படுத்தின விசேஷத்தில்) முடிக்கிறார். வேதாமகத்தில் 66 புத்தகங்கள் உள்ளன, ஏசாயாவின் புத்தகத்தில் 66 அதிகாரங்கள் உள்ளன. அவர் ஒரு முழு வர்த்தமானத்தை எழுதியிருக்கிறார். இங்கு 65ம் அதிகாரத்தில் இன்னும் ஒரு அதிகாரம் இருக்கின்ற நிலையில் ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து பேசுகிறார்! எவ்வளவு அழகாயிருக்கிறெதன்று பாருங்கள்! "... இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன் ; முந் தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை (pass away - கடந்து போகிற காரியம்) நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ எரு சலேமைக் களிகூரு தலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக் கிறேன். நான் எருசலேமின் மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின் மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப் படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப் படுவான். வீடுகளை கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும் (உன்னுடைய நிலம், உன்னுடைய குமாரன் அதை சுதந்தரித்தல் அல்லது உன்னுடைய உறவின்முறையார் சுதந்தரித்தல்) அவர்கள் நாட்டுகிறதும், வேறொரு வர் கனி புசிக்கிறது மாயிருப்பதில்லை (அவர்கள் தங்கள் சொந்த நடுதலை செய்து அங்கேயே இருப்பார்கள்; ஏனெனில் அவர்கள் நித்திய ஜீவனைப்பெற்றவர்கள்) ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும் நான் தெரிந்து கொண்ட வர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய அனுப விப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளை பெறுவதுமில்லை. அவர்களும், அவர்களோடே கூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள் .... (இவ்வசனத்தை சற்று பின்பு திரும்பவும் எடுக்கப் போகிறேன். கவனியுங்கள்) அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். ஒனாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு மித்து மேயும் சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும் புழுதி சர்ப்பத் துக்கு இரையாகும் என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” ஏசாயா 65:17 - 25  தீர்க்கதரிசிகளும், ஞானிகளும், போதகர்களும் பழங் காலத்திலே என்னே ஒரு வாக்குத்தத்தமாய் இந்த மகிமையான நாள் வருவதை பார்த்திருக்கிறார்கள்! இந்த மேற்கண்ட வசனங்களைப் பார்க்கும்போது, இந்த முழு பூமியென்னும் கிரகம் அழிந்து போய்விடப் போகிறது என்று யோசிக்கவும் அல்லது அவ்வாறு விசுவாசிக்கவும் ஒருவரை வழிநடத்துகிறதாயிருக்கிறது. ("நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்”) பாருங்கள்? ஆனால் நெருக்கமாக பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடு ஆராய்ந்தால் இதனுடைய சத்தியம் என்னவென்பதை நாம் பார்க்க முடியும், அத்தகைய காரியத்திற்குள்ளாகத்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். பூமியைச் சுற்றிலும் உள்ள பாவமும், வாயுமண்டலங்களும் மட்டுமே அழிந்து போகும், பாருங்கள். 'வானங்கள்' என்பது மேலேயுள்ள வாயுமண்டலங்களைக் குறிக்கிறதாயிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அது என்ன செய்கிறது? இந்த முட்செடிகள், வியாதி, மரணம், அரசியல், பாவமனிதன், பாவமுள்ள பெண், பொல்லாத ஆவிகள் ஆகியஇவைகளெல்லாம் ஒழிந்து அழிந்து போம். அந்த வழியாகத் தான் அது நடைபெற வேண்டும். ஏனெனில் நாம் இந்த பூமியில்தான் வாழப்போகிறோம். வேதத்தைக் கொண்டு நாம் அதை நிரூபிக்கலாம். கவனியுங்கள், முட்செடிகள், கிருமிகள் எல்லா வியாதிகள் முற்றிலுமாக நீக்கப்படும். இப்பொழுது நிலைத்திருக்கிற மனிதனால் உண்டாக்கப்பட்ட முறைமைகள், அரசியல்கள், பாவம், உலகத்தினைப் பாழாக்கின எல்லாவிதமான பொல்லாத ஆவிகள், நமக்கு மேலேயுள்ள ஆகாயத்தை பாழாக்கின் பொல்லாத ஆவிகள் யாவும் நீக்கப்படும். இப்பொழுது ஆழமாகவும் விரிவாகவும் இக்காரியங்களுக்குள் நாம் செல்லப் போகிறோம். வாயுமண்டலங்களில் நிலைத்திருக்கிறவைகள் இக்காரியங்களை இப்பூமியானது பிடித்துக் கொண்டிருக்கிறது. பூமியானது அந்த நோக்கத்திற்காக உண்டாக்கப்படவில்லை. பாவம்தான் அது. இந்நிலைக்கு வர காரணமாயிற்று. சிருஷ்டி கரால் அவை உண்டாக்கப்பட்டன. நாம் வாழ்கின்ற இந்த சரீரங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டு இப்பூமியில் வைக்கப்பட்டன. ஏனெனில் நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டிருக்கிறோம். தேவன் சிருஷ்டிக்கும்போது இவை எல்லாம் இப்பூமியில் வைக்கப்பட்டிருந்தன. நாம் அவருக்குள் இருந்து அவருடைய சிந்தனையாயிருந்தோம், மகத்தான நித்திய ஜீவனானவருக்குள் சிந்தனை இருந்தது அச்சிந்தனைகளே அவரில் தன்மைகளா யிருந்தது. இவை நிகழ்வதற்கு பாவமே காரணமாயிருந்தது. இந்தக் காலத்தின் மூலம் தேவன் தம்முடைய முக்கிய பொருள்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். சாத்தானுடைய எல்லா பொல்லாத சக்திகளும் இன்னுமாக இருக்கிறபடியால் இவைகளெல்லாம் சம்பவிக்க காரணமா யிருக்கிறது. கவனியுங்கள், அதன் காரணமாகவே இப்பூமி அசுத்தமாயிருக்கிறது. சாத்தான் தானே இந்த பூமியையும் வாயுமண்டலங்களையும் ஆளுகை செய்கிறபடியால் முரட்டாட்டங் கள், இழிவானவைகள், இரத்தம் சிந்துதல், யுத்தம், அரசியல், பாவம், விபச்சாரம் போன்ற எல்லாவிதமான அசுத்தங்களும் நடந்து கொண்டிருக்கினறன. 77. "வாயுமண்டலங்கள்” என்றா கூறுகிறீர்?" ஆம், ஐயா! தேவனுக்கு முன்பாக நம்மை குற்றப்படுத்தும் பிசாசுகளே இப்பொழுது இருக்கிற பூமியையும் வானத்தையும் (வாயுமண்டலம்) பாழக்கியிருக்கின்றன. "அவர்கள் அதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள்" என்று குறை கூறுபவன் விரலை நீட்டி குற்றம் சுமத்தும் போது இயேசு தாமே நமக்காக பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். இரத்தமானது இன்னுமாய் மூடுகிறதாயிருக்கிறது! தாம் முன்குறித்து தெரிந்து கொண்டவர்களை மீட்பதற்காக அவர் வந்தார். இங்கே அப்போஸ்தலனாகிய பேதுரு இரண்டாம் நிரூபம் 3ம் அதிகாரம் 5ம், 6ம் வசனங்களில் பூமியின் மூன்று நிலைகளைப் பற்றி குறிப்பிடுகிறார் அதை எவ்விதம் கொண்டு வருகிறார் என்பதை கவனியுங்கள். ஜலத்தினால் நிலைக் கொண்டிருக்கிற இப்பூமி - அதாவது ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த உலகம் - என்று குறிப்பிடுகிறார் (6ம் வசனம் - தமிழாக்கியோன்). இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகம் (உலகம் என்று அழைக்கப்படுகிறது). ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலை கொண்டிருக்கிற உலகமும் (ஆதி. 1:1), இப்பொழுது (இப்பொழுது இருக்கிற உலகம்), பின்பு வர இருக்கிற புதிய உலகத்தையும் என்று வேறொரு உலகத்தையும் மீண்டும் குறிப்பிடுகிறார் (II பேதுரு 3 : 13) - தமிழாக்கியோன்) மூன்று உலகங்கள் அல்லது உலகத்தின் மூன்று நிலைகள். தேவன் தம்முடைய மீட்பின் திட்டத்தை எவ்வளவு எளிமையாகச் செய்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். ஓ, நான் அதை பார்த்த போது, அது என் ஆத்துமாவை உணர்ச்சிவசப்படச் செய்தது! இப்பொழுது, நம் சொந்த கண்களால் எதைக் காண்கிறோமோ அவ்வாறே - இந்த உலகத்தையும் மீட்டுக்கொள்ள தேவன் செய்த காரியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்! அதே விதமான திட்டத்தைத் தான் தம் ஜனத்தை மீட்கவும் உபயோகித்தார்! மாறாத தேவன் தம்முடைய எந்த திட்டங்களிலும் மாறுவதில்லை. என்னே மகிமையான காரியம்! இவ்வுலகத்தின் மூலமாக அவர் வருவதற்காக, இவ்வுல கத்தை மூன்று நிலைகளின் வழியாக நடத்தினது போல நமக்குள்ளாக அவர் வாசம் செய்யத்தக்கதாக மூன்று கிருபையின் நிலைகளை வைத்து நம்மை அவருக்குள் எவ்வளவாய் வழிநடத்தியிருக்கிறார். இவ்வுலகம் மூன்று வித்தியாச சுத்திகரிப்பின் நிலைகளுக்குள்ளாக சென்ற பின்பு தேவன் உலகத்தில் வருவது போல கிருபையின் மூன்று நிலைகளின் மூலமாக அவர் நமக்குள் வருகிறார். இதை நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குப் போதித்து இருக்கிறேன்; அதிலிருந்து நான் ஒருபோதும் மாறவில்லை. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது! மூன்று. ஏழு, பன்னிரண்டு என்ற எண்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். வேதாகமத்தின் எண்களை அதன் பரிபூரணப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் காரியம் குழப்பமாகிவிடும். இதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் தொடர்ந்து ஜெபியுங்கள். கவனியுங்கள், அது சரியாக பொருந்தும். தேவன் தம்முடைய மூன்றில் பரிபூரணமாயிருக்கிறார். பழைய உலகம் (ஜலப்பிரளயத்திற்கு முன்). இப்பொழுது திருக்கிற உலகம் , வரப் போகின்ற உலகம். எல்லாவற்றிலும் அவருடைய மீட்பின் திட்டம் சரியாக அவ்விதம் அமைந்துள்ளது. அதே முறையைதான் அவர் உபயோகிக்கிறார். ஏனெனில் "நான் கர்த்த ர், நான் மாறாதவர்!” (மல். 3 : 6) என்று கூறியிருக்கிறார். ஆகையால் குற்றமில்லாத ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் முதல் மனிதனை அவர் இரட்சித்திருப்பாரானால் அடுத்த மனிதனையும் அவ்வாறே அவர் இரட்சிக்க வேண்டும்; அது போலவே ஒவ்வொரு மனிதனையும் அதே வழியில் தான் இரட்சிக்கிறார். இயேசு. அப்போஸ்தலர், அல்லது தீர்க்கதரிசிகள் யார் காலத்திலாயினும் ஒரு மனிதனை அவர் எப்பொழுதாகிலும் சுகமாக்கியிருக்கக் கூடுமானால், அதே நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும்போது அவர் சுகமாக்குதலை திரும்பவும் செய்ய வேண்டியவராயிருக்கிறார்! அதுதான் சரி. மனிதன் மாறுகிறவன். • காலம், நேரம், சந்ததி எல்லாம் மாறுகிறவைகளாய் இருக்கின்றன. ஆனால் தேவனோ மாறாதவராய் இருக்கிறார்... பரிபூரணம்! வியாதியுள்ளவர்களுக்கு இக்காரியம் எத்தகைய நம்பிக்கையை ஊட்டுவதாயுள்ளது. எப்பொழுதாவது ஒரு மனிதனை அவர் சுகமாக்கியிருப் பாரானால், அதே நிபந்தனைகள் சரியாக சந்திக்கப்படும்போது அவர் மீண்டும் அதே காரியத்தை அதே அடிப்படையில் செய்ய வேண்டியவராயிருக்கிறார். எப்பொழுதாகிலும் ஒரு மனிதனை அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பி இருப்பாரானால், அவர் முதலில் செய்த அதே அடிப்படையில் திரும்பவும் செய்ய வேண்டியவராயிருக்கிறார். எப்பொழுதாகிலும் ஒரு மனிதனை மரணத்தினின்று எழுப்பி இருப்பாரென்றால் இரண்டாந்தரமும் அல்லது வேறு ஒவ்வொரு சமயத்திலும் அதே அடிப்படையில், திரும்பவும் அதை நிகழ்த்த வேண்டிய வராயிருக்கிறார். அவர் மாறாதவராயிருக்கிறார். ஓ. எத்தகைய நம்பிக்கையை அது எனக்கு தருவ தாயுள்ளது! அது என்ன? ஒரு கூட்ட மனிதர்கள் கூடி வந்து உண்டாக்கிய மனித கோட்பாடல்லாமல் இது மாறாத அவருடைய வார்த்தையாயிருக்கிறது! “இது உண்மையா?” என்று நீங்கள் கேட்கலாம். "தேவனே சத்தியபரர் என்றும். எந்த மனிதனும் பொய்யன்" (ரோமர் 3 : 4) என்றும், "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகேளா ஒழிந்து போவதில்லை" என்றும் அவர் கூறியிருக்கிறார். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் (ஊக்கு வித்தலினால்) அருளப்பட்டிருக்கிறது; அவைகள் உபதேசத்துக்கும் கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருந்தலுக்கும், நீதியைப் படிப்பிக்கு தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது (2 தீமோத்தேயு 3 : 16-17). எல்லா வேத வாக்கியங்களும் நிறைவேறும் என்பதை நினைவுகூருங்கள். தேவன் எவ்விதமாய் இவற்றை வெளிப்படையாக்கி யிருக்கிறார் என்பதை கவனியுங்கள். இதை நான் பார்க்கும்போது என் சிறு பிராயத்திலிருந்து (கிறிஸ்து முதன் முறையாக என்னோடு உரவாடினதிலிருந்து) இன்று வரை அந்த கிருபை யின் நிலைகள் என்னவென்று நான் படிப்பிக்கப்பட்டிருக்கிறேன். ஆகவே தேவனிடத்தினின்று வந்த மகத்துவமுள்ள நிரூபிக்கப்பட்ட இன்பமான ஆசீர்வாதமாய் இது இல்லாதிருக்குமா? இது சத்தியந்தானா என்பதை இப்பொழுது கவனியுங்கள். முதலாவது படி தேவனிடமாய் மனந்திரும்புகின்ற காரியம், பின்பு அதை தொடர்ந்து தண்ணீர் ஞானஸ்நானம். "மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுதல்” பாருங்கள்! பழைய பாவங்கள் மன்னிக்கப்படுதலை அல்லது உண்மையான மனநதிரும்புதலை ஞானஸ்நானமானது காட்டுவதாயுள்ளது. வருங்காலத்தின் பாவத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை: எனெனில், "மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகின்ற காரியம், பழைய பாவங்கள் எடுக்கப்படுதலையே குறிக்கிறதாயிருக்கிறது. அதாவது உன் பழைய பாவங்கள் அழிக்கப்படுகிறது. ஆனால் வருங்காலத்தின் பாவங்களும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆதாம் செய்த பாவத்திற்காய் நீ மனந்திரும்ப முடியாது, நீ செய்த பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுக் கொள்கிறாய். ஆனால் பழைய சுபாவமானது இன்னுமாக அங்கிருக்கிறது. இந்த கரும்பலகையில் ஒரு நிமிஷம் இதை நான் வரையட்டும் (சகோ. பிரான்ஹாம் உதாரணப்படுத்துவதற்காக கரும்பலகை யினிடத்தில் செல்கிறார் - ஆசி). இப்பொழுது கவனியுங்கள், இங்கே மனிதனின் இருதயம் வரையப்பட்டுள்ளது. நான் ஒரு சிறந்த ஓவியனல்ல. இந்த இருதயத்திலே சர்ப்பமானது இருக்கிறது. அதுதான் பாவம். இங்கே இம்மனிதனின் ஜீவன் உள்ளது. இப்பக்கமாக பரிசுத்த ஆவியானவராகிய புறா உள்ளது. இங்கேயுள்ள பாவமென்னும் சர்ப்பமே, வெறுப்பு, பொறாமை, பகை இவைகளுக்கு காரணமாயிருக்கிறான். நல்லது. இங்குள்ள புறாவோ அன்பு, சந்தோஷம், பொறுமை இவைகளை இங்கு செய்கிறதாயிருக்கிறது. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது இங்கிருக்கும் ஜென்ம சுபாவமான சர்ப்பத்தின் காரணமாக நீ செய்த பழைய பாவங்கள் எடுக்கப்பட்டு போகின்றன. ஆனால் இதை செய்ய காரணமாயிருந்த காரியம் இன்னுமாக அங்கேயே தான் இருக்கின்றது. அதுதான் பழைய வேராகிய பொல்லாங்கு நீங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்போது அவர் உங்கள் பாவங்களை மன்னிக்கிறவராயிருக்கிறார். பின்பு இரண்டாவதாக சம்பவிப்பது பரிசுத்தமாகுதலாகும், இது பரிசுத்தமாக்குதலுக்கும் சரியானபடி யோசனை செய்வதற்கும் உங்கள் மனதை ஆயத்தப்படுத்துகிறது. பரிசுத்தமாக்குதல் (samctification என்னும் கிரேக்க வார்த்தை ) என்கிற பதம் சுத்தப்படுத்தி ஊழியத்திற்கென்று தனியே வைக்கப்படுதல் என்ற கூட்டு அர்த்தமுடையதாயிருக்கிறது. அடுத்தபடியாக வருவது பரிசுத்த ஆவியாகிய அக்கினி. தேவன் தாமே நமக்குள் வாழ்ந்து தேவ அக்கினியினால் நம்முடைய இருதயத்தை பாவத்தினின்று சுத்திகரித்து பரிசுத்த ஆவியை நமக்குள் ஊற்றுகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மிலே வாசம் செய்வதால் அதே ஜீவனை நாம் கொண்டு வருகிறவர்களாயிருக்கிறோம். கவனியுங்கள், இயற்கையில் ஒரு பெண்மணி தன்னுடைய பிரசவத்தின் (இயற்கை ஆவிக்குரியதற்கு ஒப்பனையாயுள்ளது) மூலம் ஒரு குழந்தையை பிறப்பிக்கும்போது முதலாவது அங்கு வெளிப்படும் காரியம் தண்ணீர், பின்பு இரத்தம், அதன் பின்பு தான் ஜீவன். வெளி வந்த குழந்தையை எடுத்து ஒரு சிறு அடி கொடுக்கும்போது அது சத்தமிடுகிறதாயிருக்கிறது. அது என்ன? தண்ணீர், இரத்தம் , ஆவி. ஒரு குழந்தை தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிறக்கும் போதும் தண்ணீர். இரத்தம், ஆவி என்ற அதே விதமான வழியிலேயே வருகிறதாய் இருக்கிறது. இந்த மூன்றாம் நிலையான பரிசுத்தமாக்குதலை கவனியுங்கள். இது பரிசுத்தத்திற்கென்று மனதையும் இருதயத்தையும் சுத்திகரிக்கின்றதாயிருக்கிறது. ஒரு மனிதன் மனந்திரும்பும்போது ஒரு வேளை அவனுடைய பழைய வாழ்க்கை துன்மார்க்கமாயிருந்தது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு துன்மார்க்க ஸ்திரீயைப் பார்க்கும்போதும் அவன் சோதனைக்குட்படுகின்றான். அதே விதமாக ஒரு மனிதனின் பழைய வாழ்க்கை குடிகாரனாக இருந்திருக்கலாம். ஒவ்வொரு சமயமும் மதுவின் வாசனையை அவன் முகரும்போதெல்லாம் அவன் சோதனைக்குட்படுகின்றான். அது இன்னுமாக அங்கேயேயுள்ளது பாருங்கள். ஆனால், அவன் பரிசுத்தமாகும்பொழுதே பாவம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அவனிலிருந்து அகற்றி விடுகிறது. அவன் இன்னுமாக சோதனைக்குட்படுகிறவனாயிருந்தாலும், பாவம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவனிலிருந்து அகற்றப்படுகிறது. பாருங்கள். இருந்தாலும் அவன் இன்னுமாக சரியாக இல்லை. பின்பு அவன் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ் நானம் பெறும்போது அது அவனை சுத்திகரித்து அக்கினியினால் சுட்டெரித்து தேவனுடைய ஊழியத்தில் வைக்கிறது. ஆனால் பரிசுத்தமாக்குதல் (இரண்டாம் நிலை) ஊழியத்திற்கென்று அவனை ஆயத்தப்படுத்துகின்றதாயிருக்கிறது. அது எவ்விதமாய் சரியாக நிகழ்கிறது என்பதை பாருங்கள். அதே விதமாக மார்டின் லூத்தரின் மூலமாக நீதிமானாகுதலும், ஜான் வெஸ்லியின் மூலம் பரிசுத்தமாக்குதலையும், பெந்தேகொஸ்தேயினரால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் ஆகிய செய்திகள் வந்தன. அதன் காரணமாகவே இனியொரு காலமும் இதற்கு பின்பு வரமுடியாது பாருங்கள். நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். மூன்று நிலைகள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இருதயத்தை சுத்திகரிக்கிறதாயிருக்கிறது. எவ்வளவு தெளிவாயிருக்கிறது! இப்போது நாம் வாழப் போகின்ற வருங்கால இடத்தையும் அதே முறையில் தான் அவர் சுத்திகரிக்கிறார். மனித இருதயத்தில் பரிசுத்த ஆவியாகிய தேவ குமாரன் தாமே வாழ்வதற்காக அவர் சபையை நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் நிரப்புதல் என்ற நிலைகள் மூலமாக செல்வதற்கு அழைத்தார். அதே விதமாக அவர் இதற்குள் வருவதற்காக (வருங்கால வீடாகிய இப்பூமி) அந்நிலைகள் மூலமாக அவர் வரவேண்டியதாயுள்ளது (மூன்று நிலைகள்). இரட்சிப்பிற்கு அவர் வகுத்த அதே திட்டத்தின் மூலமாகவே இந்த உலகத்திற்கும் (பூமி - மணவாட்ட வாழப் போகிறதாகிய இடத்திற்கும்) செய் திருக்கிறார். ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த உலகத்தை கவனியுங்கள். ஏதேனில் விழுந்து போன உலகத்தை மீண்டுமாக மீட்கப் போகிறார் என்ற பாதையில் தேவன் வருவதை காண்பிப்பதற்காக நீதிமானாக்குதல் என்ற முறைமையின்படி நோவாவின் காலத்திலிருந்த மணவாட்டி மனந்திரும்பின் பின், அப்பொழு திருந்த பூமியை ஞானஸ்நானத்தின் முறைமையின்படி ஜலத்தினால் மூடினார். பின்பு அதே பூமியின் மேல் தானே கிறிஸ்து வந்து தம்முடைய இரத்தத்தை அதின் மேல் சிந்தி பரிசுத்தப்படுத்தி அதை உரிமை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். இப்பொழுது அத்தகைய பூமியின் மேல் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள். இரத்தத்தின் மூலம் கிரயம் செலுத்தப்பட்டு அவர் இவ்வுலகத்தை பெற்றுக் கொள்ளாதபடிக்கு பிசாசானவன் அவரை மலையின் மேல் கொண்டு சென்று தேவனுடைய திட்டத்தை உடைக்க எவ்வளவாய் முயற்சித்தான் என்பதை பாருங்க ள்? (மத். 4 : 8 - 9)  ஆபிரகாம் செய்த காரியத்தை நீங்கள் கவனித்தீர்களா? எப்பெரோன் நிலத்தை இலவசமாக கொடுக்க முயற்சித்த போது ஆபிரகாம் அதை 400 சேக்கல் நிறை வெள்ளியால் ஜனங்களின் சாட்சியாக, "இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகா முக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது" (ஆதி 23 : 11,13,16,18, 20). அவன் அந்த நிலத்தை கிரயம் செலுத்தி வாங்கினான் பாருங்கள். சாத்தானுக்கு இப்பொழுது சொந்தமாயிருக்கிற இப்பூமியை இயேசுவுக்கு வெகுமதியாக கொடுக்க முயற்சித்தான். ஆனால் அவரோ அதை அவ்விதம் வாங்கவில்லை, பாருங்கள். ஆகையால் சாத்தானுக்கு இன்னுமாக அதன் பேரில் உரிமையுண்டாயிருக்கிறது. ஆனால் அது கிரயம் செலுத்தப்பட்டு வாங்கப்பட வேண்டியதாயுள்ளது! ஆமென்! அவர் வார்த்தையின் பரிபூரணமாக இருந்தபடியால் அவரை அக்காரியத்தில் யாரும் ஏமாற்ற முடியாது. இப்பொழுது இப்பூமி அக்கினியின் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கிறது. என்ன நிகழ்ந்தது? மனந்திரும்பு தலுக்கென்றும், பாவமன்னிப்பு கென்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை அறிவிக்கவும், பரிசுத்தப்படுத்தவும், பின்பு தேவ அக்கினியினால் எல்லா அசுத்தத்தையும் எரித்து மனித இருதயத்தில் வாசம் செய்வதற்காகவும் கிறிஸ்துவானவர் இவ்வுலகத்திற்கு வந்து சபையை அழைத்தார். இந்த மீட்கப்பட்ட மனிதனுக்காக இப்பூமியும் மீட்கப்பட அவர் அதே முறையையே கடைப்பிடிக்கிறார். ஜலப்பிரள யத்தினால் அந்த உலகத்தை அவர் அழித்தபின்பு இப்பூமியை தண்ணீரினால் ஞானஸ்நானம் செய்வித்தார். இப்பூமியை பரிசுத்தப் படுத்துவதற்காகவும் அதன் பேரில் உரிமை கேட்கப்படுவ தற்காகவும் தம் இரத்தத்தை அதன் மீது சிந்தினார். ஏனெனில் அது அவருடையதாயிருக்கிறது. "நான் அதை உமக்கு தருவேன்” என்று சாத்தான் சொல்ல முயற்சிக்க அவரோ, "இல்லை சாத்தானே, நான் அதை கிரயம் செலுத்தி வாங்குவேன்!” என்றார். இது ஒரு சாட்சியாயிருப்பதற்காக அவர் உயர்த்தப்பட்டு, அதை வாங்கினார். ஆனால் இப்பொழுதோ அது பரிசுத்த அக்கினி ஞானஸ் நானத்தினூடே செல்ல வேண்டியதாயுள்ளது. தேவனிடத்தி லிருந்து வரும் பரிசுத்த அக்கினியானது இந்த பூமியையும் அதை சுற்றியுள்ள வாயுமண்டலத்தையும் சுத்திகரிக்க வேண்டிய தாயுள்ளது. அப்பொழுதுதான் மீட்கப்பட்டவர்கள் சமாதானத் தோடே அதின் மேல் வாழத்தக்கதாக அது வாங்கப்பட்ட தெனப்படும். கவனியுங்கள், அக்கினியின் ஞானஸ்நானமானது இப்பூமியை பாவம், வியாதி, வியாதியுண்டாக்கும் கிருமிகள், பாவிகள், பிசாசும் அவனுடைய கூட்டமும் ஆகிய இவைகளினின்று சுத்திகரிக்கவிருக்கிறது. அவன் அக்கினி கடலில் தள்ளப்படவிருக்கிறான். பரேலாகத்திலிருந்து தேவனுடைய பரிசுத்த அக்கினி இறங்கி வந்து இதை எரித்து சுத்திகரித்து தேவன் வாழத்தக்கதாக இதை ஆயத்தம் செய்யக் காத்திருக்கிறது. ஏனெனில் வருகின்ற புதிய உலகத்தில் தேவன் தாமே வாழப் 'போகின்றார். "தேவன் மனித இருதயத்தில் வாழப் போகிறாரா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆம் அவரும் மணவாட்டியும் ஒன்றாயிருந்து, அவர்களுடைய புதிய உலகத்தின் வீட்டிற்குச் செல்வார்கள். உலகத்தையும் அதன் மேல் வாழ இருக்கும் நபர்களையும் மீட்க அதே மீட்பின் திட்டம் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. இவ்விதமாகத்தானே இருதயமும் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயுள்ளது. தேவன் தாமே பரிசுத்த ஆவி (கிறிஸ்துவானவர்) என்னும் நபராக மனித இருதயத்திற்கு வந்து வாழ்வதற்கு முன்பு. அது முதலாவதாக மனந்திரும்பி, அது யாருக்கு சொந்தமானது என்பதை காண்பிப்பதற்காக அவருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டிய தாயுள்ளது. பின்பு அது இயேசுவின் இரத்தத்தினால் சுத்தி கரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு தேவனிடத்திலிருந்து பரிசுத்த அக்கினி வந்து உலகத்தின் தன்மையையும், பாவம் செய்ய வேண்டும் என்ற ஆவலையும் சுட்டெரிக்கிறது. ஆகவே ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், மனப்பூர்வமாக ஒருவன் பாவம் செய்வானென்றால் (எபி. 6: 4-6). ஆனால், தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான் (1 யோ. 5 :18) என்று மீண்டும் வேதம் கூறுகிறது. பாவம் செய்வதற்கு அவனால் முடியாது. ஒரே சமயத்தில் அவன் எப்படி பாவியாகவும் மீட்கப்பட்டவனாகவும் இருக்க முடியும்? அடமானக்கடைக்குள் உள்ளேயும் வெளியேயும் எப்படி ஒரே சமயத்தில் இருக்க முடியும்? ஓ, அவர் தம்முடைய இரத்தத் தினால் நம்மை மீட்டார்; நமக்குள் வாசம் செய்யத்தக்கதாக அவருடைய ஆவியினால் அவருடைய சபையாகிய நம்மை சுத்திகரித்தார் (நான் ஸ்தாபன சபையை குறிப்பிடவில்லை). நெருக்கமாக கவனியுங்கள் . ஜலப்பிரளயத்தின் மனந்திரும்புதல் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் கொண்டு வந்தது. பின்பு அதன் மேல் உரிமை கொண்டாடுவதற்கு கிறிஸ்து வந்து தம் இரத்தத்தை சிந்தி அதை சுத்திகரித்தார். அதன் பின்பு அழிவானது இப்பொழுதிருக்கிற உலகத்தின் மேல் வருகிறதாயிருக்கிறது. நமக்கு மேலேயுள்ள வாய மண்டலங் களிலுள்ள எல்லா பாவமும் ... வான மண்டலத்தின் அரசன் பிசாசுதரன். தேவனுடைய ஆசீர்வாதங்கள் வருவதை அவன்தான் தடை செய்கிறவனாயிருக்கிறான். வானமண்டலத்திலிருந்து தான் இடிகளும், மின்னல்களும், பனிக்கட்டிகளும், பலவிதமான சூராவளிக்காற்றுகளும் சாத்தானின் மூலம் பூமியை தாக்குகின்றன. அவன் தான் வானமண்டலத்தின் அரசனாயிருக்கிறான். கிரயம் செலுத்தப்பட்டு வாங்கா வண்ணம் அதை சாத்தான் இயேசுவிற்கு கொடுக்க எவ்விதம் முயற்சித்தான் என்பதை சற்று நேரத்திற்கு முன்பு நான் கூறினேன். சாத்தானுக்கு இன்னும் இதன்மேல் உரிமையுண்டு. ஏனெனில் அது காதில் அடையாளம் பொறிக்கப்பட்டதாயுள்ளது (பாருங்கள்) ஆனால் இயேசு தமது இரத்தத்தைச் சிந்தி அதை வாங்கி உண்மையான உரிமையாளர்களிடம் அதை கொண்டு வருகிறார்! அந்த விதமாகத்தான் சபையான நம்மை தம்முடைய இரத்தத் தினால் கொண்டார். இந்த அக்கினி ஞானஸ்நானமானது. எல்லா கிருமிகள், எல்லா வியாதிகள், எல்லா ஆவிக்குரிய காரியங்களும் (நம்மால் ஏற்பட்டவைகளும் கூட அதுவும் அவ்வழியாகத்தான் நடை பெறுகிறது) ஆகிய இவைகளினின்று சுத்திகரித்து வருகிறதான மகத்தான புதிய பூமியில் தேவன் வாழத்தக்கதாக அதை ஆயத்தம் செய்கிறது. தம்முடைய ஜனங்களை மீட்டபடியே பூமியையும் அவர் மீட்கிறார். எப்பொழுதும் தம் திட்டத்தில் மாறாத தேவன் எல்லாவற்றையும் அவ்விதமாகவே செய்கிறார். நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியபடியே எல்லா காலங்களிலும் தேவன் மாறாதவராயிருக்கிறார்! எல்லா வழிகளிலும் அவர் மாறாதவர் என்பதை தெரியப்படுத்துகிறார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய நோவாவின் மூலம் ஜலப்பிரளயத்திற்கு முன் இருந்த உலகத்திற்கு தம்முடைய முதல் செய்தியை அவர் தெரியப்படுத்தினார். இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கும் அருமையான ஓர் சகோதரன் நேற்றைய தினம் என்னிடம், "சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்னிடம் சொல்லிய ஓர் காரியம் எப்பொழுதும் என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது” என்றார். அதற்கு நான். "அது என்ன என் சகோதரனே?" என்றேன். அதற்கு அவர், "நீங்கள் கூறினது இதுதான்; வருகையின் போது சிறுபான்மையோர், அதாவது, ஒரு சிறியக் கூட்டம் மட்டுமே இரட்சிக்கப்படுவர் என்பதே” என்று கூறினார். “ஜீவனுக்குப் போகிற "வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத். 7:14) என்று இயேசு கூறியதை கூட நாங்கள் சம்பாஷித்தோம். இப்பொழுது கவனியுங்கள்: "நோவாவின் நாட்களில் எட்டு பேர் மட்டும் தண்ணீரினால் இரட்சிக்கப்பட்டது போல் வருகையிலும் நடக்கும்...” என்று வேதம் உரைக்கிறது. "சகோதரனே, நீங்கள் அதை....” என்றேன். அப்பொழுது அந்த சகோதரன் "எட்டு பேர் மட்டுமே என்று உரைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுகூருங்கள்" என்றார். அதற்கு நான், "நீங்கள் பாதி காட்சியைத்தான் பெற்றிருக்கிறீர்கள்” என்றேன். பாதுகாக்கப்பட்ட சிறு கூட்டத்திற்கு நோவா ஓர் உதாரணமாயிருந்தாலும், மறுரூபப்படும் கூட்டத்திற்கு நோவா உதாரணமல்ல. வெள்ளம் வருவதற்கு முன் பு எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்ற ஏனோக்கு என்னும் ஒரு மனிதனே அதற்கு உதாரணமாயிருக்கிறார். இக்காரியம் சபையானது உபத்திரவமோ அல்லது அதை போலொத்த எந்தக் காரியத்திற்குள்ளும் பிரவேசிப்பதில்லை என்பதை காட்டுகிறது! ஒரு மனிதனாகிய ஏனோக்கு மறுரூபப்பட்டார்! ஓ, சபை எனப்படும் அமைப்பு ஒரு வேளை எண்ணிக்கையில் அதிகமாயிருக்கலாம். ஆனால் மணவாட்டியோ ஒரு சிறு கூட்டமாயிருக்கப் போகிறாள் - எட்டு என்னும் எண்ணோடு ஒன்று என்ற எண்ணை ஒப்பிட்டுப் பாருங்கள். மணவாட்டி சபையானவள் சபையை விட எட்டு மடங்கு எண்ணிக்கையில் குறைவாயிருப்பாள். "நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?” என்று வேதம் கூறுகிறது (I பேதுரு 4 : 18) - காரியத்தை நலமாக செய்ய அறிந்தவர்கள் தொடர்ந்து சென்று அதை நிறைவேற்றுங்கள்; தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதை விட்டு விட்டாலும், கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக் கொண்டு, தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொண்டு ஸ்தாபனத்தில் சட்டங்களை பின்பற்றுபவர்கள் எங்கே நிற்பார்கள்? இரட்சிக்கப்படுவோருக்கு நோவா ஓர் பரிபூரணமான உதாரணமாயிருந்தார். ஆனால் நோவா வெளியே வந்தபோது காம் அவரோடு இருந்தான் என்பதை நினைவில் கொள்ளவும். பாவம் அங்கு இன்னுமாக இருந்தது. பாவம், அவிசுவாசம், பேழையின் மூலமாக கடந்து நியாயத்தீர்ப்புக்கு மேலாக சுமந்து வரப்பட்டது. ஆனால் ஏனோக்கு பேழையைவிட உயரமாக சென்றான்! ஏனோக்கு தேவனுடைய சமூகத்திற்குள் சென்று விட்டான். ஆனால் நோவாவோ அதன் வழியாக சென்று வெளியே நடந்தான். அங்கு இன்னுமாக பாவம் கூடவே இருந்தது - உலக நிலைமைக்குட்பட்ட ஆயிரம் வருட அரசாட்சிக்கு ஒரு உதாரணம். ஆயிரம் வருட அரசாட்சிதான் முடிவானது அல்ல; அதன் பின்பு காலமானது உண்டு. ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஒரு இடைப்பட்டக் காலமாகும். ஆனால் அது புதிய பூமி அப்படியல்ல. நிச்சயமாக இல்லை. கவனியுங்கள், நாம் அதைக் குறித்து பின்பு பார்ப்போம். மீட்கப்பட்ட 'உலகமானது திரும்பவும் மூல உரிமையாளரிடம் செல்கிறதை கவனியுங்கள். அவர் அதை சாத்தானிடம் இருந்து எடுத்துக் கொண்டார். உன்னை சாத்தானிடமிருந்து மீட்டுக் கொண்டது போலவும் கிணற்றண்டையிலிருந்த பெண்ணை சாத்தானிடமிருந்து மீட்டு கொண்டது போலவும் இந்த பூமியையும் அவர் எடுத்துக் கொண்டார். அன்று இருந்த ஆசாரியன் தான் தேவனோடு இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் அவனிடம் ஒன்றுமில்லை என்பதை பாருங்கள்? (கிணற்றண்டையிலிருந்த அந்த பெண் இயேசுவைக் கண்டுக் கொண்டாள் - ஆனால் ஆசாரியனோ இயேசுவைப் புரிந்துக் கொள்ளவில்லை - - தமிழாக்கியோன்) அதை இங்கு உங்களுக்கு வரைந்துக் காட்ட விரும்புகிறேன். (சகோதரன் பிரான்ஹாம் கரும்பலகையில் திரும்பவும் வரைந்து காண்பிக்கிறார் - ஆசி). இப்பொழுது நாம் இதை மிகத் தெளிவாக அடைந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வரை படத்தை கூர்ந்து கவனியுங்கள். இங்கே தேவன் இருக்கிறார். அவர் நித்தியமானவர். அவரைத் தவிர வேறொருவர் இல்லை. தேவனிடத்தில் அநேக தன்மைகள் இருந்தன. இங்கே இந்தக்காரியம் வார்த்தை - தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது (அந்த வார்த்தை மாம்சமாகி இயேசு என்னும் நபருக்குள் வந்து நம்மிடையே வாசம் செய்தது. இப்பொழுது இங்கு குறிப்பிடப்பட்ட நபரை நாம் இவ்விதமாக உருவகிக்கப் போகிறோம். இங்கே காட்டப்பட்டிருப்பது கிணற்றடியிலிருந்த அந்த பெண்மணி. இங்கே காட்டப்பட்டிருப்பது அந்த ஆசாரியன், பரிசேயன். வெறுமையாயிருக்கிற கரும்பலகையை நீங்கள் பார்க்கிறீர்களே . அது கிருபையும், இரட்சிப்பையும் குறிக்கிறதாயிருக்கிறது (சகோ. பிரான்ஹாம் கரும்பலகையிலுள்ள வரைபடத்தை சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறார் - ஆசி).  இப்பொழுது கவனியுங்கள். "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (ஆங்கில வேதாகமத்தில் "dwelt among us" - அதாவது நம்மோடு வாசம் பண்ணினார் என்று பொருள்பட அமைந்துள்ளது - தமிழாக்கியோன்). மூன்று நிலைமைகள்: தாம் மனிதனாக வேண்டும் என்ற தன்மை அவருக்குள் முதலில் இருந்தது; பின்பு அந்த தன்மையானது வெளிப்படுத்தப்பட்டு அவர் தம்மை இயேசுவாக்கிக் கொண்டார். இப்பொழுது நாம் இங்கிருக்கிறோம் என்றால், நாம் ஏற்கனவே அவரிலிருந்தோம் என்று பொருளாகிறது. ஏனெனில் ஒரே நித்திய ஜீவன் தான் உண்டு. அது தேவனாயிருக்கிறது. நீ ஆதியிலே தேவனுடைய பாகமாயிருந்திருக்க வேண்டும்! நீ இங்கே தெரிந்து கொள்வது அல்ல; அவர் உன்னை தெரிந்துக் கொண்டார் என்பதே காரியம்; "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” (யோவான் 6:37) என்று இயேசு கூறினார். இங்கே இந்த ஆசாரியனைப் பாருங்கள். இங்கே அவனுடைய முந்தைய வாழ்க்கையை பார்க்கிறோம். அவனுடைய முன் வாழ்க்கை பாவம் என்ற முன்குறித்தலில் காணப்படுகிறது. இங்கே கீழே நரகம் இருக்கிறது. இங்கே எழுதப்படாத கரும்பலகையின் சிறு பாகம் காணப்படுகிறதே அது அவனுடைய பரிசுத்தத்தைக் காட்டுகிறது. அவன் ஒரு ஆசாரியன்; அவன் ஒரு மதிப்பிற்குரிய மனிதன். அதை தான் அது காட்டுகிறது. அவன் நல்ல மனிதனாயிராவிட்டால் ஆசரியனாயிருக்க முடியாது. ஆனால் அதை அவன் எவ்விதம் பெற்றுக் கொண்டான்? தன் மூளை அறிவினால் படிப்பினால் அதை பெற்றுக் கொண்டான். இப்பொழுது இந்த கிணற்றண்டையிலிருந்த பெண்ணைப் பாருங்கள். அவளுடைய முந்தைய வாழ்க்கை , அவள் ஒரு விபச்சாரியாயிருந்தாள். அவள் எல்லாம் குழம்பிப் போயிருந்தாலும் அவளுக்குள்ளே சிறிதளவு ஓர் புரிந்துக் கொள்ளுதல் இருந்தது. "மேசியா வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்று அறிவேன்” (யோ. 4: 25) என்ற காரியம் அங்கேயிருந்தது. கவனியுங்கள், இயேசு வந்து வார்த்தையை வெளிப்படுத்தின போது வார்த்தை இருதயத்திலுள்ளதை வகையறுத்ததால் (எபிரேயர் 4 : 12-ல் வார்த்தையானவர் எப்படியிருப்பாரென்று கூறப்பட்டது போல்)... வார்த்தை இருயத்திலுள்ள நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிற தாயிருக்கிறது. இயேசு தீர்க்கதரிசி என்ற மனுஷகுமாரனாய் வந்தார். என்ன நடந்தது? மூளையறிவின் படிப்பையுடைய இந்த ஆசாரியன் "அவர் ஒரு பிசாசு" என்று அழைத்தான். ஏனெனில் அவன் சார்ந்திருந்த ஸ்தாபனம் அவரை அவ்விதம் தான் அழைத்தது. அத்தகைய செயல் அவனை எவ்விதமாக உருவகித்தது? அவனுக்குள் புரிந்து கொள்ளுதல் என்ற பிரதி நிதித்துவம் இல்லை என்பதை காட்டிற்று. ஆகவே அது அவனை இருட்டிற்குள்ளாக்கிவிட்டது. ஆனால் இப்பெண்மணிக்கோ தன்னை வெளிப்படுத்தத் தக்கதான நல்ல காரியம் ஏதும் இல்லை. ஏனெனில் அவள் அந்த அளவிற்கு அசுத்தமாயிருந்தாள். ஆனால் கவனியுங்கள். அவளுக்குள் புரிந்து கொள்ளுதல் என்னும் பிரதிநிதித்துவம் உண்டாயிருந்தது! அவளுக்குள் அந்த தன்மை மாமிசமாக வேண்டுமென்று பார்த்துக் கொண்டிருந்தாள். "நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா" என்ற பொழுது, "எனக்கு புருஷன் இல்லை என்றாள். "நீ உண்மையைச் சொன்னாய். ஏனெனில் ஐந்து புருஷர்கள் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல. நீ ஐந்து பேரையுடையவளாய் இருந்தாய்; இப்பொழுது இருக்கிறவேனாடு சேர்ந்து ஆறு பேரை நீ வைத்திருக்கிறாய்” என்றார். அதற்கு அவள் . "ஐயா, உம்மை பெயல்செபூல் என்று காண்கிறேன்" என்று கூறவில்லை; மாறாக "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்! கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்றாள். அதற்கு அவர், "நானே அவர்” என்று கூறினார். இன்னுமாக சந்தேகம் அவளுக்கிருக்கவில்லை! நீ அதை விவரித்துக் கூற இயலாது! அவள் அதை பார்த்தாள்: விசுவாசித்தாள். பின்பு சென்றாள். அது அவளுக்கு என்ன செய்தது? அது அவளை மீட்டுவிட்டது! இப்பொழுது கவனியுங்கள், அவர் மீட்பராக வந்தார். அது உண்மையா? மீட்டல் என்றால் பொருள் என்ன? திரும்பவும் கொண்டு வருதல் அந்த ஆசாரியனை ஏன் அவரால் கொண்டு வரமுடியவில்லை? அவன் ஆரம்பத்திலிருந்தே அதற்கு நியமிக்கப்படவில்லை. அவனுக்கு புரிந்து கொள்ளும் பிரதி நிதித்துவம் இல்லாதிருந்தது. விழுந்து போனதை மீட்கவே அவர் வந்தார். விழுதலில் இந்த ஸ்திரீயும் கலந்து விட்டாள், ஆனால் அவளை சுத்திகரிப்ப தற்கு என்று உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் அவளை தமது சிந்தனையில் கொண்டிருந்தார் அப்படியென்றால் நித்திய ஜீவனை அவர் உடையவராயிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார் அல்லவா? பாருங்கள். அந்த ஆசாரியனை அது என்ன செய்தது? அவனுக்கென்று நியமிக்கப்பட்ட முடிவுக்கு அவனை அது அனுப்பி வைத்தது அவனுடைய ஆரம்பத்தில் அங்கு ஒன்றுமில்லாதிருந்தது மூளையறிவினால் உண்டான கல்வியே அவனுக்கிருந்தது இப்பொழுது கவனியுங்கள் நண்பரே, முளையறிவினால் உண்டான கல்வி மட்டுமே நீ பெற்றிருப்பாயானால் அதிலிருந்து வேறொன்றைத்தான் நீ பெற்றுக்கொள்ள முடியும்! நீ புரிந்து கொள்ளுதல் என்னும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்பாயானால் (முன்குறித்தல் - தமிழாக்கியோன்) மட்டுமே அதை பெற்றுக் கொள்ள முடியும். அதன் காரணமாகவே நீங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளினின்றும் இங்கே வந்திருக்கிறீர்களென்று நான் நம்புகிறேன். வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை இங்கு ஜீவிக்கிறது. ஆதியிலே அவ தம்முடைய வழியை தீர்க்கதரிசிகள் மூலமாக எவ்விதம் தெரியப்படுத்தினார் என்பதை இப்பொழுது கவனியுங்கள். அவர் அதை ஒருபோதும் மாற்றவில்லை! அவனை நீதிமானாக்கி, பரிசுத்தமாக்கி, பரிசுத்த ஆவியையும், அக்கினியையும் அனுப்பி அவனிலிருந்த பாவத்தை சுட்டெரித்து நீக்கி விட்டு பின்பு அவனுக்குள் அவர் வாசம் செய்தார். இரட்சிப்பை இவ்விதம் தான் செய்தார். இத்தகைய மீட்கும் திட்டத்தில் தான், தாம் உபயோகிக்கப் போகும் பூமியையும் மீட்கிறார். நோவாவின் நாட்களில் இப்பூமி மனந்திரும்பின் பின் அதை தண்ணீரினால் ஞானஸ்நானம் செய்வித்தார். இயேசு வந்து தம்முடைய இரத்தத்தை அதன் மேல் சொட்டு சொட்டாக சிந்தி அதை தன்னுடையதென்று உரிமைக் கொண்டார். வரப்போகின்ற புதிய பூமியை புதிதாக்குவதற்காக அதனிலுள்ள பிசாசையும், ஒவ்வொரு கிருமியையும், எல்லா வியாதிகளையும் நீக்கி சுத்திகரிப்பதற்காக பரிசுத்த அக்கினி ஞானஸ்நானம் அதற்கு வேண்டியதாயுள்ளது. "பின்பு நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன்" (வெளி. 21 : 1). நீ ஒரு புதிய மனிதனாகிறாய்! ஆமென்! சபையில் அங்கத்தினனாகி அல்லது புதிய வாழ்க்கையைத் தொடங்கி பழையக் காரியத்திற்கு சப்பைக்கட்டுவதல்ல. மாறாக நீ ஒரு முழுமையான புதிய மனிதனாகிறாய்! தேவன் பழைய மனிதனை எடுத்து, தம்முடைய பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் முழுவதுமாக அவனை எரித்து, தாமே அவனுக்குள் வந்து வாசம் செய்தல் ... உன்னுடைய பிரதிநிதித்துவத்தை அவர் அனுப்புகிறார். "பிதா வானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னை அனுப்பின் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான். 6 37, 44) இதை புரிந்து கொள்கிறீர்களா? அதே வழி. அதே திட்டம். சரியாக சாத்தான் உன்னிலிருந்து எடுக்கப்படுவதைப் போன்று இந்த பூமியினின்றும் அவன் எடுக்கப்படுகிறான். சாத்தான் தொந்தரவுபடுத்துவதில்லை...! அவனால் சோதிக்க முடியும், ஆனால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனை சாத்தானால் கெடுக்க முடியாது. ஏனெனில் உலகத்தோற்றத்திற்கு முன்பே தேவன் அவனை முன் அறிந்திருக்கிறார். இயேசுவை அனுப்பி அவனை மீட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, இயேசுவின் இரத்தம் அவனுக்காக பேசிக்கொண்டிருக்கிறது. கர்த்தர் அவனுடைய பாவத்தை பாராமலிருக்கும் போது அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? அவனால் செய்ய முடியாது .... உன்னுடைய சத்தத்தை மட்டும் அவர் கேட்கிறவராயிருக்கிறார். உன்னுடைய முன் குறித்தலை மட்டும் அவர் காண்கிறார். ஆமென்! அது தான் உண்மை . பாருங்கள்? அதே விதமாகத்தான் நீ அவருடைய தன்மைகளில் ஒருவனாயிருந்தது போல் பூமியும் அவருடைய தன்மைகளில் ஒன்றாயிருக்கிறது). ஏனென்றால் ஒரு பூமி உண்டாயிருக்க வேண்டுமென்றும், அதின்மேல் ஒரு சிங்காசனமும் அதின் மேல் அமர ஒரு ராஜா வேண்டுமென்றும், அவர் ஒரு மீட்பராகவும் சுகமளிப்பவராகவும் இருக்க வேண்டுமென்றும் ஆதியிலே இவைகள் தேவனுடைய சிந்தையிலிருந்தன. அது அவருடைய தன்மைகளாயிருந்தன. உனக்குள் இருக்கும் தன்மையைப் போல.  ஒரு கம்பத்தை நான் சிந்தனையில் கொள்ளாமல் அது கம்பம் என்று என்னால் கூற முடியாது. அதே விதமாக ஒரு மனிதனை நான் சிந்தனையில் கொள்ளாமல் அவனை மனிதன் என்று கூற முடியாது. சிந்தனை என்பது என்னுடைய தன்மையாயிருக்கிறது. அதை வெளிப்படுத்தல் என்பது வார்த்தையாயிருக்கிறது. புரிந்து கொள்கிறீர்களா? சிந்தனை என்பது என்ன? ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று ஏசாயா கூறினது போல அதை அவன் எவ்விதம் கூறியிருக்க முடியும்? (முதலாவது அது அவன் சிந்தனையில் தோன்ற வேண்டிய தாயிருந்தது - தமிழாக்கியோன்). பகுத்தறிதல் எப்படி எனக்கு உண்டாகிறது என்பதைக் குறித்து உங்களில் அநேகர் அதிசயப்படக்கூடும். நான் உங்களுக்கு அதைக் கூறப் போகிறேன். நான் சொல்லுகின்ற வார்த்தை என்னுடைய சிந்தனையல்ல. ஏனெனில் அது எனக்குத் தெரியாது. அதைக் குறித்தான சிந்தனையை நான் அறியாதவனாயிருக்கிறேன் . உங்களுக்கு நான் அந்நியனாயிருக்கும்போது, நீங்கள் யாரென்றும், எங்கிருந்து வருகிறீர்களென்றும் எனக்கு எப்படித் தெரியும்? உங்களை என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் பாத்திராதிருக்கும்போது, நீங்கள் 10 வருடத்திற்கு முன்பு என்ன செய்தீர்களென்பதை என்னால் எப்படி கூற முடியும்? நீங்கள் எங்கு எதை செய்வீர்களென்றும், 10 வருடங்கழிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை என்னால் எப்படி சொல்ல முடியும்? எதிர்காலத்தைக் குறித்து எனக்கு எப்படி தெரியும்? ஆனால் அது வேறு யாரோ ஒருவரின் சிந்தனையாயிருக்கிறது! "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி 2 : 5). அப்படியானால் அது உங்க ளுடைய சிந்தனையல்ல, பாருங்கள்; அவரின் சிந்தனை உங்கள் : மூலமாய் வருகிறது. ஆகவே உங்கள் சொந்த வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்தாமல் அவருடைய வார்த்தைகளையே வெளிப்படுத்துகிறீர்கள். ஆகவே தான், அந்நிய பாஷை பேசி அதன் அர்த்தத்தை விவரிக்கும் காரியத்தில் சகோதரர் அநேக சமயங்களில் குழப்பத்தை பெற்றுக் கொள்கிறார்கள். சரியில்லாத காரியத்தை அவர்கள் சொல்லி அது சாத்தான் என்பதை உணரா மலிருக்கிறார்கள். "தேவனுடைய தோட்டத்திலா அவ்விதம் இருக்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம். சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள், நாம் அதை பெற்றுக் கொண்டு அது சரிதானா, இல்லையா என்பதை பார்ப்போம். களைகளும் கோதுமையும் ஒரே நிலத்தில் தான் விளைந்து; ஒரே சூரிய வெளிச்சத்தையும், ஒரே மழைத்தண்ணீரையும் பெற்றுக் கொள்கின்றன என்பதை பாருங்கள். "உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் அவனிடத்தில் பேசுவேன்; அவன் கூறியது நடக்குமானால் அது நானாயிருக்கிறேன், ஏனெனில் அவன் தன்னுடைய சிந்தனையை வெளிப்படுத்தாமல் என்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறான்!” என்னுடைய சிந்தனைகளே வெளிவந்து அவைகளை வெளிப்படுத்ததக்கதாக அவனுடைய வாயை உபயோகப்படுத்த வேண்டியதாயிருக்கிறது! அவன் அதை சொல்லிய பின்பு அது நிறைவேறியாக வேண்டும்! "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை ” (மத். 24 : 35). "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று ஏசாயா கூறினார். அதுவே காரியத்தின் முடிவாயிருக்கிறது: அவள் கர்ப்பவதியாகப் போகிறாள், தேவன் எதை சொன்னாரோ அதை செய்கிறார். ஓ, அவருடைய எல்லா வெளிப்படுத்துதல்களையும் அவருடைய தீர்க்கதரிசிகளின் மூலமாக தெரியப்படுத்துகிறார். ஏனெனில் அது அவருடைய தன்மைகள் சிந்தனையாயிருந்து வெளிப்படுத்துகின்றதாயிருக்கிறது. ஆகவே இங்கே நாம் கண்ட அந்த சிறிய பெண்மணியும் அவருடைய தன்மைகளில் ஒன்றாய் இருந்தாள். பாருங்கள்? அங்கே ஒரு ஆசாரியன் வெளிச்சத்திற்கு பிரதிநிதியாயிருந்தான்; அவன் அதை வேதாகமத்திலிருந்து படித்தறிந்துக் கொண்டான்: தேவனை தேவன் என்றும் பரிசுத்தம் சரியானதென்றும், தேவனுடைய பிரமாணங்கள் என்று ஒன்று உண்டென்றும் தன்னுடைய மூளை அறிவினால் படித்து அறிந்து கொண்டான். அவன் லேவி கோத்திரத்தின் மூலம் சரியான வழியின்படி பிறந்து வந்தாலும், தேவ காரியங்களை அவன் மூளையறிவின் மூலம் மட்டுமே அதை தெரிந்துக் கொண்டான்! என்ன தற்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறதென்பதை அவனால் கண்டுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஏற்கனவே நடந்தவைகளை படிப்பின் மூலமாக அறிந்துக் கொண்டான். அந்த மணி நேரத்திற்குரிய வெளிச்சம் பிரகாசித்த பொழுது... அங்கு என்ன காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறதென்பதை அவன் கண்ட பொழுது, அதைக் குறித்து அவன் சார்ந்திருந்த ஸ்தாபனம் ஒன்றும் கூறவில்லையாகையால், அதைக் குறித்து அவனுக்கு ஒரு காரியமும் புலப்படவில்லை. ஆனால் ஒரு மீட்பர் அந்த மணி நேரத்தில் பூமியின் மேல் வந்து தேவனுடைய தன்மைகளை மீட்டுக் கொண்டிருந்தார் - அவள் அதைப் பெற்றுக் கொண்டாள். அவள் அதைக் குறித்து கேள்வி ஏதொன்றும் கேட்க வில்லை. "மேசியா வரும்போது இவைகளைச் செய்வார்” என்றாள். அதுவே முடிவானதாயிருந்தது. அது அங்கு நடைபெறுவதை அவள் கண்டாள். ஆகவே அவர். "நானே அந்த மேசியா" என்றார். அதுவே அதற்கு முடிவாயிருந்தது. அதன் பின்பு வேறு கேள்விகள் அங்கு இல்லை. அவள் உடனே எல்லாரிடமும் சென்று, "நான் கண்டுபிடித்தவரை வந்து பாருங்கள்" என்றாள் (யோவான் . 4:29) நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியுடன் அக்கினியினால் ஞானஸ்நானம் என்னும் வழிமுறை நம்மை சுத்திகரித்து அவர் தங்கும் ஸ்தலமாக நம்மை மாற்றுகிறது. ஆகவே, இந்த பழைய பூமியாகிய கிரகம் தண்ணீரினால் அழிக்கப்படவில்லை. மாறாக தண்ணீரினால் கழுவப்பட்டது (எல்லா அசுத்தங்களையும் : தேவன் பூமியின் மேல் வைத்த எல்லா வஸ்துக்களையும்) முதலாம் உலகம் அழிக்கப்பட்டது என்று வேதம் கூறுகிறது. ஆனால் பூமியென்னும் கிரகத்தை அது அழிக்கவில்லை, மாறாக அதன் மேலிருந்த பாவிகளையும், பாவத்தையும் அது அழித்தது. பூமி என்ற கிரகம் நிலைத்து நின்றது. இந்த நீதிமானாகுதலை கவனியுங்கள் (பாப்டிஸ்டுகளும், மெத்தோடிஸ்டுகளும் நினைக்க விரும்புகிறதை போல) வெறும் நீதிமானாகுதல் : விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுதல் மட்டும் போதாது. ஏனெனில் நீ திரும்பவும் உலகத்தில் சுற்றி திரிந்து உலகத்தின் காரியங்களை மயிரை கத்தரித்தல், குறைவான ஆடைகளை அணிதல் போன்றவைகளைத் திரும்பவும் செய்வாய். இன்னும் காரியம் அங்கு சரியாக சம்பவிக்கவில்லை. நீ திரும்பி பார்த்து தவறு செய்துவிட்டேன் என்பதை மட்டும் புரிந்துக் கொள்வாய், அவ்வளவுதான். நீதிமானாக்குதல் இந்த பூமிக்கு என்னத்தை செய்தது? முதலில் இருந்த பாவத்தைவிட இன்னும் அதிகமான பாவத்தை செய்ய ஆரம்பித்து விட்டது. அதே விதமாகத்தான் மனிதனும் செய்கிறான். அந்த மட்டும்தான் 'அவனால் செய்ய முடிகிறது. மகத்தான சுவிசேஷகரான பில்லி கிரஹாம் அந்த வழியைத் தான் காண முடிகிறது. "நான் சுவிசேஷம் பிரசங்கிக்கும் போது 30,000 பேர் மனம் மாறுகிறார்கள். ஆனால் ஒரு வருட காலத்தில் அதில் 30 பேர் கூட நிலைநிற்பதில்லை” என்று கூறயிருக்கிறார். அந்த மட்டும் தான் அவர்களால் போக முடிந்தது. பாருங்கள்? அவர்கள் நிச்சயமாக மனம் திரும்பு கிறார்கள் தாம். அவர்களில் பல பேர் அல்லது சில பேர்களாவது திரும்புகிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அது மட்டும் காரியம் நடப்பிக்க போதாது. இது இங்கு நிரூபிக்கப்படுகிறதை கவனியுங்கள். ஆகவே பழைய பூமியாகிய கிரகம் தண்ணீரினால் அழிக்கப்படவில்லை. மாறாக இப்பூமியானது கழுவப்பட்டது. அது தன்னுடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டது. அது ஞானஸ்நானம் பண்ணப்பட்டது. அதைப் போலவே அக்கினியினால் இவ்வுலகம் அழிக்கப்பட்டாலும் இப்பூமியானது நிலைநிற்கப் போகிறது. அக்கினி இப்பூமியின் மேலுள்ள பாவத்தை மட்டும் அழிக்குமே தவிர பூமியை அழிக்காது. புரிந்து கொள்கிறீர்களா? வேதாகம மாணாக்கர்களே, கவனியுங்கள் (விசேஷமாக டாக்டர் வேயில் என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்) இங்கு 2 பேதுரு 3ம் அதிகாரம் 10ம் வசனத்தில் பூமி என்று உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைக்கு மூல கிரேக்க பாஷையில் காஸ்மாஸ் என்றிருக்கிறது, அதற்கு உலக ஒழுங்கு என்று அர்த்தமாகிறது. "பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்து போம்” என்றிருக்கிறது பாருங்கள்? இந்த பூமி என்னும் கிரகம் ஒழிந்து போகப்போகிறது என்று பொருளல்ல, ஆனால் இந்த உலகம் 'காஸ்மாஸ்', அரசியல், பாவிகள், மனித ஒழுங்குகள், பாவம், கிருமிகள், தவறாக இருப்பவை எல்லாம் ஒழிந்து போகும். ஒருவிசை தேவன் வானத்தை அசைக்கப்பண்ணினார். ஆனால் இந்த விசை பூமியை அசைக்கப்போகிறேன் என்று கூறியிருக்கிறார் - வானத்தையும், பூமியையும் அசைக்கப் போகிறார். இந்த தடவை வானத்தையும் அசைக்கப் போகிறார். பாருங்கள்? ஏனென்றால் நாம் அசைவில்லாத நித்தியமான ஓர் ராஜ்ஜியத்தைப் பெற்றுக் கொள்ளப்போகிறோம் (எபி. 12:26-27). அதை எவ்விதம் அணுகப் போகிறார் என்பதை கவனியுங்கள். "பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் கிரியைகளும் எரிந்து அழிந்து போம்” என்று பேதுரு குறிப்பிடுவதை கவனியுங்கள் பூமியென்னும் கிரகமல்ல. அதிலுள்ள மனிதனின் கிரியைகள் தான். அவர்களுடைய எல்லா அரசியல்வாதிகளும், அவர்களுடைய திட்டங்களும், அவர்களுடைய ஸ்தாபனங்களும் மனிதனால் உண்டாக்கப்பட்ட திட்டங்களும் அது எரியும்போது அழிந்துவிடும். "வானங்கள் மடமடவென்று அகன்று போம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கவனித்தீர்களா? (ஆங்கிலத்தில் "பயங்கரமான சத்தத்துடனே அகன்றுபோம்" என்று எழுதப்பட்டிருக்கிறது - தமிழாக்கியோன்). கவனியுங்கள், இந்த முழு பூமியும் அக்கினியினால் பற்றியெரியும்போது வாயுக்களை அது கொளுத்திவிடும். அதனால் மிகுந்த பயங்கரமான வெடி சத்தம் உண்டாகும். அதுதான் சரியானபடி நடக்கப் போகிறது. "வானங்கள் மிகுந்த சத்தத்துடனே அகன்று (பூமியும்) போம்” என்று பேதுரு கூறியிருக்கிறார். அந்த விதமான வெடி பூமியை அதிரப்பண்ணும். ஓ! ஏனெனில் அந்த அக்கினியானது, எல்லா வியாதிகளையும், எல்லா முட்களையும், எல்லா கிரியைகளையும் கொல்ல வேண்டியதாயிருக்கிறது. அது தத்ரூபமான அக்கினி மட்டுமல்ல! அது பரிசுத்த அக்கினியும் கூட (புரிந்து கொள்கிறீர்களா?) அது சாத்தானையும் அவனுடைய எல்லா பிசாசுகளையும் எடுத்துவிடும். வானமும் பூமியும் ஒழிந்துபோம் (ஆமென்), எல்லா கிருமிகளையும், எல்லா பூச்சிகளையும், பூமியின் மேலுள்ள இயற்கையின் ஜீவன் எல்லா வற்றையும் (H, O) ஹைடிரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்குமாகிய இத்தண்ணீர் வெடிக்கும். நினைத்துப் பாருங்கள்! சப்தத்தைக் குறித்து பேசுவோம். அவர் முத்திரைகளை திறந்த போது டூசானில் ஏற்பட்ட சிறிய சப்தத்தை பெரிய காரியமாக நினைக்கிறீர்கள், அது தேசத்தை அசைத்து மனிதர் பேசுவதற்கு காரணமாயிற்று, சற்று பொறுத்திருங்கள். இந்த உலகமானது தன்னுடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறது. ஒரு மனிதன் அக்கினி ஞானஸ்நானம் பெறும்போது அங்கே சுற்றிலும் மிகுந்த சப்தம் உண்டாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஜனங்கள் சத்தமிட்டு கத்துவதை ஓர் அவமானம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்த உலகமும் தன்னுடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளவும் சற்று பொறுத்திருங்கள், ஆம் அது அதை விவரிக்கும். H, O என்ற விஞ்ஞான குறியான ஹைடிரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்குமான தண்ணீரானது வெடிக்கும். ஏனெனில் வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரம், "சமுத்திரமும் இல்லாமற் போயிற்று என்று கூறுகிறது. இக்காரியம் பூமியின் மேற்பரப்பை முற்றிலுமாக மாற்றிவிடும்! அவள் வெடித்து சில்லுகளாக்கப்படுவாள். வெளிப்புறமுள்ள மேற்பரப்பு அதன் கீழ் உள்ள பல நூறு அடிகள் ஆழத்திற்கு முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடும். பூமிக்கு மேலுள்ள வாயுமண்டலம் வாயுக்கள் என்ற மகத்தான ஓர் திரட்சியை ஒரு விதமான வாயுமண்டல் திரட்சி) ஏவுகணைகள் கிழித்து செல்ல முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவைகளெல்லாம் வெடிக்கும்! தேவனுடைய பரிசுத்த நியாயத்தீர்ப்பு அதன் மேல் வந்து சுத்திகரிக்கும். அதனால் முழு மேற்பரப்பும் மாறுதல் அடையும். "ஒழிந்து போம்” (Pass away) என்ற கிரேக்க வார்த்தையை உங்களில் அநேகர் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அது ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. நான் அதை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் இந்த பூமி ஒழிந்து போகிறதென்றால் அதன் மேல் நாம் எப்படி வாழ முடியும்?" என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களென்றால் நான் அந்த வார்த்தையை உங்களுக்கு உச்சரிக்கப் போகிறேன். அதை என்னால் சரியாக உச்சரிக்க முடியவில்லை). அந்த வார்த்தை . "பாரெரகோமியா” என்றிருக்கிறது. அதை எவ்விதம் உச்சரிப்பது என்பது எனக்குத் தெரியவில்லை ஆவியின் ஊக்குவித்தல் என்னை சந்திக்கும் போது ஒரு குறிப்பிட்ட வார்த்தை என்ன என்பதை கண்டுபிடிக்க முயல்வேன். இங்கே அந்த வார்த்தையை என்னால் உச்சரிக்க முடியவில்லை. ஆனாலும் கர்த்தர் ஒரு வழியை எனக்கு அமைத்து அந்த வார்த்தையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க செய்தார். அதன் பின்பு நான் அதை பெற்றுக் கொண்டேன்! "முந்தின் வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின" (வெளி 21:1) (ஆங்கிலத்தில் "கடந்து போயின்” என்ற விதமாயுள்ளது - தமிழாக்கியோன்). இந்த கிரேக்க வார்த்தைக்கு முழுவதுமாக அழிந்து விடுதல் என்று அர்த்தமல்ல. மாறாக ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பிற்கு செல்லுதல் என்ற பொருளாகிறது. "கடந்து போயின" என்ற ஆங்கில வார்த்தைக்கு நிர்மூலமாகுதல் என்ற விதமாக பொருள்படுகிறது. ஆனால் இந்த கிரேக்க வார்த்தைக்கோ, ஒரு அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்குச் செல்லுதல் என்று அர்த்தமாகிறது. பவுல் தீத்துவுக்கு எழுதின நிரூபத்தில் 3ம் அதிகாரம் நம் வசனத்தை கவனியுங்கள். அதில் "பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒரு மனிதன் மனம் மாறும்போது அவன் முற்றிலுமாக நிர்மூலமாகிவிடாமல் பாவி என்ற நிலைமையினின்று பரிசுத்தவான் என்ற நிலைமைக்கு மாறுகிறான். பழைய நிலைமையினின்று புதிய நிலைமைக்கு மாற்றப்பட்டான் என்று பொருளாகிறது மத்தேயு 19:28 (28:19ல் அல்ல) இயேசு இதே வார்த்தையை உபயோகித்தார். அவர் சீஷர்களிடம், "நீங்கள் புதிதாக்கப்பட்ட வர்களாய்... நீங்கள் புதிதாக்கப்பட்ட பின்பு.... என் பிதாவின் சிங்காசனத்தில் என்னோடு வீற்றிருப்பீர்கள்” என்று கூறினார். கழுதைக்குட்டியை கொண்டு வரும் காரியத்திலும் அவர் "அவைகளை” அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள் (மத்தேயு 21:2). அதே விதமாக லாசரு உயிர்த்தெழுந்த சம்பவத் திலும் இயேசு, "இவனை கட்டவிழ்த்து விடுங்கள்” என்றார் (யோவான் 11:44) (ஆங்கிலத்தில் அவனை கட்டவிழ்த்து விட்டு போக விடுங்கள் என்ற விதமாயுள்ளது. தமிழாக்கியோன்) அது எதை குறிக்கிறது? இந்த பூமியானது சாத்தானின் பிடியிலிருந்து கட்டவிழ்க்கப்படும் என்று பொருளாகிறது! அது கட்டவிழ்க்கப்படப்போகிறது! தேவனுடைய ராஜ்ஜியம் இப்பூமியின் மேல் அமைக்கப்படுவதற்காக அரசியல்களிலிருந்தும், ஸ்தாபன மதக்கொள்கைகளினின்றும் கட்டவிழக்கப்படப்போகிறது. அது சாத்தானின் அரசியலில் இருக்கும் வரை சாத்தானே அதை அரசாளுகிறான். அதற்கு அவன் சொந்தக்காரனாயிருக்கிறான். ஆனால் கிறிஸ்து அதை மீட்டுக் கொண்டார்! ஒரு சமயம் நான் அவனுடைய சொத்தாக இருந்தேன், ஆனால் இப்பொழுதோ அவ்வாறில்லை. ஒரு சமயம் அந்த சிறு பெண்மணி அவனுடைய சொத்தாயிருந்தாள், ஆனால் இப்பொழுதோ அவ்வாறில்லை (பாருங்கள்). பிடியிலிருந்து கட்டவிழ்க்க அவர் வந்தார். உன்னுடைய ஜீவியத்திலும் என்னுடைய ஜீவியத்திலும் இருந்த பாவம் என்னும் சாத்தானின் பிடியை அவர் அவிழ்த்தார். ஆகவே நாம் இப்பொழுது அவனுடைய சொத்தல்ல! அடிக்கடி நான் ஜெபத்தில் "தேவனுடைய சொத்தின் மேலிருந்து உன் கரங்களை எடுத்துவிடு ஆமென்! உங்களுடைய சுதந்திரத்தை சுதந்தரிப்பதற்கு விசுவாசம் கொள்ளுங்கள். அது உங்களுடைய உரிமையாயிருக்கிறது. "அவனிடமிருந்து உன் கரங்களை எடு". "அவனிடமிருந்து உன் கரங்களை எடு" என்று நான் கூறுவதை கேட்டிருப்பீர்கள் பாருங்கள் விசுவாசம் அதை செய்கிறதாயிருக்கிறது. ஓ! அதை நிர்மூலமாக்குவதல்ல, மாறாக, "உன் கரங்களை அதின் மேலிருந்து எடுத்துவிடு... அவிழ்த்துவிட்டு போகவிடு: கடந்து போகுதல். அது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறதாயிருக்கிறது. பூமியும் அரசியலும் மதமும் ஸ்தாபனங்களும் ஒழிந்து போகின்றன. அரசியலும் ஒழிந்து போகிறது. தேவனுடைய இராஜ்ஜியம் நிறுவப்படுகிறது. "வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப் போயிற்று: மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்று போயினர் என்று வெளிப்படுத்தின விசேஷம் 6:14 கூறுகிறது. "வானமும் பூமியும் ஒழிந்து போம்" என்று இயேசு கூறினார். வேறு வார்த்தையில் கூறப்போனால், வானமும் பூமியும் மாறிப்போகும். அதே வார்த்தையை இங்கு திரும்பவும் உபயோகிக்கிறார். நிர்மூலமாவதல்ல, எனெனில் வெளி. விசேஷம் 21:2ல் "புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத் தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்" என்று கூறப்பட்டிருக்கிறது. அது இறங்கி வந்து இப்பூமியின் மேல் அமருகிறது. ஆகவே இந்த பூமி நிர்மூலமாவதில்லை. மாறாக அதன் அமைப்புகள் மாறிவிடும் என்பதே. தானியேலும் அதையேதான் பார்த்தார். "ஒரு கல் பெயர்ந்து வந்து உலகத்தை தாக்கிற்று. அந்த கல் கைகளால் பெயர்க்கப்படாத கல். அது அந்த சிலையை - கோட்பாடுகளை நொறுக்கிப் போட்டது. அப்பொழுது அவைகள் ஏகமாய் நொறுங்குண்டு கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்து போகிற பதரைப் போலாயிற்று: அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்து கொண்டு போயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியெல்லாம் நிரப்பிற்று" (தானி. 2:34, 35). அந்த மலை தற்பொழுது சிறியதாயிருக்கிறது. ஆனால் அது பூமி யெல்லாம் நிரப்பிற்று என்பதை கவனிக்கவும். மேலும், "பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்” (வெளி. 21:24) என்று வேதம் குறிப்பிடுகிறது. புதிய எருசலேமானது இப்பூமியின் மேல் அமர்ந்திருக்கிறது. அது மாற்றப்பட்டு விட்டது, பாருங்கள். தேவன் உங்களை அழைத்த போது நீங்கள் அதே உருவ அமைப்பில் தான் இருந்தீர்கள். ஆனால் பழைய ஜீவியமும், ஆசைகளும் ஒழிந்து போய், மறு ஜென்மமானீர்கள்; குடி குடிக்க வேண்டுமென்ற ஆசை ஆவலோடு ஓடுதல், ஒழுங்கீனமான காரியங்கள் அவைகளெல்லாம் மரித்துவிட்டன. பாருங்கள்? அப் பொழுது நீங்கள் சாத்தானின் கருவிகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ மீட்கப்பட்டிருக்கிறீர்கள். அதே விதமாகத் தான் இந்த உலகமும் மீட்கப்படும்! நீங்கள் புது சிருஷ்டியாயிருப்பது போல இப்பூமியும் வானமும் புதிதாகின்றன. கிரேக்க வார்த்தை (அதை அறிந்திருக்கிறவர்கள்) நீங்கள் புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள் என்று கூறுகிறது. ஆமென்! ஆலயம் பழையதுதான் ஆனால் சிருஷ்டிப்போ புதியது! அல்லேலூயா! இங்கு என்ன நடைபெறுகிறதென்பதை கவனியுங்கள். அது மகிமையாயிருக்கிறது. அதுதான் உண்மை . இந்த பூமி ராஜாக்களை உடையதாயிருக்கும் என்று நாம் பார்த்தோம் . மறுபடியுமாக இயேசு, "சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” என்று கூறினார் (மத். 5:5). அதே பூமிதான். ஆனால் நாம் வேறொரு அமைப்பைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் மீட்பின் திட்டத்தையல்லாமல் வேறொன்றையும் உங்கள் முன் கொண்டு வர முயற்சிக்கவில்லை. பாருங்கள்? அவருடைய சாந்த குணமுள்ளவர்கள் வாழ்வதற்கு தகுதியுள்ள இடமாக இப்பூமியை சுத்திகரிப்பதற்காகத்தான் அக்கினி ஞானஸ்நானம். பாருங்கள்? ஓ! நம்மில் அவர் செய்தது போல அவர் பரிசுத்த ஆவியாக நம்மில் வந்து வாசம் செய்வதற்கு முன்பு அவர் அக்கினி ஞானஸ்நானம் நமக்கு கொடுக்க வேண்டியதாயிருந்தது. நீங்கள் அக்கினி ஞானஸ்நானம் பெற்ற பின்பு பரிசுத்த ஆவியானவர் உள்ளே வருகிறார். அது அங்கு என்ன செய்கிறது? வார்த்தைக்கு புறம்பான எல்லாவற்றையும் உன்னிலிருந்து அது எரித்துப் போடுகிறது. பாருங்கள்? பின்பு வார்த்தையை தவிர வேறொன்றையும் அது விசுவாசிக்காது. ஏனெனில் அது வார்த்தையாயிருக்கிறது. பரிசுத்த ஆவியை பெற்றதற்கான அடையாளம் எது வென்று அதைக் குறித்துத்தான் அன்றொரு நாள் நாம் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது பரிசுத்த ஆவியின் அடையாளமாக, ஒரு கோட்பாட்டை பெற்றுக் கொள்வதல்ல. மாறாக தெளிவான புரிந்துக் கொள்ளுதலை கொள்கிறீர்கள். வார்த்தையின் தெளிவான புரிந்து கொள்ளுதலை - எவ்வாறு அறிந்துக் கொள்வீர்கள்? அது உன்னில் தன்னை நிரூபிக்கும் போது அதை கவனித்திரு "நல்லது. இதை செய்யலாம் என்று காண்கிறேன். அதை செய்யலாம் என்று காண்கிறேன்” என்று நீங்கள் ஒருவேளை கூறலாம். ஓ களைகளும் கூட வாழ்ந்து அதே விதமாக செய்கின்றனவே, அப்படியல்ல, அது முழு வார்த்தையாயிருக்க வேண்டும்! நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்க வேண்டுமானால், நீங்கள் அவருடைய பாகமாக இருக்க வேண்டும்; அவரே வார்த்தையாய் இருக்கிறார். பாருங்கள்? அவரில் பாகமாயிருத்தல் என்பது என்ன? அவர் தம்முடைய மணவாட்டியை அழைக்கும்போது இந்த நாளுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை ஏற்றுக் கொள்வது தான். நீங்கள் அதன் பாகமாயிருக்கிறீர்கள் இதைப் பெற்றுக் கொண்டீர்களா? அந்த காரியத்தை விட்டுவிட வேண்டும். கவனியுங்கள், நிச்சயமாக வாழ்வதற்கென்று இதை தகுதிப்படுத்துகிறார். ஒரு காரியத்தை இன்னுமாக நான் குறிப்பிடவில்லை, இந்த ஆயிர வருட அரசாட்சியானது புதிய பூமியல்ல. பாருங்கள்? ஆயிர வருட அரசாட்சியானது வித்தியாசப்பட்டது. இந்த ஆயிர வருட அரசாட்சிக்கு நாம் போகப்போகிறோம், ஆனால் அது புதிய வானமும், புதிய பூமியும் அல்ல. இல்லை ஐயா, ஆயிரம் வருட அரசாட்சியானது சற்று இளைப்பாறும் இடமாக இருக்கிறது (பாருங்கள்), ஒரு இளைப்பாறும் காலம். ஆயிர வருட அரசாட்சியின் காரியத்தை இதனோடு பொருத்த முடியாது. ஏனெனில் உலகத்தை அவர் உண்டாக்கின பின்பு ஏழாம் நாளில் ஏதேனில் அவர் இளைப்பாறியதைக் குறிக்கும் நிழலாயிருக்கிறது. இந்த உலகமானது தற்பொழுது ஏறத்தாழ 6000 வருட காலமுடையதாயிருக்கிறது. ஒவ்வொரு 2000 வருடத்திலும் அது அழிவைப் பெற்றது. பாருங்கள்? முதலாவது 2000 வருஷத்தில் வெள்ளம் வந்தது, அது எதனால் ஞானஸ்நானம் செய்யப்பட்டது? "தண்ணீரினால்” என்று சபையோர் கூறுகின்றனர்). தண்ணீரினால். அடுத்து 2000-மாவது வருஷத்தில் இயேசு வந்து தம்முடைய இரத்தத்தை அதன் மேல் சிந்தி அதை தம்முடையதென்று உரிமை கோரினார். சரி, "நான் திரும்பவும் வருவேன்” என்று கூறினார். தம்முடைய மணவாட்டியுடன் வருகிறார், கவனியுங்கள். இரண்டாவது 2000 மாவது வருடத்தில் அவர் என்ன செய்கிறார்? அவர் வந்து தம்முடைய இளைப்பாறுதலின் காலத்தைக் கொடுத்த பின்பு இந்த உலகத்தை எரித்து தம்முடையவர்களுக்காக அதை சுத்திகரித்து தமக்கு சொந்தமானவர்களை அதன் மேல் வைக்கிறார். கவனியுங்கள், இந்த 1000 வருட அரசாட்சி ஏழாம் நாளுக்கு உதாரணமாயிருக்கிறதே தவிர அது ஒரு பரிபூரணமான உலகமல்ல. அதன் பின் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வருகிறது. இங்கு நியாயத்தீர்ப்பு இன்னுமாக உண்டாயிருக்கிறது. பாருங்கள். நாம் இன்னுமாக இந்த 1000 வருட அரசாட்சியில் இருந்துக் கொண்டிருக்கிறோம். அந்த 1000 வருடம் என்பது ஒரு நாளைக் குறிக்கிறது. அது ஒரு காலவரம்பிற்குள்ளிருக்கிறது புதிய பூமியுடன் அதை இப்பொழுது கலந்து விடாதீர்கள். ஏனெனில் இது அதுவல்ல. "சகோ. பிரான்ஹாமே, இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏனெனில் ஏழு என்ற உங்கள் முழுமையான எண்களை நீங்கள் விட்டு வழி விலகுகிறீர்களே, இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் காலங்களை உதாரணப்படுத்துகிரவராயிற்றே” (நான் அப்படித்தான், தேவனும் கூட அவ்விதம் தான் என்று விசுவாசிக்கிறேன்) "நீங்கள் காலங்கள் என்னும் உதாரணங்களை விட்டு வழி விலகி செல்கின்றீர்கள். ஏனெனில் 7-ம் நாளிற்கு அப்பால் ஏதாவ தொன்று பொருத்துவீர்களென்றால் அதை எவ்விதமாய் செய்யப் போகின்றீர்கள்? இப்பொழுது எங்கு சென்றுக் கொண்டி ருக்கிறீர்கள்? என்று உங்களில் அநேகர் என்னை கேட்கலாம். சரி, உங்களுடைய காலத்தை வேறொன்றிற்கு நான் அழைக்கிறேன், பாருங்கள். இன்னுமாக நான் காலங்கள் என்றும் அமைப்பை விட்டு வழி விலகி வந்துவிடவில்லை. வேறொரு வேத வாக்கியம் இங்கு எனக்கு உண்டு. ஞாபகம் கொள்ளுங்கள். ஒவ்வொரு அணுவும், எல்லாமும் நிறைவேற வேண்டியதா யிருக்கின்றது. "சகோ. பிரான்ஹாமே, நீங்கள் ஓய்வு நாளான ஏழாம் நாளிற்கு அப்பால் ஏதாவதொன்றை பொருத்த முயற்சிக்கிறீர்கள்" என்று நீங்கள் கூறலாம். தேவன் ஆறு நாளில் வேலை செய்து இந்த உலகத்தை சிருஷ்டித்து பின்பு அவர் ஓய்ந்திருந்த ஏழாம் நாளானது ஒரு காலத்தைக் குறிக்கும் அடையாளமா யிருக்கிறது ஆனால், நித்தியமானதைக் குறித்தே நான் இங்கு பேசினேன். "ஆகவே, இப்பொழுது, உம்முடைய ஒப்புமையாக்கும் காரியம் எங்கே சென்றுவிட்டது?" என்று நீங்கள் கூறலாம். மேலும் "உம்மை ஒப்புமையாக்குவேன் என்று கூறுவீரே இப்பொழுது ஒப்புமையாக்கும் (types) காரியத்தினின்று வழி விலகிச் செல்கின்றீர்களே” என்றும் கூறலாம். இல்லை, நான் அவ்விதம் செல்லவில்லை. நாம் அதினின்று விலகவில்லை என்பதை சற்று பார்ப்போம். லேவியராகமம் 23ம் அதிகாரத்திற்குச் செல்வோம். இங்கு முடிவாக நாம் ஞாயிற்றுக் கிழமைக்கு வருவதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.... இதுதான் எனக்கு இந்த எண்ணத்தை இங்கு கொண்டு வந்தது. லேவியராகமம் 23ம் அதிகாரம் 26ம் வசனம். ஏழு பண்டிகை நாட்கள் உள்ளன என்பதை ஞாபகம் கொள்ளவும்; எக்காளப் பண்டிகை கூடாரப்பண்டிகை, அசைவாட்டும் பண்டிகை என்ற ஏழு பண்டிகை நாட்கள் உண்டென்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏழு மகத்தான பண்டிகை தினங்கள் ஏழு சபையின் காலங்களை மட்டும் குறிக்கின்றதாயிருக்கின்றது. ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையில் எத்தனை ஓய்வு நாட்கள் இருக்கிறதென்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எக்காளங்களுக்கும், பெந்தெகொஸ்தேக்கும் இடையில் ஏழு ஓய்வு நாட்கள் - அது ஏழு சபையின் காரியங்களைக் குறிக்கின்றது. எண்களை சரியான தொடர்ச்சியில் வைத்துக் கொள்ளுங்கள்.  "சகோ. பிரான்ஹாமே இப்பொழுது நீங்கள், உங்கள் ஏழு என்ற எண்ணிலிருந்து வழி விலகி விட்டீர்கள்" என்று நீங்கள் கூறலாம். சரி இங்கு லேவியராகமம் 23ம் அதிகாரம் 36ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடைசி பண்டிகையான கூடாரப்பண்டிகையை எடுத்துக் கொள்வோம். "ஏழு நாளும் கர்த்தருக்கு தகனபலி செலுத்தக் கடவீர்கள்: எட்டாம் நாள் உங்களுக்கு சபை கூடும் பரிசுத் நாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்' (லேவி. 23:36).  " இப்பொழுது நமக்கு ஒரு எட்டாம் நாள் உண்டு. ஏழு நாள் மட்டுமே உண்டு. ஆனால் சபை கூடும் பரிசுத்த நாளாகிய எட்டாம் நாளைக் குறித்து நாம் இங்கே பேசுகிறோம். கவனியுங்கள், அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது. இந்த எட்டாம் நாள் என்பது என்ன? திரும்பவும் முதலாம் நாளுக்கு வருவதே! ஏன், நின்றுவிடாமல் அவள் திரும்பவும் உருண்டு வருவதைப் போல் அது நித்தியத்தைக் குறித்துப் பேசுகிறது. ஆமென்! நீங்கள் அதை காண்கிறீர்களா? கவனியுங்கள், கடைசி நாளான கூடாரப்பண்டிகைக்குப் பின்பு. கடைசி சபையின் காலத்திற்குப் பின்பு, முழுமையான ஏழு நாட்களும் பூமியின் மேல் முடிந்த பின்பு ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்பு இந்த சபை கூடும் பரிசுத்த நாள் வருகிறது. ஞாபகம் கொள்ளுங்கள். இது இடங்களில் கூடிச்சேரும் கூடாரப்பண்டிகையாகும். ஆமென்! நாம் ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கிறோம். "அவர்கள் விடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்” (ஏசா. 65:21) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இந்த புதிய பூமியிலோ அவர் ஏற்கனவே சென்று இடத்தைக் கட்டி ஆயத்தப்படுத்தியிருக்கிறார். கட்டுதல் என்று ஒரு காரியமும் நமக்கு அங்கிராது. ஆமென்! நிச்சயம்! ஓ வார்த்தையை நான் நேசிக்கிறேன்! எட்டாம் நாளில் பரிசுத்த சபை கூடுதல் ஏழு நாட்கள் மட்டுமேயுண்டு). இந்த எட்டாம் நாளானது பரிசுத்த சபை கூடுதலுக்கென்று திரும்பவும் முதலாம் நாளிற்கு வருகிறது. பழைய சிருஷ்டி யோடு காரியம் நடத்த உலக நேரத்தின்படி ஏழு நாட்களே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சி என்பது இளைப்பாறும் நாளாயிருக்கிறது. தேவன் ஆறு நாள் வேலை செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது போல் சபையும் ஆறு நாள் வேலை செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருக்கிறது. ஆனால் நாம் இன்னும் காலமென்னும் அம்சத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோம். நான் நித்தியத்தைக் குறித்து பேசவில்லை, ஆனால் எட்டு நாட்கள் என்ற காரியம் இல்லை. ஏனெனில் நீங்கள் திரும்பவும் முதலாம் நாளிற்கு வருகிறீர்கள். பாருங்கள்? ஓய்வு நாள் பழைய நியாயப்பிரமாணத்தைக் குறித்துப் பேசுகிறது. அது கடந்து போக வேண்டியதாயிருந்தது அல்லது வேறொன்றிற்கு செல்ல வேண்டியதாயிருந்தது. அது ஒழிந்து போகவில்லை; வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை கைக்கொள்வ தற்கென்ற பிரமாணத்தினின்று வேறொன்றிற்கு சென்றது. முற்றிலுமாக ஒழிந்து போகவில்லை. "கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே இளைப்பாறுதல்” (ஏசா. 28:10-12) என்று ஏசாயா கூறுகிறார். நிழலான நாளைக் கைக்கொள்ளுதல் என்ற பிரமாணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசிக்கிறீர்கள். பரி. பவுல் "இங்கு, நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. நான் உங்களுக்காக பிரயாசப்பட்டது வீணாய் போயிற்றோ என்று உங்களைக் குறித்து பயந்திருக்கிறேன்” என்று குறிப்பிடுகிறார் (கலா. 4:10). உங்கள் அனுபவத்தைக் குறித்து பயந்திருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். நாம் சில குறிப்பிட்ட நாட்களையும் பிரமாணங்களையும் கைக்கொள் கிறதில்லை. நாட்களும், காலங்களும் அல்ல, நீங்கள் மரணத் தினின்று நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறீர்கள். அதுதான் பரிசுத்த சபைக் கூடுதலாகும். ஏழு நாட்கள் என்பது என்ன? அது கடந்து போகிறதாயிருக்கிறது அல்லது நான் கூறியபடி வேறொன்றிற்கு மாறுகிறதாயிருக்கிறது. எட்டு நாள் என்பது புதிய சிருஷ்டியில் தொடர்பாக செயல்படுகிறதாயிருக்கிறது. பழைய சிருஷ்டியுடன் அல்ல, எட்டு நாட்கள் என்பது புதிய சிருஷ்டிப்ப!டியிருக்கிறது. ஏனெனில் எப் ராம் நாளில் தான் நம்முடைய கர்த்தர் மரணத் தினின்று உயிர்த்தெழுந்தார். அங்கு தான் பரிசுத்த சபை கூடுதல் உண்டாயிருக்கிறது. ஓவு நாளையோ, கூடாரப் பண்டி கையையோ, அல்லது பொந்தெகொஸ்தே பண்டிகையையோ ஆராயும் காரியமல்ல. நாம் நீதிமானாக்கப்படுவதற்கென்று இயேசு எட்டாம் நாளன்று உயிர்த்தெழுந்தார்! ஏழு ஓய்வு நாட்களுக்குப் பின்பு அல்லது ஏழு சபையின் காலங்களுக்குப் பின்பு இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்! முதலாம் நாளாகிய எட்டாம் நாள் பரிசுத்த சபை கூடுதலாயிருக்கிறது (பாருங்கள்) நாட்களையும், ஓய்வு நாட்களையும் பெளர்ணமிகளையும் கைக்கொள்ளாமல் நீங்கள் காலங்களைக் கடந்து நித்தியத்தில் பிரவேசிக்கிறீர்கள். நீங்கள் நிர்மூலமாகாமல் வேறொன்றிற்கு மாறிவிட்டீர்கள் (மகிமை) மரணத்தினின்று நீங்கி நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்கள். ஓ, வேதம் நமக்கு போதிக்கிறதை பாருங்கள்? சரி. பழைய நாட்களைக் கைக்கொள்ளுதல் கடந்து போயிற்று. இயேசு எட்டாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அது ஒரு பரிசுத்தமான நாள். அது ஒரு நாளல்ல. அது ஒரு "காரண நாளாக” கடந்து போயிற்று அது நித்தியத்திற்குள் பிரவேசித்துவிட்டது. நாம் குதித்து திரும்பி முதல் நாளிற்குள் வந்து விட்டோம்... பாருங்கள். நித்தியம் என்பது ஒரு வளையம் போன்றது. அதில் எங்கும் திரும்பும் முனையை நீங்கள் காண முடியாது. ஒரு வட்டத்தில், நின்று விடக் கூடிய இடத்தை உங்களால் காண முடியாது. ஏனெனில் நீங்கள் அதில் தொடர்ந்து பெற்றுக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு தூரம் செல்கிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு அக்கரையில்லை. ஏனெனில் நீங்கள் இன்னுமாக தொடர்ந்து சென்றுக் கொண்டேயிருக்கிறீர்கள். நீங்கள் இவ்விதமாய் இங்கு ஆரம்பித்து. இந்த தரையைக் கடந்து. பூமியைக் கடந்து, பூமிக்கு அப்பாலும் கடந்து இன்னுமாக சென்றுக்கொண்டேயிருக்கிறீர்கள். (ஒலிநாடாவில் செய்தி பதிவா காமல் வெற்றிடமாயுள்ளது - செய்தியில் ஒரு பாகம் காணப் படவில்லை).... சிருஷ்டிக்கப்பட்டது சாத்தானால் தாறுமாறாக்கப் பட்டது. மகத்தான பொன்மணியானது ஓசையிடும்போது, எக்காளமானது முழுங்கும்போது இங்கு சாத்தானால் தாறு மாறாக்கப்பட்டது - (சிருஷ்டிக்கப்பட்டதல்ல) எல்லாம் கடந்து போகும். ஆதியிலே ஏதேனில் ஓர் இணைக்கும் கம்பமானது உண்டாக்கப்பட்டிருந்தது. மனிதன் இந்த உலகத்திற்கு வந்து விழுதலில் பிரவேசித்த போது ஒரு சிறிய ஆட்டுக்குட்டி தன் இரத்தத்தை சிந்தினது; அந்த இரத்தமானது மகத்தான ஆட்டுக்குட்டியின் வருகையையும் அதன் இரத்தம் சிந்துதலையும் அறிவிக்கிறதாயிருந்தது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அது வரும் என்று காத்திருந்து நீதிமானாக்கப்பட்டவர்களை இணைப்ப தற்கென்று கல்வாரியில் சிலுவை உயர்த்தப்பட்டது. நான் கூறிக்கொண்டிருக்கிறதான இரட்சிப்பென்னும் கயிறும் இரத்தமும் மீட்கும் வல்லமையும், புதிதாக்கப்பட்ட பூமிக்கு கர்த்தர் வருகின்ற இந்த புதிய காலத்தில் அதே அமைப்பின் மூலமாக மனிதனையும், பூமியையும் மீட்டு நித்தியத்திற்குள் அவர்களை திரும்பவும் எழச் செய்யும். முன் குறிக்கப்படாதவர்களையும், தேவனற்றவர்களையும் நரகமானது எரித்துவிடும். நீங்கள் இதை காண்கிறீர்களா? கவனியுங்கள், நித்திய இராஜ்ஜியத்தையுடைய நித்திய இராஜாவாகிய இயேசு நம்மை நீதிமான்களாக்குவதற்காகவும், நித்திய ஜீவனுக்குள் ஞானஸ்நானம் பண்ணுவிக்கவும் எட்டாவது நாளில் எழுந்தார். ஏழு நாட்களில் அல்ல; அல்லது மற்ற எந்த நாட்களிலாவதல்ல. நான் பேசுகின்ற இந்த உலகமானது வேறொரு நித்திய காலம் வருகிறதைக் குறிக்கிறதாயிருக்கிறது. ஐம்பது நாட்களுக்குப் பின்பு அல்லது ஏழு ஓய்வு நாட்களுக்குப் பின்பு வேறொரு பரிசுத்த சபை கூடுதல் திரும்பவும் வருகிறதை கவனியுங்கள். என்ன நடந்தது? பெந்தெ கொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவர் 7-ம் நாளன்று இல்லை, எட்டாம் நாளன்று ஊற்றப்பட்டார். அவர் உயிர்த் தெழுந்த பின்பு சரியாக 7 ஓய்வு நாட்களுக்குப் பின்பு எட்டாவது நாள் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார். பாருங்கள்? ஆகவே வாரத்தின் முதலாம் நாளிற்கு உங்களை கொண்டு வரவேண்டு மானால் திரும்பவும் ஏழு வாரங்கள் உண்டாக வேண்டும். சரியாக அப்படித்தான். பாருங்கள்? இயற்கையான காரியத்திற்கு நாம் அப்பாற்பட்டு இருக்கிறோம். அது தான் நம்முடைய பரிசுத்த சபை கூடுதல். ஆரம்பமே இல்லாத முன்குறிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவேனாடு தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்தல்! அது எந்த நாளிலும் தொடங்கப்பட்டதல்ல. நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் இரட்சிக்கப்படவில்லை! நீங்கள் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். இயேசு வந்து உங்களை மீட்டார். ஆனால் நீங்கள் ஆதியிலிருந்தே இரட்சிக்கப்பட்டவர்களாயிருந்தீர்கள். ஏனெனில் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே நித்திய ஜீவனையுடையவர்களாயிருக் கின்றீர்கள். டிரவுட் என்னும் ஒரு ஜாதி ஆற்று மீன் ஒருபோதும் தவளைக் குஞ்சாக மாற முடியாது. ஒருவேளை தவளைக் குஞ்சோடு அது தண்ணீரிலே இருந்தாலும் அது ஆரம்பத்திலிருந்தே டிரவுட் என்னும் மீனாயிருக்கிறது. வலைதான் அதை பிடித்தது. ஆனாலும் அது ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் உள்ளது. (பாருங்கள்) இப்பொழுது நாம் காலங்களினின்று வெளிவரவில்லை. இல்லையா? திரும்பவும் வசனத்திற்குள் வருவோம். ஐம்பது நாட்களுக்குப் பின்தான் அது வந்தது. எட்டு என்ற எண் வாரத்தினோடு கணக்கிடப்பட முடியாது. வாரத்திற்கு எட்டு நாள் என்ற விதமாய் நீங்கள் கணக்கிட முடியாது. ஏனெனில் ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் மட்டுமே உண்டு. நீங்கள் எப்படி கணக்கிட விரும்பினாலும், ஞாயிற்றுக்கிழமை தான் வாரத்தின் முதல் நாளாகிறது. பாருங்கள்? நீங்கள் 7 என்று எண்ணி திரும்பவும் அதற்கு தான் செல்வீர்கள். ஆகவே, இங்கு நாம் வாழ்கின்ற வரை இத்தகைய ஒப்புவமைகளினூடே செல்ல வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் - 8 என்னும் எண்ணை சந்திக்கும்போது நித்தியத்திற்கு செல்கின்றவர்களாயிருக்கிறீர்கள். பிரமாணங்களினாலும், சாக்கிரமந்துகளினாலும் உங்களால் வரமுடியாது, நீங்கள் முன்குறித்தலினால் மட்டுமே வருகிறீர்கள். ஆமென்! அதுதான் உண்மையான பரிசுத்த சபை கூடுதலாகும். ஏழாம் சபையான பெந்தெகொஸ்தே சபையை நாம் முடித்துக் கொண்டிருக்கிறோம். உங்களால் இதை காண முடிகிறதா? நாம் பரிசுத்த சபை கூடுதலுக்கு பிரவேசித்துக் கொண்டி ருக்கிறோம்! சபையானது அழைக்கப்பட்டு ஒரு சந்திப்பிற்கோ, ஸ்தாபனத்திற்கோ செல்லவில்லை. மாறாக நாம் நித்திய ராஜாவின் நித்தியத்திற்குள் தத்ரூபமான, உண்மையான நித்தியத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம். காலங்களும் நேரங்களும் இங்கு முடிந்து விடுகின்றன. நீங்கள் அங்கு ஆரம்பித்தபடியால், எங்கிருந்து வந்தீர்களோ அந்த நித்தியத்திற்குள் கடந்து செல்கின்றீர்கள். ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு. அது தேவன், நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருப்பீர்களென்றால் அதை வெளிப்படுத்தும் தன்மையாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள். பாருங்கள்? இல்லையென்றால் நீங்கள் எவ்விதத்தினாலாயினும் அங்கு செல்ல இயலாது. "பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44). இந்த பழையக் காரியங்களெல்லாம் ஒழிந்து போகின்றன. ஆனால் இதுவோ ஒழிந்து போவதில்லை, ஆகவே, அது நித்தியத்தைக் குறித்து பேசுகிறதாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நித்தியமாயிருக்கிறார். அப்படியானால் நீங்கள் என்றென்றும் நித்தியத்தில்தான் இருந்திருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது தான் என்ன நடந்தது என்று புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நித்திய நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்டவர்கள். ஏனெனில் தேவனில் இருந்த தன்மை யின் ரூபமாக நீங்கள் வெளிப்பட்டீர்கள், உங்களை மனிதர்களாக சிருஷ்டித்து வெளியே கொண்டு வர ஒரு பூமியையும் அவர் உண்டாக்கினார்; பாவமானது இங்கு வந்து அவருடைய வழியை தாறுமாறாக்கிற்று. இருந்தாலும் நீங்கள் வந்தீர்கள். ஆனால் இவ்வுலகத்தோடு நீங்களும் இழந்து போனவர்களாயிருந்தீர்கள். ஆகவே, அவர் வந்து தம்முடைய வெளிப்படுத்தின் தன்மைகளை மீட்டெடுத்தார். அதை போலவே இந்த பூமியையும் அவர் மீட்கிறார். அப்படியானால் அவருடைய நோக்கங்கள் சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன. பாருங்கள்? அல்லேலூயா! ஓ, அது எனக்கு மிகவும் நல்லதை செய்திருக்கிறது! நமக்கு முன்னே இருக்கும் காரியத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது எபேசியர் 1:9ஐப் பார்ப்போம். இங்கு காலங்கள் என்றோ, ஏழாம் நாளென்றோ குறிப்பிடாமல் காலங்களின் நிறைவு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. காலங்களின் நிறைவு வரும்போது, அதாவது இனியும் காலம் இல்லையென்கிற போது, நீங்கள் நித்தியத்தில் செல்கின்றீர்கள் என்று பொருள் படும். லூத்தரின் காலம் முடிவு பெற்றது; மெத்தோடிஸ்டுகளின் காலம் முடிவு பெற்றது : ஏழாம் சபையான பெந்தெகொஸ் தேயின் காலமும் முடிவுப் பெற்றுக் கொண்டிருக்கிறது. (இப்பொழுது நடந்துக் கொண்டிருப்பது) அதன் பின்பு நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? நித்தியத்திற்கு. இனிவேறு ஏழு என்பதில்லை; மூன்று என்பதில்லை, எண்களும், காலங்களும் இல்லாத நித்தியத்திற்கு செல்கிறோம். ஆமென்! ஓ! நீங்கள் இதை காண்கிறீர்களா? காலங்கள் நிறைவேறின் பின்பு, ஆயிர வருட அரசாட்சியின் பின்பு, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பின்பு பாவம் எல்லாம் ஒழிந்துவிடும். பரலோகத்தின் அக்கினி யினால் இவ்வுலகம் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பின்பு, எல்லா பொல்லாங்கும், எல்லா சோதனைகளும், எல்லா பாவமும், எல்லா கிருமிகளும், எல்லா பிசாசுகளும் அழிந்து விடும். (இப்பொழுதே ஒப்புவமையாயிருக்கிறது). பின்பு தேவன் என்ன செய்வார்? பாவம் எல்லாம் ஒழிந்து போய் விட்டபடியினால் அவர் இப்பூமியின் மேல் வந்து அமருவார் (பாருங்கள்) பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகத்தை உங்களுக்குத் தரும்போது அதையேத் தான் செய்கிறார். அவர் உங்களுக் குள்ளாக வந்து வாசம் செய்கிறார். அப்பொழுது தான் நாம் கிறிஸ்து இயேசுவிலே ஆவிக்குரிய உன்னதங்களில் அவரோடே வீற்றிருக்க முடியும். ஏனெனில் நாம் ஏற்கனவே அவருக்குள் இருக்கிறோம்! இனி இருப்போம் என்றல்ல, நாம் இப்பொழுதே கிறிஸ்து இயேசுவில் இருக்கிறோம். அதற்குள்ளாக நாம் எப்படி பிரவேசிக்கின்றோம்? - பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்தினால் அதற்குள் பிரவேசிக்கின்றோம். ஒரே ஆவியினால் நாமெல்லோரும் கிறிஸ்துக்குள் ஞானஸ்நானம் பண்ணப் படுகிறோம். நமக்குள் இருக்கும் ஆவிக்கு அவரே மகத்தான ஆவிக்குரிய ராஜாவாயிருக்கிறார். ஏனெனில் நாம் ஆதியிலேயே அவருக்குள் இருந்தோம். ஆதியிலே தேவன் தம்மை தாமே உருவகிக்க எண்ணமுடை யவராக இருந்து உங்களையும், மற்றவர்களையும் என்பது போல பலக் காரியங்களையும் சிந்தித்தார். அது அவருடைய சிந்தனைகள் (பாருங்கள்?) ஆகவே, அவர் தம்முடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். எவ்விதம்? " உண்டாகக்கடவது! உண்டாகக்கடவது” என்றார். அது அப்படியே ஆயிற்று. அதன் பின்பும், அவர் தொடர்ந்து, "உண்டாகக்கடவது” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். "தேவன் எங்களிடம் பேச வேண்டாம்” என்று ஜனங்கள் சொல்லுமளவும் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். அதன் பின்பு, அவர், "சரி, நான் ஒரு தீர்க்கதரிசியின் மூலமாக இனி ஜனங்களோடு பேசுவேன்” என்றார். பாருங்கள்? அதிலிருந்து தீர்க்கதரிசி, "அங்கே அது வரும்; அது நடக்கப் போகிறது? என்ற விதமாய் பேசினான். இதை புரிந்துக் கொண்டீர்களா? காலம் நிறைவேறின் பின்பு, பூமியை ஞானஸ்நானமானது தகுதியாக்கின் பின்பு, இனி வியாதிகளோ, முட்களோ, மரணத்தின் பிரதிநிதியோ, மரணமோ, வருத்தமோ, மாரடைப்போ, வயோதிபமோ இவைகள் யாவும் இல்லாமற் போயிற்று. இயற்கையானது ஒன்றுமில்லை - எல்லாம் நித்தியம். ஆகவே, அவருடைய தன்மை வெளிப்படுத்தப் பட்டாயிற்று. ஏனெனில் அது ஆரம்பத்திலிருந்தே அங்கிருக்கிறது. அதைதான் அவர் சிந்தித்தார். பின்பு என்ன நடந்தது? இங்கே பூமியின் மேல் ஆதாமையும், ஏவாளையும் வைத்து, "நீங்கள் இப்பொழுது பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” (ஆதி. 1:28) என்றார். நீங்கள் புசித்து உங்களுடைய சரீரங்களை உண்டாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய வழியில்தான் அதை செய்ய வேண்டுமென்று அவர் நியமித்திருந்தார். ஆனால் அவருடைய திட்டத்தை பாவம் குறுக்காக வந்து தடை செய்து விட்டது. அதிலிருந்து அவள் (காலம்) அதேவிதமாகவே உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறாள். இயேசு என்ன செய்தார்? தேவன் ஒரு மனித தோற்றத் தில் தன்னை வெளிப்படுத்தி, தன் ஜீவனைத் தந்து மற்றவர்களை இரட்சித்தார்! இதை புரிந்துக் கொண்டீர்களா? அவர் தொடர்ந்து இங்கேயே இருக்காமல் (அவர் ராஜாவாயிருந்தார்) எல்லாம் முடிந்த பின்பு, தேவனுடைய நோக்கம் நிறைவேறின பின்பு அவர் திரும்பவும் இழுத்துக் கொள்ளப்பட்டார். இங்கே ஒரு நித்திய இராஜா தம்மை திரும்பவும் தம்முடைய நித்திய பிரஜைகளோடு மனித சரீரத்தில் வெளிப்படுத்துகிறார். இந்த விதமாகத்தான் இது சரியாக நிகழ்ந்திருக்கிறது. பாவமும், பிசாசும். ஒழிந்து போயின. இப்பொழுது யாவும் ஒழிந்து போயின், இனி இது என்ன செய்யப் போகிறது? இந்த பூமியானது இப்பொழுது பரேலாகம் அமருவ தற்கான இடமாயில்லை. பாவத்தைப் பாருங்கள். இப்பாவம் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஒரு மனிதனோ, பெண்ணோ , வாலிபனோ, வாலிபப் பெண்ணோ அல்லது தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவர் களோ, யாராயிருந்தாலும் அதைக் குறித்தெனக்கு அக்கரை மில்லை - அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல் பிரசங்கப்பீடத்திற்குச் செல்ல தகுதியற்றவர்களாயிருக் கின்றார்கள். நீங்கள் தேவனின் பரிசுத்த , அக்கினியால் சுத்திகரிக்கப்படும் வரை கர்த்தருடைய பந்தியிலோ அல்லது கால் கழுவுதலிலோ அல்லது மற்றவைகளிலும் பங்கு பெற உங்களுக்கு எந்த வித உரிமையுமிலலை. அக்கினி ஸ்தம்பம் காட்சியளிக்க. பரிசுத்த பூமியில் அவரை சந்தித்தவராய், தான் எங்கே நிற்கிறார் என்பதை அறிந்தவராயிருந்த மோசேயைப் போல் நீங்கள் இல்லாவிட்டால் ஒரு மனிதனுக்கும் பிரசங்கிக்க எந்த வித உரிமையும் இல்லை. நாம் எப்படி செல்கிறோம் என்பதை இப்பொழுது கவனியுங்கள். பரலோகம் இப்பூமியின் மேல் வாழ்வதற்காக இப்பூமியானது (எல்லாக் கிருமிகளும் ஒழிந்து போயின) ஞானஸ்நானம் பெற்ற பின்பு தகுதியுடையதாகிறது. கிறிஸ்து இயேசுவோடு உன்னதத்தில் உட்கார்ந்திருப்பதற்கு இதை ஒப்புவமையாக்கிக் கொள்ளுங்கள். இந்த அசுத்தத்திலிருந்து (அந்த சிறு பெண்மணி இருந்தது போல்) தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட தன்மைக்குள் சென்று விட்டோம். நாம் இப்பொழுது தேவ குமாரர்களாக இருக்கிறோம் - இருக்கப் போகிறோம் என்றல்ல, "நல்லது. இந்த ஆசாரியனைப் பாருங்கள்; அவன் ஒரு தேவகுமாரன் இல்லையா?” என்று நீங்கள் கூறலாம். அவன் எவ்விதம் இல்லை என்று நிரூபணமாயிற்று; அவனால் எதை புரிந்துக் கொள்ள முடியவில்லை? "நான் வேதத்தை விசுவாசிக்கிறேன்” என்று கூறினானா? நிச்சயமாக, ஆனால் அந்த மணி நேரத்திற்குரிய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லையே. அவனிடம் மிருந்ததெல்லாம் அவன் சார்ந்திருந்த ஏதோ ஒரு கூட்டத்தினி மிருந்து படிப்பறிவினால் பெற்றுக் கொண்ட ஞானமே. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது பாருங்கள்! அது மிகவும் கடினமான வார்த்தை என்று நான் அறிவேன். இருந்தாலும் அது தான் உண்மை : அந்த நாளுக்கென்று உரைக்கப்பட்ட வார்த்தை சரியாக இங்கே இருந்தது. அவன் படித்தவனா யிருந்தாலும், புகழ் வாய்ந்த மனிதனாயிருந்த போதிலும் அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையே. ஏன்? எவ்வளவுதான் அவன் படித்திருந்தாலும் முன் குறித்தல் என்னும் பிரதிநிதித்துவம் அவனிடமில்லையென்றால் காரியம் ஒன்றுமில்லை. பாருங்கள்? முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதை செய்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே. நீங்கள் அதை ஏன் செய்கிறீர்கள் என்றால் அது உங்களிலுள்ள முன்குறித்தலை நிரூபிக்கிறது. நீங்கள் நித்திய ஜீவனையுடைய வர்களாயிருப்பீர்களென்றால் எல்லாக் காலங்களிலும் நீங்கள் தேவனுடைய பாகமாயிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒருவரே நித்தியர். நீங்கள் இதைக் காணமுடிகிறதா? ஓ இதை சிந்தியுங்கள். மகத்தான ஆயிரம் வருட அரசாட்சியினூடே என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். பாவம் ஒழிந்து ஆயிரம் வருட அரசாட்சி அமைக்கப்படு கிறது. மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்குள் செய்கிறது போல பூமியையும் செய்கிறார். ஆவிக்குரிய மரணம் இப்பொழுது ஒழிந்து போயிற்று. இயற்கையான மரணம் கூட நம்மைவிட்டு ஒழிந்துபோய் கிறிஸ்துவின் மகிமையான பிரசன்னத்தில் உன்னதத்தில் வாசம் செய்து கொண்டிருக்கிறோம். ஞானஸ்நானம் பெற்ற ஒரு தேவனுடைய பரிசுத்தவானுக்கு ஆவிக்குரிய மரணம் என்ற காரியம் இல்லை. "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற வெனவனும் என்றென்றைக்கும் மரியாமலுமிருப்பான்” (யோ. 11:25, 26) என்று இயேசு கூறினார். எல்லா வேத வசனங்களும் நிச்சயமாக நிறைவேற வேண்டும். நீங்கள் மரிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் நித்திய ஜீவனையுடையவராயிருக்கிறீர்கள். மீட்பர் வந்த போது தான் அதை நீங்கள் புரிந்துக் கொள்ளும்படி செய்தார். அதன் காரணமாகத் தான் நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிற காலத்தை உங்களால் காண முடிகிறது. எத்தனை பேர் அவ்விதம் காண்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள்: நன்றி. பாருங்கள்? நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிற காலத்தை உங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது. மெத்தோடிஸ்டுகள், "நீங்கள் சப்தமிட்டால் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்கிறார்கள். அநேகர் சப்தமிடு கின்றனர். ஆனால் அதை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். பெந்தெகொஸ்தேயினர், "நீங்கள் அந்நிய பாஷை பேசினால் அதை பெற்றுக் கொண்டீர்கள்” என்கிறார்கள். அநேகர் அந்நிய பாஷை பேசுகின்றனர். ஆனால் அதை பெற்றுக் கொள்ளவில்லை. கவனியுங்கள். அந்த பரிசேயர்கள் எல்லாவிதமான அமைப்புகளை பெற்றிருந்தாலும் வார்த்தையானது வெளிப்படுத்தப்பட்டபோது அவர்களால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. பாருங்கள்? நீங்கள் மணவாட்டியாயிருப்பீர்களென்றால் ... மணவாட்டியானவள் புருஷனுடைய பாகமாயிருக்கிறாள். அந்த புருஷனுடைய எந்த வார்த்தை பாகமாய் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை புரிந்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் மணவாட்டி யாயிருக்க முடியாது. எத்தனை பேர் அதை காண்கிறீர்கள்? மற்றவர்களுடைய ஸ்தானத்தை நீங்கள் புரிந்து கொள்வதல்ல. நீங்கள் உங்களுடைய ஸ்தானத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மோசே, நோவாவின் செய்தியோடு வந்திருப்பாரென்றால் நோவா எவ்விதம் அதன் பாகமாயிருக்க முடியும்? அது கிரியை செய்திருக்காது. பாருங்கள்? அது வேறொரு காலமும் அதற்குரிய தீர்க்கதரிசனமுமாயிருக்கிறது. அங்கே வார்த்தையின் வேறொரு பாகம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. அவர்கள் வாரத்தின் வேறொரு நாளில் வாழ்ந்தார்கள். செவ்வாய் கிழமையின் கிரியை புதன் கிழமையில் செய்யப்படக்கூடாது. புதன் கிழமையின் கிரியை புதன்கிழமையில் தான் செய்யப்பட வேண்டும். பாருங்கள்? சனிக்கிழமையில் சனிக்கிழமையின் கிரியை செய்யப்பட வேண்டும். பரிசேயரும், வேதபாரகரும், "எங்களுக்கு மோசே போதும்” என்றார்கள். "நீங்கள் மோசேயை அறிந்திருப்பீர்களென்றால் என்னையும் அறிந்திருப்பீர்கள்” என்றார். "என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்" இதோ மோசே என்னைக் குறித்து சொல்லி யிருக்கிறானே என்று இயேசு கூறினார். இதன் பொருளை அடைந்துக் கொண்டீர்களா? ஓ, பின்னும் இயேசு, "பரிசுத்த ஆவியானவர் வரும்போது நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) (பாருங்கள்?) நீங்கள் எந்த நாளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் - நினைப்பூட்டுவார். வேறொரு காரியம். இனி வரப்போகிற காரியத்தையும் உங்களுக்குக் காட்டுவார். திரும்பவும் தீர்க்க தரிசனத்திற்கு உங்களை கொண்டு வருவார். புதிய பூமியில் வானம் ஒருபோதும் இருள் அடையாது. இந்த வர இருக்கும் பூமியில் பிசாசு கட்டப்படுவான். குற்றம் சொல்லுகிறவனாகிய பிசாசு இன்றைக்கு சுதந்திரமாக இருக்கிறான். புதிய பூமி வரும்போது, அவன் கட்டப்பட்டு அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அதன் பின்பு இந்த பூமியில் .... அதைக் குறித்து சில நிமிடங்கள் இப்பொழுது பார்ப்போம். இந்த புதிய பூமியில் வானங்கள் ஒருபோதும் இருளடையாது. அது சாபத்தினால் தான் இருளடைந்தது .... கோபமடைந்த மேகங்களால் இனியும் அது இருளடைவது ' இல்லை. காற்றுகள் திரும்பவும் வீசி மரங்களையும், வீடுகளையும் எல்லாவற்றையும் இனி கிழித்துப் போடப் போவதில்லை. மின்னல் குறுக்காக அடித்து சாலையில் போகும் மனிதனையும், கட்டிடத்தையும் அழிக்கப் போவதில்லை. பாருங்கள்? இனிமேல் அவைகள் இல்லை. வீடுகளை அழித்து சிறுபிள்ளைகளை கொல்லும் சூறாவளிக்காற்றும் புயற்காற்றும் இனி வீசப்போவதில்லை . அ , அஹா. அழிக்க முயற்சிக்கும் காரியங்கள் இனி இருக்கப் போவதில்லை. சாத்தான் கட்டப்பட்டுவிட்டான். இப்பொழுது நமக்கு சிறிது நேரமிருந்தால் நலமாயிருக்கும் என்று வாஞ்சிக்கிறேன்; இப்பொழுது நான் வசனங்களைத் தரப்போகிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டியுள்ளதால் அதிக நேரமெடுக்க மாட்டேன். . பரலோகமும் பூமியும் சந்தித்தன. தேவனும் மனிதனும் ஒப்புரவாகினர். மீட்கப் - ஏதேன் தொடங்கி விட்டது. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களை ஏற்றுக் கொண்ட போதும், பாவமும் எல்லா சாபமும் உங்களை விட்டு போனது போல் எல்லா சாபமும் போய் விட்டது. நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை; அவர் உங்களை ஏற்றுக் கொள்கிறார். (ஏனெனில் அது தேவனுடைய தன்மையாயிருக்கிறது : பரிசுத்த ஆவியென்றால் தேவனுடைய ஆவியாயிருக்கிறது, அப்படியானால் அது ஒரு தன்மையாயிருந்து அந்த தேவனுடைய தன்மை உங்களை ஏற்றுக் கொண்டது. ஏனெனில் நீங்கள் அந்த நோக்கத்திற்காக முன் குறிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பாவத்திலே பிறந்திருந்தாலும் தேவனுடைய அந்த தன்மையைக் கொண்டிருந்ததால் அவர் கீழிறங்கி வந்து உங்களை ஆட்கொண்டார். ஆகவே நீங்கள் இப்பூமியில் உங்களை வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் அங்கேயிருந்தீர்கள். ஆனால் இந்த இடத்தில்தான் நீங்கள் இருக்க வேண்டும். பாருங்கள்? பாவம் தன்னுடைய வல்லமையை இழந்துவிட்டது. அதுதான் சரி, பரிசுத்த ஆவியானவர் வரும்போது பாவம் செய்ய வேண்டுமென்ற ஆசை உங்கள் இருதயங்களிளிருந்து நீங்கிப் போயிற்று. நீங்கள் மீட்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அப்படி யானால், பூமியானது மீட்கப்படும் போதும் அதே காரியம்தான் சம்பவிக்கிறது. சாபமும், புயல்களும், சூறாவளிகளும், காற்றுகளும் இனிமேல் இல்லை, ஏனெனில் நீங்கள் ஒப்புரவாகி விட்டீர்கள். மனிதனும், தேவம் சந்தித்து விட்டனர். புதிய பூமி, ஏதேளின் அழகை திரும்பப் பெற்றுக் கொள்ளும். புதிய பூமி தன்னுடைய அழகை பரப்பும். அக்கினி ஞானஸ்நானம் பெறும்போது, சற்று இதை நினைத்துப் பாருங்கள். அவள் பற்றிக் கொண்டு எரிந்து உக்கிரமான அக்கினியினால் மூலங்கள் எரியம் உலகத்தின் எல்லா கிரியைகளும் எரியும் தண்ணீர்களெல்லாம் வெடித்து அக்கினியினால் கொளுத்தப்படும். எரிமலைகள் வெடித்து அவைகளின் குழம்பு ஆயிரம் மைல்கள் உயரே ஆகாயத்தில் பறக்கும். தேவனுடைய பரிசுத்தாவியின் நியாயத்தீர்ப்பு என்னும் பகிஷ்கரிக்கும் அக்கினி எல்லாப் பாவங்களையும் சுத்திகரிக்கும். சாத்தான் கட்டப்பட்டு அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். உங்களை அழிக்கத்தக்கதாக மிருகம் அங்கு இருக்காது. நந்தவனங்களில் நீங்கள் நடக்கும் போது சர்ப்பம் அங்கேயிருந்து உங்களைப் பார்த்து புஸ்ஸென்று சப்தத்தோடு உங்களை கடித்து தன்னுடைய விஷத்தை இனிமேல் உங்கள் மேல் செலுத்தாது. ஓ, என்னே அற்புதமாயிருக்கிறது! கவனியுங்கள், புதிய பூமியில் ஒருவரும் பழுப்பு நிற புல்லைப் போலாசி கல்லறைக்குச் செல்வதில்லை. மனிதனும் தேவனும் ஒன்று கூடினார்கள். மணவாட்டியும் மணவாளனும், பரலோகமும் பூமியும் ஒன்றை ஒன்று கட்டி அணைத்துக் கொண்டன. தேவன் தாமே இறங்கி வந்து மனுஷனோடு வாசம் செய்கிறார். அவருடைய வாசஸ்தலம் மனுஷர்களிடத் திலிருக்கிறது. இனி ஒருபோதும் பாவமும், வருத்தமும் இருப்பதில்லை. தன் குழந்தைக்காக ஒரு தாயாரின் கண்களினின்று சிந்தப்படும் கண்ணீர் இனி ஒருபோதும் அங்கு கிடையாது. ஆமென்! புதிய பூமியில் அது இருக்காது. ஏனெனில் அது மீட்கப்பட்டுவிட்டது. அது அவருடையதாயிருந்ததால் அவருடையவர்களும் அதிலிருந்து மீட்கப்பட்டு விட்டார்கள். நீங்கள் அந்த பூமியின் பாகமாயிருக்கிறீர்கள் என்று கவனித்துப் பாருங்கள். அது சரியா? நீங்களிருவரும் திரும்பவும் ஒன்றாயிருப்பதற்கான உங்களை மீட்ட வண்ணமாகவே பூமியையும் மீட்டு கொண்டார்; ஓ, அது எவ்வளவு தெளிவாயிருக்கிறது. பாருங்கள்? நீங்கள் அதன் பாகமாயிருப்பதனால் நீங்கள் மீட்கப்படத்தான் வேண்டும். இரத்தம் உங்கள் மேல் சொட்ட வில்லையென்றால் நீங்கள் இன்னுமாக மீட்கப்படவில்லையென்றும், அழைக்கப்படவில்லையென்றும் பொருள். இரத்தத்தினால் கழுவுவது போலவே அக்கினியினாலும் செய்கிறார். இரத்தம் அதன்மேல் விழுந்திருந்த போதிலும் அது தேவன் வாசம் செய்யத்தக்க ஸ்தலமாக வேண்டுமானால் அது அக்கினியினால் சுத்திகரிக்கப்பட வேண்டும் (அது சரி). தேவன் ஏற்கனவே வசிக்க ஆரம்பித்துவிட்டார். இப்பூமியின்மேல் அவருடைய பரிசுத்தவான்களின் இருதயங்களில் தேவனுடைய இராஜ்ஜிய மானது இப்பொழுதிருக்கிறது. அது அவர் ஆதியிலே ஆரம்பித்த அவருடைய தன்மையாயிருக்கிறது. இப்பொழுதோ அவருடைய தன்மைகள் மீட்கப்பட்டுவிட்டன. எதற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்? தம்மால் முன் குறிக்கப்பட்ட திட்டத்தின் சரியான நிறைவேறுதலின்படி தம்முடைய தன்மைகளை வைக்கத் தக்கதாக இப்பூமியை மீட்கும்படிக்கே அவர் காத்துக் கொண்டி ருக்கிறார். இதைக் காண்கிறீர்களா? கவனியுங்கள்: கல்லறைகளும், கண்ணீரும், இரத்தம் சிந்து தலும் இனி கிடையாது. இரத்தம் சிந்துதலினால் அவள் இனி ஒருபோதும் ஈரமாகாமலும், யுத்தங்களும், பனிகாலத்தின் மேகங்களும், அவளுடைய மார்பின் மேல் இனி பனி பெய்வதும், அவள் மேலுள்ள புற்களை இனி ஒருபோதும், சூரியன் தகிப்பதுமில்லை. அல்லேலூயா! அவள் அக்கினி ஞானஸ்நானம் பெற்ற பின்பு வனாந் திரமும்... இனி ரோஜா பூக்களை விளைவிக்கும். அந்த அடைப்பட்ட வனாந்திரமானது ஒரு நாளில் ரோஜாவைப் போன்று மலரும் (தேவன் அதை சொல்லியிருக்கிறார்). இப்பொழுது அதின்மேல் கள்ளிச் செடிகளும், முட்களும் காணப்படுகின்றன. ஆனால் அக்கினி ஞானஸ்நானம் என்ற ஒன்று அவளுக்கு வருகிறது. மனிதனுக்குள்ளிருக்கும் கசப்பு. விரோதம், கூக்குரல், இவை களெல்லாம் அக்கினி ஞானஸ்நானம் வரும்போது சென்று விடுவது போல் இனி ஒரு போதும் பொறாமையும், மற்றக் காரியங்களும் அங்கு இல்லாமல் முற்றிலும் அது தேவன் தங்கும் இடமாக மாறிவிடுகிறது. அங்கே அவரை சந்திக்கவிருக்கும் பிரஜைகள் அவர்கள் தாம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆமென்! ஓ! அது ஒரு வெறும் கதையன்று; அது தான் உண்மை . அதை தான் தேவன் கூறினார். அதை தான் அவர் வாக்குத்தத்தம் செய்தார். அங்கு தான் மணவாட்டி செல்லப் போகிறாள். வனாந்திரமும் ரோஜாவைப் போன்று செழிக்கும். சாத்தானும் பாவமும், பாவிகளும் அழிந்து விடுவார்கள். ஒரு சமயம் பிரதான தூதனாக இருந்த சாத்தான் செய்த எல்லா தீய காரியங்களும் அழிக்கப்பட்டு விடும். அவர் கூறியபடி நடக்காத ஆத்துமாக்களை அழிப்பார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் தம்மையே அழித்துக் கொண்டு தாம் தேவனாய் இருக்க முடியாது. ஆகவே ஆத்துமா உலகத்திற்குரியதாயிருந்தால் அது அழிக்கப்படத்தான் வேண்டும், ஆனால் அது தேவனோடு நிச்சயமாயிருந்தால், அது ஒருபோதும் அழிக்கப்பட முடியாது. ஆகவே ஆத்துமா உலகத்திற்குரிய தாயிருந்தால் அது அழிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் அது தேவனோடு நித்தியமாயிருந்தால், அது ஒருபோதும் ஆரம்பிக்கப்படாத நிலைமையில் தேவனில் ஒரு பாகமாயிருந்து ஒருபோதும் அழிக்கப்பட முடியாது. ஆமென்! எவ்வளவு அழகாயிருக்கிறது! சபை அதைக் காண வேண்டும். ஜனங்களே, நீங்கள் செய்த யாவும் இங்கிருக்கின்றன. இதை தான் நான் கூற முயற்சிக்கிறேன். அதில் சில காரியங்களை நான் ஒதுக்கி விடுகிறேன். ஏனெனில் திரும்பவும் அக்காரியத்திற்கு நான் வர விரும்புகிறேன். சாத்தானும், பாவிகளும் கூட நிரந்தரமாக அழிக்கப்படு கிறார்கள். சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது. அப்படி செய்வானானால் அவன் தேவனாகிவிடுவான். பாருங்கள்? சிருஷ்டிக் கப்பட்டவற்றை தாறுமாறாக்கமட்டும் அவனால் முடியும். ஜீவனின் தாறுமாறே மரணமாகும். ஆகவே தாறுமாறு ஒழியும் போது இனி மரணம் அங்கிருப்பதில்லை. விருத்தாப்பியம் மரணத்தின் அடையாளம். ஆகவே விருத்தாப்பியம் ஒழியும் போது இனி மரணமும் இல்லை. அங்கு ஜீவன் உண்டாகிறது. தாறுமாறின் எல்லா அடையாளங்களும் அழிந்து போகின்றன. முட்களும் நெரிஞ்சில்களும் பாவத்தின் அடையாளம். அவைகளோடு இப்பூமி சபிக்கப்பட்டதாயிருக்கிறது. வியாதியும் அதனால் வருகிறது. மரணம், இரத்தம் சிந்துதல் ஆகிய இவைகளெல்லாம் ஒழிந்து போய்விடும். அந்த புற்களை பரிசுத்தமே தவிர வேறொன்றும் இனி தொடுவதில்லை. மீட்கப்பட்டாயிற்று. ஓ, நான் நலமாக உணர்கிறேன். தேவனும் அவருடைய சிருஷ்டிப்பும், அவருடைய சிருஷ்டிப்பின் ஜீவன்களும் அவருடைய சொந்த இரத்தத்தினால் மீட்கப்பட்டன; அவருடைய சொந்த வழி முறையான சுத்திகரிப்பின்படி, கிருமி நாசனியின்படி துப்புரவாக்கப்பட்டது. நாம் கொண்டிருக்கும் மிகச் சிறந்த அழிக்கும் சக்தி (துப்புரவாக்குதல்) அக்கினியே. எவைகளையாவது எடுத்து சவுக்காரத்தை அல்லது ரசாயனத்தை கொண்டு என்னதான் துப்புரவாக்கினாலும் அவைகள் துப்புரவாகாது. ஆனால் அதை ஒரு தடவை அக்கினிக்குட்படுத்துங்கள். தேவனின் பரிசுத்த அக்கினி இப்பூமியை சுத்தப்படுத்தும் போது தம் மணவாட்டியை அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்வார், பின்பு திரும்பவும் இந்த பூமியின் மேல் வருவார் - ஒரு புதிய வானமும், புதிய பூமியும் ..... குளிர்காலமும், வெயிற்காலமும், இனி சேதம் விளைவிப்ப தில்லை; பாவிகள் அழிந்து வனாந்திரம் செழிக்கும்; தம்முடைய சிருஷ்டிப்பின் ஜீவன்களுக்குள்ளும் சிருஷ்டிப்பிலும் தேவன் இருந்து இரண்டும் பரிபூரணமான இணைப்பில் காணப்படும். பரலோகமும் பூமியும், மணவாளனும், மணவாட்டியும் போல கிறிஸ்துவும் சபையும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் தேவனுடைய ஒரு பெரிய மகிமையான மீட்கும் திட்டத்தினால் தேவனுடைய செழிப்பிற்குள் கொண்டு வரப்படும் கிறார்கள். நீங்கள் இதை காண்கிறீர்களா? புதிய பூமியில், புதிய நகரம் உண்டாயிருக்கும். (ஒ , இதை மறந்து போக வேண்டாம் - கவனியுங்கள்!) "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக அவர் போகப் போகிறதினால்) நான் போவதற்கு ஓர் காரணம் உண்டு. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) அவரை தேவனென்று அவர்களால் காண முடியவில்லை. "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், இப்பொழுது என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. என் பிதாவின் இராஜ்ஜியத்தில் அநேக இடங்கள் உண்டு. கிறிஸ்து தான் இந்த புதிய எருசலேமை அங்கு கட்டுகிறார். இப்பொழுது நன்றாக கவனியுங்கள்: அசைய வேண்டாம் - இதை இழந்து விடாதீர்கள்! பரலோகத்திலிருக்கும் கிறிஸ்து வானவர் புதிய எருசலேமை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். ஆறு நாட்களில் (அல்லது 6000 வருடங்கள்) இந்த பூமியை தேவன் சிருஷ்டித்தது போல. “கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், என்கிற காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்” (II பேது. 3:8) என்று வேதத்தில் நாம் படிக்கிறோம். கிறிஸ்து அங்கே சென்று ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார் (பல ஆயிரம் ஆண்டுகளாக அதைக் கட்டிக் கொண்டிருக்கிறார்). "நான் ஆயத்தம் செய்ய போவேனயானால் நான் திரும்பவும் வருவேன், நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன்” (யோவான் 14:3). மீட்கப்பட்டவர்களும் மீட்பரும் ஒன்றாக சேர்வதை கவனியுங்கள் நமக்கு சற்று நேரம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்: சாலேமான் குறிப்பிடும் இந்த பெண்ணைக் குறித்த வசனத்தை நான் இங்கு குறித்து வைத்திருக்கிறேன். ஓ. அதை நான் இப்பொழுது கடந்து தான் செல்ல வேண்டிய தாயிருக்கிறது. ஏனெனில் நேரம் அதிகம் கடந்து விட்டது. திரும்பவும் நான் அதற்கு வருவேன். அவர் அவளை அடைய முயற்சிக்கும்போது அவள் ஒரு மேய்ப்பனான வாலிபனுக்கு நிச்சயிக்கப்படுகிறாள். அது ஒரு பாடல் என்று நீங்கள் யாராகிலும் நினைக்கலாம். ஓ, இல்லை! தாவீதின் சிங்காசனத்தை இப்பூமியிலே சாலமோன் சுதந்தரித் தான். அந்த ராஜாங்கம் கடந்து போக வேண்டும். கிறிஸ்து தமது மணவாட்டியின் மேல் கொண்ட அன்பிற்கு அடையாள மாயிருக்கிறது. "உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போகிறேன்” (யோவான் 14:2) என்று இயேசு கூறினார். ஓ, அதின் தோற்றம் எவ்வாறு இருக்கும்? மணவாட்டி யே! அது எப்படியிருக்கும் என்று எப்பொழுதாவது எண்ணிப் பார்த்த துண்டா? திவ்விய அமைப்பாளனால் அது உருவாக்கப்பட்டது. அந்த நகரம் காண்பதற்கு எவ்விதம் இருக்கும்? சில நிமிடங்கள் அதைக் குறித்து நான் இப்பொழுது பேசப் போகிறேன். தமது அருமையான மணவாட்டிக்கென்று திவ்விய சிற்பாசிரியர் தமது மென்மையான கரங்களினால் அதை வடிவமைத்து ஆயத்தம் செய்திருக்கிறார். அது பார்ப்ப தற்கு என்னவாயிருக்கும்? ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகும் ஒரு திறமையான மனிதன் அவளுடைய பிரியத்திற்கு ஏற்றபடி சரியாக ஒவ்வொரு சிறு காரியங்களையும் அமைத்து அதை கட்டுகிறதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆமென்! அவள் விருப்பத்திற்கேற்ப அவர் தமது மணவாட்டியுடன் வாழப்போகும் புதிய நகரத்தை திவ்விய சிற்பாசிரியராகிய அவர் வடிவமைத்திருக்கிறார். ஆகவே பவுல், "தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை" (1 கொரி. 2:9) என்று கூறினதில் ஆச்சரியமொன்றுமில்லை. சற்று நாம் அதைக் குறித்து ஆராய்ந்து அது எவ்விதமாய் இருக்கும் என்பதை பார்ப்போம். திவ்விய சிற்பாசாரி இதை அவருடைய அருமையானவர்களுக்காக வடிவமைத்திருக்கிறார். பாருங்கள்? ஓ, திவ்விய ஜீவனுக்கு அதிபதியானவரும் திவ்விய சுபாவமும், திவ்விய சிற்பாசிரியரு மானவர் திவ்விய தேவனால் திவ்வியமாக முன் குறிக்கப்பட்ட திவ்விய தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த இடம் எப்படிப்பட்டதாயிருக்கும், பாருங்கள்? அந்த நகரம் பார்ப்பதற்கு எப்படியிருக்கும்? நினைத்துப் பாருங்கள்? அது பரலோகம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் யோவான், "பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்” என்று கூறினார் (வெளி 21:2). பாருங்கள்? அழிந்து போகப் போகும் இவ்வுலகத்தில் அல்ல, மீட்கப்பட்ட பூமியின் மேலேயே அது வருகிறது. ஒரு புதிய சந்ததியை நான் எழுப்பப் போகிறேன் என்று தேவன் சொல்லாமல் இவ்வுலகத்தில் ஏற்கனவே உள்ளவர்களை மீட்கப் போகிறேன் என்று கூறுகிறார். ஒரு புதிய உலகத்தை அவர் உண்டாக்கப் போவதில்லை; இதையே, அவர் நம்மில் செய்தது போல இப்பூமியையும் அக்கினியினால் கொளுத்தி சுத்திகரித்து விடுகிறார். அவருடைய திட்டங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. ஞாபகம் கொள்ளுங்கள், அது பரலோகத்தில் அமையப் போவதில்லை .... அது பரலோகத்தினின்று இறங்கி வருகிறது. அவர் வாழ்வதற்கான ஓர் இடம் தான் அது. யோவான் பத்மு தீவிலே அது இறங்கி வருகிறதைக் கண்டான் என்று வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரம் கூறுகிறது. ஒரு புறாவைப்போல் அந்த நகரம் பரலோகத்தினின்று இறங்கி வருவதை யோவான் கண்டான். தேவன் தம்முடைய பூமிக்குரிய கூடாரமாகிய இயேசுவின் மேல் இறங்கி வருகிறார். இயேசு ஞானஸ்நானம் பெற வந்த போது..... அவர் தீர்க்கதரிசியை சந்தித்தார் .... வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. அவரே வார்த்தையாயிருந்தார். எல்லா ஸ்தாபனங் களையும் மறுதலித்தவனாக தீர்க்கதரிசி அங்கே நின்று கொண்டிருந்த போது வார்த்தையானவர் அவனிடம் வந்த போது அவன் உலுக்கப்பட்டவனாக "நான் உம்மாலே ஞானஸ் நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?" என்றான் (மத். 3:14). அதற்கு அவர், “இப்பொழுது இடங்கொடு (அந்த செய்தியை நாம் அறிந்திருக்கிறோம். இப்படி எல்லா நீதியையும் நானே அந்த பலி : அந்த பலியானது கழுவப்பட வேண்டும் என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்” (மத். 3:15). அவர் ஜலத்தினின்று கரையேறின பின்பு, "இதோ வானம் திறந்திருக்கக் காண்கிறேன்" என்றார். தீர்க்கதரிசியும் அதைக் கண்டான், "தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம்மேல் வருவதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, "இது நான் மீட்டுக் கொண்ட பூமியின் பாகமா யிருக்கிறது. இந்த பாகத்தினின்று மற்றவைகளையும் நான் மீட்டுக்கொள்வேன்: ஏனெனில் அவரே என்னுடைய வார்த்தையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். முழு உலகத்தையும் என்னுடைய வார்த்தையினால் உரைத்து சிருஷ்டித்தேன் (எபி. 11:3), இவ்வளவு காலமும் சாத்தான் அதை வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் நான் அதை மீட்கும்படி வந்தேன்”, - அதில் இவ்வளவு பாகம் அவருடைய சரீரமாக அமைந்திருக்கிறது - " அதற்குள் வாசம் செய்ய நான் வந்துக் கொண்டு இருக்கிறேன்” என்று உரைத்தது. "புதிய எருசலேமாக பரிசுத்த நகரத்தை தேவனிடத் தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது" (வெளி 21:2) என்று யோவான் கூறினார். அது எங்கே வந்து அமர்ந்தது? அது பூமியின் மேல் சரியாக அங்கே வந்து அமர்ந்ததைப் போல், இயேசு பூமியின் பாகமாக இருந்து, பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து அவர் மேல் என்றென்றும் தங்கியிருந்தார். அது ஒருபோதும் அவரை விட்டு நீங்கவில்லை. அவரும் தேவனும் ஒன்றாயிருக்கிறார்கள். எப்பொழுதும் அப்படித்தான இருக்க வேண்டும். புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் ஒரு வால் நட்சத்திரத்தைப் போன்றும், அல்லது ஒரு புறாவைப் போலும் பரலோகத்தினின்று இறங்கி வந்து மீட்கப்பட்ட முழு பூமியின் மேல் அமருகிறதை யோவான் கண்டார். எதை செய்வதற்காக? யாருக்காக இப்பூமி உண்டாக்கப்பட்டதோ அந்த நித்திய பிரதிநிதிகளான ஒவ்வொரு மனிதன், மனுஷி என்ற தன்மைகளை மீட்டு உரிமை கோருவதற்காகவே. அவள் கழுவப்பட்டு அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டாள் - 40 நாள் வனாந்திரத்தில் இயேசுவானவர் எரிகிற சோதனையில் இருந்தார். அதன் பின்பு, கவனியுங்கள். அவருடைய ஊழியத்திற்காக அது ஆயத்தமாகிவிட்டது. பரிசுத்த இரத்தத்தின் மேலும், இயேசுவின் மேலும், பூமியின் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்குவதை நினைத்துப் பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். நான் மிக அழகாக செல்லவில்லை என்று நம்புகிறேன் பாருங்கள். பரிசுத்த இரத்தமும் அதன் ஜீவனும் தேவனால் உண்டாக்கப்பட்டது. இயேசு தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆரம்பமாயிருந்தார். உங்களால் காணமுடிகிறதா?- சிருஷ்டிப்பில் ஆதியாக அவர் உண்டாக்கப்பட்டார். தேவனுடைய சிருஷ்டிப்பில் அவரே ஆதியானவர் என்று வேதம் குறிப்பிடுகிறது. அவர் எவ்வாறு தொடங்கப்பட்டார்? ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் ஆரம்பிக்கப்பட்டார். அது என்ன? இங்கே சர்ப்பத்தின் வித்தைக் குறித்து அந்த குருடர்கள் காண முடியாமல் இருக்கிறதென்ன? ஏவாள் பூமியின் மேல் வைக்கப்பட்டாள், சாத்தான் யாதொன்றிற்காகிலும் அவளை தொடும் முன்பு தேவன், அவர்களைப் பார்த்து, "பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என்றார். அது சரிதான். ஆனால் சாத்தான் இங்கு வருகிறான். ஆதாம் தேவனிலிருந்து நேரடியாக வந்தவன் (ஆகவே ஆதாம் தேவனுடைய சுபாவம் உள்ளவனாயிருக்கிறான் - தமிழாக்கியோன்). உங்கள் பெற்றோர்களின் சுபாவத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் காயீன் ஆதாமின் குமாரனா என்று பாருங்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, பரலோகத்தின் பெற்றோரின் சுபாவத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். உங்கள் பரலோக பெற்றோர் வார்த்தையின் தன்மையுடையவர் அல்லது வார்த்தை தான் உங்கள் பெற்றோரின் தன்மையாயிருக்கிறது. அப்படியானால் ஸ்தாபனங்களுக்காக வார்த்தையை எவவாறு மறுதலிப்பீர்கள்? (ஒலிநாடாவின் இரண்டாம் ஆரம்பம் - ஆசி). இதை நீங்கள் காணத் தவறவிடக் கூடாது என்று விரும்புகிறேன். இது தேவனிடத்திலிருந்து வருகிறது என்று நானறிவேன். இயேசு தேவனுடைய தன்மையாக அங்கு இருக்கிறார், அவர் இறங்கி வருகிறார். கவனியுங்கள்! நீ இதை செய்தபடியால் “உனக்கும் ஸ்திர்க்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” (ஆதி. 314, 15) என்றார். அது சரியா? ஸ்திரீக்கு வித்துக் கிடையாது. மாறாக அவள் நிலமாயிருக்கிறாள். அதைக் குறித்து எப்பொழுதாவது நீங்கள் யோசித்தது உண்டா? சர்ப்பமானது ஏற்கனவே அவனுடைய வித்தை அங்கு விதைத்து விட்டான். ஸ்திரிக்கு வித்து கிடையாதென்றால் அது கிடைக்கும் மட்டும் அவள் நிலைத்து இருக்க வேண்டும். பால் உணர்ச்சியின் புணர்ச்சியின் மூலமாக சாப்பம் என்னும் சாத்தானால் அது கொண்டு வரப்பட்டது. பாருங்கள். சர்ப்பம் முதலில் ஊரும் பிராணியாக இல்லை; அதற்கு கால்கள் இருந்தது. ஆனால் அது பின்பு அழிக்கப்பட்டு விட்டது. அது மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது. மிருகங்களில் அது ஒன்று மட்டுமே ஸ்திரீயுடன் கலக்கமுடிந்ததாயிருந்தது. ஒரு மிருகத்தின் வித்து இப்பொழுது மனிதரோடு ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் அதை முயற்சித்துப் பார்த்து விட்டார்கள். பாருங்கள், ஒரு ஆண் மிருகத்தின் ஜீவ வித்து மனித பெண்ணிடம் ஒன்றும் செய்யாது. ஆனால் அன்று அது தான் மிக நெருக்கமான ஒன்றாயிருந்தது.... மனிதகுரங்குக்கும் மனிதனுக்கும் இடையிலிருந்த அந்த ஜாதியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக பறவைகளினின்று குரங்குகள் பின்பு மனித குரங்குகள் (சிப்பான்சி) என்ற விதமாக வந்து அங்கே ஓர் இழப்பு காணப்படுகிறது. அதுதான் சர்ப்பம், பாம்பு அல்ல. அதனுடைய முழு அமைப்பும் இழக்கப்பட்டது. ஏனெனில் அது சாபத்திற்குள்ளாகியது.   தேவன் ஆதாமை சபிக்கவில்லை. அவனும் அதே காரியத்தைத்தான் செய்தான். ஆனால் அவர் பூமியை சபித்தார். அது முள்ளையும் குருக்கையும் முளைப்பித்தது. அவர் ஏவாளை சபிக்கவில்லை. ஆனால் ஆதாமை அவளுடைய ஆளுனராக வைத்தார். ஆகவே இனிமேலிருந்து அவள் பிரசங்கிக்க முயற்சி ஏதும் எடுக்கக் கூடாது; ஏனெனில் ஆதாம் அவளை ஆள்கின்றவனாயிருக்கின்றான். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்” என்று ஆதாமிடம் கூறினார். சாத்தானிடம், “உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” என்றார் ( ஆதி 3 : 15, 17). அவளுக்கு வித்தில்லை; எப்பொழுதுமே அவளுக்கு அது இருக்க முடியாது. ஆகவே ஏதாகிலும் ஓர் வழியில் அவள் ஒரு வித்தை பெற்றாக வேண்டும். தேவன் அவளுக்கு பால் உணர்ச்சியின் புணர்ச்சியின்றி சிருஷ்டிப்பினால் வித்தைக் கொடுத்தார். அது சர்ப்பத்தின் வித்து என்பதை உங்களால் காண முடியவில்லையா, குருட்டு ஜனமே! ஓ, ஆதாம் பிரவேசிப்பதற்கு முன்பு சாத்தான் பிரவேசித்து விட்டான். அது தான் அந்த வித்து. ஆனால் அவள் ஒரு வித்தைப் பெற்றுக் கொண்டாள். அது என்ன? தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதியாயிருந்த - தேவனையே அவள் பெற்றுக் கொண்டாள்! கவனியுங்கள். ஆபேலும், சேத்தும் ஆதாமிலிருந்து வந்தார்கள். அந்த பொய்யனும், கொலைக்காரனுமானவன் எங்கிருந்து வந்தான்? பாருங்கள். அது ஒரு வித்தாகத்தான் - இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அவனும் ஓர் வித்தாயிருந்தான். காயீனும் ஒரு மனிதனாயிருந்தான். அந்த குருடர்களும் எங்கேயிருந்து வந்தார்கள்? இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களை குருடாக்கினான். ஆகவே, இயேசு ஒரு மனிதனும் இதை காண முடியாது என்று கூறினதில் ஆச்சரியமான்றுமில்லை. பாருங்கள்? "அவர்களால் ஏன் இதைக் காண முடியவில்லை?" என்று நீங்கள் கேட்கலாம். இயேசு ஒரு சமயம் தம்முடைய சீஷர்களைப் பார்த்து, "பரலோகத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. அவர்களுக்கோ அருளப்படவில்லை ” (மத். 13:11) என்றார். அதன் காரணமாகத்தான் நீங்கள் 1500 மைல்கள் அப்பாலிருந்து இங்கு வருகிறீர்கள். பாருங்கள்? "இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது”. இந்த கடைசி மணி நேரத்தில் மணவாட்டி இராஜ்ஜி யத்திற்குள் பிரவேசிக்க இருப்பதால் தெற்கு ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து ஜனங்கள் இங்கு வருவதைப் பாருங்கள். எனக்கு அதிகமான நேரமில்லை. இப்பொழுது கவனியுங்கள். அங்கே சர்ப்பத்தின் வித்தை உங்களால் காண முடிகிறதா? அது எவ்வளவு பரிபூரணமாக அமைந்திருக்கிறது. பாருங்கள்? அன்றொரு நாள் டூசானிலிருந்த மனிதன் ஒலிநாடாவைக் கேட்டுவிட்டு, வேறு விதமாகக் கூற முயற்சித்தது போல .... அது ஒரு மனிதனானால்..... நான் இங்கே ஒரு காரியத்தை குறிப்பிட விரும்புகிறேன். ஏவாள், "கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்றாள் (ஆதி. 4:1) (இதைத்தான் அவர்கள் குறிப்பிட்டு பேசுகிறார்கள்) நிச்சயமாக அப்படித்தான். ஏனெனில் தேவனுக்கு ஓர் பிரமாணம் உண்டு. கோதுமை விளை நிலத்தில் ஒரு விதையை விதையுங்கள். அதன் பின்பு முள்ளையும் விதையுங்கள். ஒரே சூரிய வெளிச்சமும், மழையும் அதற்கு ஜீவனைத் தந்து முளைக்கச் செய்கிறது. தேவனுக்கு ஒரு பிரமாணம் உண்டு, அந்த பிரமாணம் ஒருபோதும் உடைந்து போக முடியாது. நகரத்திலிருக்கும் ஒழுக்கக் குறைவுள்ள ஓர் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு வாழ்ந்து, அதன் மூலம் அவர்களுக்கு ஓர் பிள்ளை பிறக்குமென்றால் அக்குழந்தை தேவனுடைய பிரமாணத்தினால் அவ்விதமே வர வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் வேறு வழியில்லை. சாத்தானை நீங்கள் சிருஷ்டிகனாக்கினால் அவன் தேவனாகிவிடுவான். ஓ எவ்வளவு குருடனாயிருக்கிறாய் நீ அது தேவனுடைய சரியான பிரமாணமாயிருக்கிறது. அவனுக்கு ஓர் குழந்தையுண்டாகு மென்றால் அது ஏசாவாயிருந்தாலும், யாக்கோபாயிருந்தாலும், யூதாசாயிருந்தாலும் அல்லது இழிவானவனாயிருந்தாலும் சரி, எனக்கு அதைக் குறித்து கவலையில்லை. ஏனெனில் அது தேவனுடைய பிரமாணத்தின்படி வருகிறதாயிருக்கிறது. "அவர் தீயோர் மேலும், நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்” (மத். 5 : 45) என்று வேதம் கூறுகிறது. "தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலம். ஆனால் முள்செடிகளும், முள் பூண்டுகளும் அதே தண்ணீரினாலும் அதே சூரிய வெளிச்சத் தினாலும் வாழ்கின்றன (எபி. 6: 7, 8). ஏனெனில், ஒவ்வொரு விதையும் தன்னில் தானே முளைக்கப்பெற்று அறுவடைக்குச் செல்ல வேண்டுமென்பது தேவனுடைய பிரமாணமாயிருக்கின்றது. ஆகவே அது சர்ப்பத்தின் வித்தையும் முளைப்பிக்க வேண்டிய தாயிருந்தது. அது ஒருபோதும் தேவனை தடை செய்யவில்லை. மாறாக அவருடைய திட்டத்தை நிறைவேறச் செய்து அவரை மீட்பராக்கிற்று. அது மறைக்கப்படாமலிருந்தா லொழிய மற்றபடி அது காணத்தக்கதாக இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் உன் கண் காணாதபடி அதை மறைத்து விட்டான். நீங்கள் பார்க்கத் தக்கவாறு அது அவ்வளவு தெளிவாயிருக்கிறது. அங்கு தான் சர்ப்பத்தின் வித்தைக் காண்கிறோம். கவனியுங்கள். இயேசு தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதியாயிருக்கிறார். ஒரு பெண்ணால் எதை செய்ய முடியும்? அவளிடத்தில் ஜீவன் இல்லை. அவர் ஓர் நிலமாயிருந்து முட்டையைத் தான் அவளால் பிறப்பிக்க முடியும். ஒரு நிலத்தை நீங்கள் எடுத்து புற்கள் கூட விளையாதபடி அதிலுள்ள பூச்சிகளையெல்லாம் மருந்தடித்து விரட்டி விட்டு பின்பு அதற்கு உரமிட்டு திரும்பவும் நல்ல விதையை விதைத்த பின்னர்; சாத்தான் அங்கு வந்து வேறு விதையை விதைக்கும் போல, இரண்டு விதைகளையும் அறுவடை செய்ய தேவனுடைய பிரமாணம் அதே விதமாய் தான் உள்ளது. சரி. அவ்வித மாயிருக்க வேண்டுமென்பது தேவனுடைய நோக்கமல்ல, ஆனால் என்ன நிகழ்ந்தது? சிகப்பு அணுக்களாகிய இரத்தத்தை விந்தானது கொண்டு செல்கின்றன. இரத்தத்திலே ஜீவன் உள்ளது. கால்நடைகளை கலப்பினமாக்கும் காரியத்தில், மருத்துவர்கள்; இரசாயனத்தில் ஈடுபட்டிருப்போரின் உதவியினால் நானும், சகோ. சகரியனும் அதைக் கண்டோம். ஆணிடமிருந்து ஒரு கூட்ட உயிரணுக்கள் வெளி வருகின்றன. அதே போல் பெண்ணிடமிருந்து ஒரு கூட்ட முட்டைகள் வெளி வருகின்றன. பெண் ஆணினின்று - உருவாக்கப்பட்ட ஒரு உபசிருஷ்டியாயிருந்து தன்னில் தானே ஜீவனைப் பிறப்பிக்க முடியாதவளாயிருக்கிறாள். ஆகவே அவள்தான் அந்த விளைநிலமாயிருந்தபடியினால் அவள் அங்கு பிரதானமாய் விளங்கினாள். செழிப்புள்ள நிலத்தில் அங்கே ஜீவனை பெறத்தக்கதாக ஒரு முட்டையிருந்தது. இந்த ஜீவனானது ஊர்ந்து அசைந்து அதனிடமாகச் சென்றது. அது எவ்விதம் சேர்கிறது என்பது இரகசியமாயிருக்கிறது. "நல்லது. முதல் ஜீவனானது சந்திக்கிறது. மற்றவைகள் மடிந்து போகின்றன” என்று ஒருவேளை நீங்கள் கூறலாம். யார் அதை நிர்ணயம் செய்கிறார்? "நல்லது முதலாம் ஜீவன்” என்று நீங்கள் கூறலாம். முன்பாகத்திலிருக்கும் முட்டையும், முன்பக்கத்திலிருந்கும் ஜீவ அணுவும் என்று கூறலாமா? இல்லை, இல்லை. பின்பக்கத்திலிருந்து ஒரு முட்டை குதித்து எழுந்து வர விந்தின் மத்திய பாகத்திலிருந்து ஒரு ஜீவ அணு வந்து அதை சந்திக்கிறது. இவ்விதமாக சேர்ந்த காரியம் அது சிகப்பு தலையாயிருக்கப் போகிறதா; கருப்பு தலையாயிருக்கப் போகிறா, சிறியதாகவோ, பெரியதாகவோ, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கப் போகிறதா என்பதை ஏதோ ஓர் அறிவாற்றல் நிர்ணயிக்கிறது. பாருங்கள்? அதைக் குறித்து நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் அதை கலக்கலாம், என்ன காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். அது ஒருபோதும் கிரியை செய்யாது. ஏனெனில் தேவனே அதை நிர்ணயிக்கிறவராக இருக்கிறார். முட்டை என்ற நிலத்தினூடே ஒரு சிறிய ஜீவ அணு ஊர்ந்து செல்கின்றது. சிறிய வால் போன்ற ஓர் காரியம் வளைந்து சுற்றி அங்கு விழுந்து குழந்தையின் முதுகுத் தண்டாக ஆரம்பிக்கிறது. இப்பொழுது கூறுங்கள் அவள் என்னவாயிருக்கிறாள் என்று. அவள் விதையில்லாதவளாயிருந்து விதையைப் பெற்றுக் கொள்ளும் ஓர் விளைநிலமாயிருக்கிறாள். நல்ல விதையை விதைக்கிறவர் விதைத்து விட்டு சென்ற பின்பு சத்துருவானவனும் அவருக்கு பின்னாக வந்து களை விதையை விதைக்கிறான். ஆனால் நல்லோர் மேலும், தீயோர் மேலும் மழையானது பொழிகிறதாயிருக்கிறது. அவைகள் எல்லாம் வளர்ந்து வர வேண்டியதாயிருக்கிறது. "இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள். அறுப்பு காலத்தில் அவைகள் கட்டுகளாகக் கட்டப்படும்” என்று இயேசு கூறினார். இப்பொழுது உலக சபைகளின் ஐக்கியம் என்ற அமைப்பில், பெரிய ஸ்தாபனக் கட்டுகளாக கட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதனுடைய முடிவு சுட்டெரிக்கப்படுவதே. ஆனால் மணிகளோ களஞ்சியத்தில் கொண்டு போகப்படுகின்றன. பாருங்கள்? ஒரே மழையை அவைகள் குடித்து ஜீவித்திருந்தாலும் முடிவில் பிரிக்கப்படுகின்றன. ஆரஞ்சு பழமரத்தில் மாதுளை கிளைகளை ஒட்டவைக்கப்படும் மானால், அது மாதுளை பழங்களைக் கொண்டு வர முடியும். அதே போல் எலுமிச்சையையும், திராட்சையையும் கூட ஒட்ட வைத்துக் கொண்டு வர முடியும். ஆனால் அது ஆரஞ்சு மரம் உற்பத்தி செய்யும் ஜீவனில் வாழ்ந்திருந்தாலும் ஆரஞ்சு பழங்களை கொண்டு வர முடியாது. ஸ்தாபனங்கள் தங்களை கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளுகின்ற காரணத்தினால் திராட்சை செடியின் சாரத்தில் புகுந்து கொண்டு அதனால் வாழ்கின்றனர். காய்பா (அவன் யார் என்று உங்களுக்கு தெரியும்) அந்த ஜீவனால் வாழ்ந்திருந்து தீர்க்கதரிசனம் உரைத்தாலும் ... ஓ இதை தவற விடாமல் ஆராய்ந்து தெளிவாக பெற்றுக்கொள்ள ஒரு வார காலம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுது இவைகளை சற்று ஒதுக்கி விட போகிறேன். கவனியுங்கள்! அந்த கரங்கள் மிருதுவான அன்பினால் தம்முடைய அருமையான மணவாட்டிக்காக இதை உருவாக்கிற்று. பரிசுத்த ஆவியானவர் இறங்கின இந்த இயேசு பூமியின் ஒரு பாகமாயிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பூமி யென்னும் பெண்ணின் கருப்பையில் தேவனுடைய ஜீவன் என்னும் வித்து உருவாக்கப்பட்டது. (அது சரியா?) சரி. தேவனுடைய ஜீவன் அதனுள் வந்ததினால் அவர் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதியாயிருந்தார். பாருங்கள். பின்பு அந்த அணுவிலிருந்த தேவ இரத்தம் பூமியை மீட்பதற்காக கல்வாரியில் பூமியின் மேல் சிந்தப்பட்டது. இப்பொழுது அது நீதியாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு (அழைக்கப்பட்டு உரிமைக் கொள்ளப்பட்டது) இப்பொழுதோ இயேசுவுக்காகவும் அவருடைய மணவாட்டிக் காகவும் அக்கினி ஞானஸ்நானம் பெற காத்திருக்கிறது. நீங்கள் மற்ற பாகங்களாக இருந்து இப்பூமியினின்று இழுத்துக் கொள்ளப்பட்டீர்கள். உங்களுடைய சரீரம் இப்பூமியின் பாகமா யிருந்தது. உங்களுடைய ஆத்துமா தேவனுடைய தன்மையாகவும், பாகமாகவும் இருந்து. ஒரு சரீரத்தினால் இப்பூமியின் மேல் காண்பிக்கப்பட்டது. இந்த சரீரமும், ஆத்துமாவும் மீட்கப்பட வேண்டும். ஏனெனில் அது பாவத்திலிருந்தது. தேவன் நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற வழிமுறையின்படி உங்களுடைய ஆத்துமாக்களை மீட்டுக் கொண்டார். நீங்கள் பூமியின் பாகமாயிருப்பதினால் அதுவும் மீட்டுக் கொள்ளப்பட்டது. நீங் கள் அந்த வழி முறையிலிருக்கிறீர்கள். அது வளர்ந்துக் கொண்டேயிருக்கிறது. உங்களுடைய சரீரம் நோவாவின் காலத்தில் உண்டான ஞானஸ்நானத்தினால் நீதியாக்கப்பட்டது. ஆமென்! பூமியானது கிறிஸ்துவும் அவர் மணவாட்டியும் வாழும் புதிய எருசலேமாவதற்காக பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் அக்கினியினால் சுத்திகரிக்கப்படும். நீங்கள் வாழப்போகும் இடம்) இந்த நகரத்தை கவனியுங்கள். இப்புதிய எருசலேம் பூமியின் மேல் அமர வந்துவிட்டது. இந்த பூமி நிச்சயமாக மாற வேண்டும். இப்பொழுது இருப்பது போல் இருக்க முடியாது. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு இந்த பூமி மாறாமல் இவ்விதமாகவே சென்று கொண்டிருக்க முடியாது. பாருங்கள்? அத்தகைய ஓர் நகரத்தைப் பெற்றுக் கொள்ள அது மாறத்தான் வேண்டியதாயுள்ளது. பரிசுத்த ஆவியானவராக நம்மில் அவர் நிறைந்திருக்க, பரிசுத்த அக்கினியினால் நம்மை மாற்றி வாழும் ஸ்தலமாக்குவது போல் தான் இதுவும். இந்த புதிய பூமியில் விசாலமான இடம் உண்டாயிருக்கும். கவனியுங்கள். அது புதுப்பிக்கப்பட்டு இனி சமுத்திரம் அதில் இல்லாமற்போகும். கவனியுங்கள். அந்த நகரம் 1500 மைல்கள் சதுரமா யமைந்திருந்தது (தமிழ் வேதாகமத்தில் 12,000 ஸ்தாதி அளவா யிருந்தது என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் 12,000 பர்லாங்குகள் - அதாவது 8 பர்லாங்கு 1 மைல் என்ற அளவின்படி 12,000 பர்லாங்குகள் 1,500 மைல்கள் என்ற அளவை சகோ. பிரான்ஹாம் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) இப்பொழுது அதன் அளவுகளை வரையும் போது நெருக்கமாக கவனியுங்கள். சற்று இந்த கரும்பலகையிலுள்ளதை கலைத்து விட விரும்புகிறேன் (சகோ. பிரான்ஹாம் கரும்பலகையினிடத்திற்கு செல்கிறார் - ஆசி). தேவனிடத்தினின்று ஆழமான வெளிப்பாடு இங்கே யுள்ளது. கர்த்தருக்குச் சித்தமானால் மற்றவைகளை இங்கு மேலே கொண்டு வருகிறேன்.  பர்லாங்குகளில் 2,300 இதை அவர் எவ்விதம் அளந்தார் என்பதை வெளிப்படுத்தின விசேஷத்தில் நீங்கள் காணலாம். 1,500 மைல்கள் சதுரமாய் இந்த நகரம் அமைந்திருந்தது என்று நாம் காண்கிறோம். அது எதுவரைக்கும் நீண்டிருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? (இந்த வாரம் நான் அதை அளந்து பார்த்தேன்). அது மெய்ன் என்னும் இடம் தொடங்கி பிளோரிடா வரை பின்பு கிழக்கு கடற்கரையினின்று 600 மைல்கள் கடந்து மிசிசிபியின் மேற்கு பாகம் வரை பரவியிருக்கும். வேறு வார்த்யிைல் கூறப்போனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதிபாகம் வரை அந்த நகரம் விஸ்தாரத்தில் அமைந்திருக்கும். "அங்கே இடம் பற்றாமல் இருக்கும்” என்று ஒரு வேளை நீங்கள் கூறலாம். இப்பூமி ஐந்தில் நான்கு பாகம் தண்ணீரினால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே சமுத்திரம் இல்லாமற் போகும் போது இடமுண்டாயிருக்குமே! அது சரியா? வெடித்தல் உண்டாகும் போது சமுத்திரம் வரண்டு போகும். அப்பொழுது பூமி துருத்திக் கொண்டு மேல் வரும். ஓ, அது 1,500 மைல்கள் சதுரமாயிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னே ஓர் நகரம்! அதினுடைய நீளமும், அகலமும் சமமாயிருக்கும். அதாவது 1,500 மைல் அகலமும், 1,500 மைல் நீளமும் 1500 மைல் உயரமுமாய் இருக்கும். 1500 மைல் ஊடுருவிப் பார்க்கத்தக்கதான பொன்னாயிருக்கும். "நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப் பொன்னாயிருந்தது" - வெளி. 21:18). அந்த நகரத்தை சுற்றிலும் மதில்கள் இருந்தன. அது நிச்சயமாக சமமாகவோ அல்லது கனவடிவமாகவோ இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தை கொள்ளவில்லை. "... அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது” என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறு ஒரு பூகோள அளவின்படி அது சமமானதொரு கூர்நுனி கோபுரமாயிருக்கிறது (பிரமிட் - அதாவது மேலே கூர்நுனியும் அடியில் அகலமான பரப் பளவுள்ளதுமான ஓர் செங்குன்றம் - தமிழாக்கியோன்). அது சதுரமான பரப்பளவாய் அமைந்திருந்தது (ஆங்கில வேதாக மத்தில் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருக்கிறது - வெளி. 21: 16 - தமிழாக்கியோன்). அதின் மதில்களும் ஒரே அளவாயிருந்தது. நான் அதை வரையட்டும் (உதாரணப்படுத்துவதற்காக சகோ. பிரான்ஹாம் கரும்பலகையினண்டை செல்கிறார் - ஆசி). நீளமும், அகலமும், உயரமும் என்ற விதமாய் நாம் நிச்சயமாக ஒரு உலகத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம். இந்த கோணத்தின் அளவுகள் எல்லாம் ஒரே விதமா யிருக்கின்றன. எகிப்திலே இருக்கும் ஏனோக்கின் அடையாளமான கூர்நுனிகோபுரத்திற்கு சரியானதொரு அடையாளமாக, பதிலாக இந்த கூர்நுனிகோபுரம் வேறொரு அளவின்படி நிரூபிக்கிறதாய் அமைந்திருக்கும். ஜலத்தினால் உலகம் அழிக்கப்படும் முன்னர் நீதிமானாக்கப் படுதல் உண்டாகும் முன்பு ஏனோக்கு ஒரு அடையாளத்தைக் கொண்டு வந்தான். இந்த கூர்நுனி கோபுரத்தில் ராஜாவின் அறைக்குச் செல்ல ஏழு படிகளிருந்தன. கவனியுங்கள், அந்த ஏழாவது படி (நீங்கள் கூர்நுனி கோபுரத்தில் அளவுகளை எப்பொழுதாவது ஆராய்ந்து பார்த்ததுண்டானால்) ஏறிவருகிற வனுக்கு ராஜாவை அறிமுகப்படுத்தி வைக்கிறதாயிருக்கிறது. யாரை சந்திக்கும் இடமாக அது இருக்கிறதென்பதை கவனித்து நீங்கள் வாழும் காலத்தை அறிந்துக் கொள்ளுங்கள் (கூர்நுனி கோபுரத்தில்) தேவன் மூன்று வேதாமங்களை ஏற்படுத்தியிருக்கிறார். கூர்நுனிக் கோபுர போதகம் என்று ஒன்று உண்டு. அது அறிவீனம். ஆனால் நான் குறிப்பிடுவது மெய்யான கூர்நுனி கோபுரம். எல்லாம் மூன்றில் அமைந்திருக்க வேண்டும். இயேசு மூன்று விசை வருகிறார். முதல் தடவை அவள் மணவாட்டியை மீட்க வந்தார், இரண்டாம் தடவை மணவாட்டியை அழைத்து கொள்ளவும், பின்பு அவளோடு இருக்கவும் அவர் வருகிறார், பாருங்கள்? எவ்வளவு அழகாயிருக்கிறது பாருங்கள்? இந்த கூர்நுனி கோபுரத்தில் ஏழு படிகளும் பின்பு ராஜாவின் அறையும் இருந்தன. ராஜா தம்முடைய சிங்காசனத்தை அடையும் முன்னர் நாம் ஏழாம் சபையின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த கூர்நுனி கோபுரத்திற்கு தலைக்கல்லானது வைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய முதல் வேதாகமம் வானங்களிலுள்ள வானராசிகளாகும். அது தொடங்கப்பட்டு ஒவ்வொரு காலங் களிலும் ஓடுகிறது. வானராசியின் முதலில் காணப்படுவது கன்னியாயிருக்கிறது. அவ்விதமாகத் தான் அவர் முதலில் வந்தார். வானராசியின் கடைசியில் காணப்படுவது லியோ என்னும் சிங்கமாயிருக்கிறது. அது அவருடைய இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. அதற்கு சற்று முன்பதாக - குறுக்கு மீன்கள், அது கடக ராசி காலத்தை குறிக்கிறதாயிருக்கிறது. அதில் தான் நாம் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதன் பின்பு (ஏனோக்கு) ஏற்பட்ட கூர்நுனி கோபுரம் (அதற்குள்ளாக செல்ல இப்பொழுது நமக்கு நேரமில்லை, ஆனால் என்றாவது ஒரு நாள் தேவனுடைய துணையினால் அதை உங்களுக்குக் காண்பிப்பேன்). நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தின் சரியான அளவை காட்டுவதாய் சாட்சி பகருகிறது. பாருங்கள்? கவனியுங்கள், இப்பொழுது நாம் கொண்டிருக்கும் சம அளவுகளான அந்த பூகோள அமைப்பு நிச்சயமாக ஓர் சதுர அமைப்பாயிருக்க வேண்டுமென்று பொருள்படுவதில்லை. எகிப்திலிருக்கும் ஏனோக்கின் அடையாளமான கூர்நுனி கோபுரத்திற்கு ஓர் அடையாளமாயிருக்கிறது. அக்கினி ஞானஸ்நானத்தினால் இந்த பூமியின் சுத்திகரிப்பின் காலத்தில் எரிமலைகள் வெடிக்கும் போல் இப்பூமியானது வெடித்து ஒரு கூர்நுனி கோபுரம் போன்ற மலையினை வெளியேத் தள்ளிவிடும். பாருங்கள்? அது சம்பவிப்பதற்கு மிகுந்த விசாலமான இடம் உண்டாயிருக்கும். இந்த முழு உலகமும், பூமியின் மேற்பரப்பும் மாறிப் போகும். இதை பெற்றுக் கொண்டீர்களா? இது சரியாக வேதவார்த்தைக்கு பொருந்திய தாயிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், ஏசாயா 65:25ல் “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதில்லை, கேடுண்டாக்கு வதுமில்லை. ஓ! என்னுடைய எல்லா பரிசுத்த மலையிலும், அது எப்பொழுதும் ஒரு மலையாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் . அதன் சுவர்கள் மேலும் கீழுமாக நேர்கோட்டில் இருக்குமானால், அந்த நகரத்தை வெளியிலிருந்து தான் பார்க்க முடியும் - அல்லது உள்ளிலிருந்து. சிங்காசனத்தை உள்ளி லிருந்து தான் பார்க்க முடியும். நாம் இப்பொழுது ஏசாயா 4:5ல் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தைப் பார்ப்போம். நீங்கள் சீக்கிரமாக போக வேண்டுமா? இப்பொழுது அவசரப்படாதீர்கள். ஒரு குறிப்பிட்ட காரியத்தை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ளவேண்டும். நான் அதை தெளிவாக்க விரும்புகிறேன். நாம் திரும்பவும் அந்த கருத்தினிடத்தில் வரும்போது நாம் எங்கிருக்கிறோம், எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை காண்பிப்பேன். ஓ கர்த்தராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! வார்த்தை தவறாததாயிருக்கிறதை இங்கே காணுங்கள். ஏசாயா 45ல் கர்த்தருடைய வருகையைப் பற்றியும் அப்பொழுது பெண்கள் எவ்விதம் ஒழுக்க நெறியற்று இருப்பார்கள் என்பதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "ஏழு பெண்கள்...” என்று ஏசாயா குறிப்பிடுகிறார். இப்பொழுது படிப்போம். ஏசாயா 4ம் அதிகாரம். "அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம் எங்கள் நிந்தை (நாம் இப்பொழுது வாழ்கின்ற கடைசி காலமாய் இது இருக்கிறது. விவாகமும் விவாகரத்தும் விபச்சாரமும் இன்னும் என்ன ?) நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள். இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு (அந்த அழிவிற்கு நீங்கள் எவ்விதம் தப்பினீர்கள் பாருங்கள்) அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும் பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். நான்காம் வசனம்: சீயோனில் மீதியாயிருந்து, எருசலே மில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவ னெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான் (பாருங்கள்?) 302. மூன்றாம் வசனம்: அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி' (அது மணவாட்டியென்பதை எப்பொழுதும் ஞாபகம் கொள்ளுங்கள்) நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும் எரு ச லேமின் இரத்தப்பழிகளை (அது மீந்திருக்கிற இஸ்ரவேலரும் மணவாட்டியுமே) அதின் நடுவிலிருந்து நீக்கி விடும்போது ... அக்கினி என்பது எப்பொழுதும் தேவனின் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறதாயிருக்கிறது. அவர் தம்முடைய முடிவான நியாயத் தீர்ப்பை செலுத்தும் போது அவர் உங்களை அழைத்து நீதிமான் களாக்கி மீட்பிற்குள் கொண்டு வந்து பின்பு அவருடைய நியாயத்தீர்ப்பின் பரிசுத்த ஆவியாகிய அக்கினி உங்கள் மேல் வெடித்து பாவத்தை சுத்திகரித்து உங்களை அவருடையதாக்கிக் கொள்கிறார். அதே விதமாகத் தான் இப்பூமியையும் அக்கினி யினாலும் எரிக்கும் ஆவியினாலும் சுத்திகரிக்கிறார். இப்பொழுது கவனிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? 5ம் வசனம். அப்பொழுது கர்த்தர் சீயோன் மலை யிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் அதின் சபைகளின் மேலும் பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்து விட்டு எரியும் அக்கினிப் பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்". அந்த நாளில் கர்த்தர் தாமே மலையின் மேலிருந்து பகலில் மேகத்தையும் புகையையும் இரவில் கொழுந்து விட்டு எரியும் அக்கினி பிரகாசத்தையும் உண்டாக்குவார். வசனம் தொடர்ந்து, "பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும் ஒரு கூடாரம் உண்டாயிருக்கும் என்று கூறுகிறது (ஏசாயா 4:6) அதின் சுவர்கள் மேலும் கீழும் நேர்கோட்டில் இருந்தால் உங்களால் அதைக் காண இயலாது; ஆகவே அது சற்று சாய வேண்டும் அக்கினி பிரகாசத்தை உண்டாக்குவார்: மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்” ஓ நாம் அந்த பாடலைப் பாடினோம். ஓ, அந்த நகரமாகிய சீயோன் மலையே நான் யாத்திரை செய்கிறவனாயிருந்து இன்னுமாய் உன்னை நேசிக்கிறேன் அந்த காலத்தில் நான் வரும்போது.... மலையின் மேலுள்ள அந்த நகரத்தை நான் அடையும்போது.... கவனியுங்கள், சீனாய் மலையின் மேல் கர்த்தர் இறங்கி அக்கினி ஸ்தம்பத்தினின்று இஸ்ரவேலரோடு பேசினார். மறுரூபமலையின் மேல் அவர் இறங்கி. "இவர் என்னுடைய நேசக்குமாரன், இவருக்கு செவி கொடுங்கள்” என்று விளம்பினார். பேதுரு, யோவான், யாக்கோபு என்பவர்கள் முன்பு அவர் அந்த மலையின் மேல் மின்னும் பிரகாசமான வெளிச்ச ஸ்தம்பத்தில் இறங்கினார். மரித்தோரிலிருந்து எழுந்து. மறுரூபப் பட்டவர்களாயிருந்த மோசே, எலியா என்பவர்களோடு அங்கே அவர் தம்மை அடையாளங்காட்டினார். மகிமை! இந்த புதிய சிருஷ்டிப்பாகிய புதிய பூமியில், இந்த புதிய நகரமானது மலையின் மேல் இருக்கும், உச்சியில் சிங்காசனமிருக்கும்; அதில் வாழ்பவர்கள் எல்லோரும் இந்த மலையின் மேலும் கீழுமாக இருப்பார்கள். அதை சுற்றிலும் உள்ள சுவர்களுக்கு பன்னிரண்டு அஸ்திபாரங்கள் இருக்கும். ஆரோனின் மார்பதக்கத்திலிருந்த ஏபோத்தைப் போல பன்னிரண்டு கோத்திரங்களின் நாமங்களும் எழுதப்பட்டிருக்கும். வனாந்திரத்தில் இருந்த கூடாரத்திலிருந்தது போல நான்கு வாசல்கள் அதற்கு இருந்தன. ஒவ்வொரு பக்கமும் மூன்று வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு பக்கமும் மூன்று வாசல்கள் இருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகளின் மேல் அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. அது நூற்று நாற்பத்து நான்கு முழம் (144 cubits) உயரமாயிருந்தது. நூற்று நாற்பத்து நான்கு (144) முழம் என்பது 216 அடியாகும் (feet) அந்த நகரத்தைச் சுற்றிலும் ஒரு மதிலாக அமைந்த அச்சுவரின் கற்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 20 அடி உயரமாக இருந்தது… அந்நகரம் அந்த மதிற்சுவற்றின் மேல் அமைந்திருக்க வில்லை. ஏனெனில் 1500 மைல் பரப்பளவுள்ளது அதன்மேல் அமைய முடியாது. நீங்கள் நுழையத்தக்கதான ஒரு மதிலாய், பழைய எருசலேமின் வாசல்களைப் போல் அமைந்திருந்தது. நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன. அவைகள் பன்னிரண்டு விதமான இரத்தினங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பன்னிரண்டு வாசல்களும் முத்துக்களாயிருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்து அப்போஸ்தலருடைய நாமத்தை உடையதாயிருந்தது. * இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங் களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்” என்று இயேசு கூறவில்லையா? அவர்கள் வரும்போது அங்கே வாசலண்டை யார் அமர்ந்திருந்து நியாயம் விசாரிப்பார்கள்? ஓ, பூமியின் இராஜாக்கள் நகரத்திற்குள் பிரவேசித்து இயேசு வாக்குத்தத்தம் செய்தது போல அப்போஸ்தல நியாயாதிபதிகளின் முன்பாக வருவார்கள். ஓ. 1500 மைல்கள் உயர உச்சியில் இந்த சிங்காசனத்தில் ஒளியாகிய இயேசு சபையின் மேல் அமர்ந்திருப்பதை முழு உலகமும் காணும்: நீங்கள் அவரைக் காணத்தக்கதாக 1500 மைல்கள் (அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதி) உயரமாக அது எழும்பி சீயோன் பர்வதமாக விளங்கும். மேலும் கீழுமான அப்பூமி எல்லாம் மீட்கப்பட்டதாயிருக்கும். அங்கே வீடுகள் சுத்த பொன்னாயிருக்கும். அங்கு இருபுறமும் மரங்கள் வளர்ந்திருக்கிறதான வீதிகளும், நந்தவனங்களும், ஜீவ தண்ணீர் சிங்காசனத்தினின்று புறப்பட்டு பளிங்காக மிளிரி திறப்பின் வாயிலினூடே உப்பரிகையின் மேல் ஓடும். ஜீவ விருட்சமானது ஒவ்வொரு முற்றங்களிலும் வளர்ந்தோங்கி வருஷத்தில் பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வகை கனியைத் தரும். ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள் கொண்டு வருவார்கள் ... ஜீவ விருட்சத்தின் இலைகள் நாட்டின் ஆரோக்கியத்திற்காக இருக்கும். சமாதானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இராஜாக்கள் மகிமையை மணவாட்டியின் அறைக்குள் கொண்டு வந்து விட்டு பின் வெளியே செல்லும் போது. அம்மரத்தின் இலைகளில் ஒன்றை பறித்து தேவனுடைய கோபாக்கினை முடிந்தது என்பதற்கு அடையாளமாக புறாவானது பரிசுத்த இலை ஒன்றை பேழைக்குள் கொண்டு வந்தது போல) தங்கள் அண்டை நாட்டு இராஜாக்கள் காணும்படி அதை காண்பித்து நாம் என்றென்றும் சமாதானமாயிருக்கிறோம் என்பதை அதன் மூலம் அறிவிப்பார்கள். அது இளைப்பாறுதலுள்ள தாயிருக்கும். ஒரு சமயம் நாம் சண்டையிட்டு, இரத்தம் சிந்தி. அலறி பிள்ளைகளை எரித்து இவ்விதமான காரியங்களைச் செய்தோம். ஆனால் இப்பொழுதோ சமாதானம் உண்டாயிருக்கிறது என்பார்கள், ஆரோக்கியம், அது வியாதிக்கான ஆரோக்கியமன்று. அது தேசங்கள் அமைதலாயிருப்பதையே குறிக்கின்றது. ஆமென்! உச்சியிலே சிங்காசனமுள்ள நகரம் அது. " அங்கே அவர்களுக்கு வெளிச்சம் தேவையில்லை. ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு” (வெளி 21:23) பாருங்கள்? தேவன் தாமே எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருக்கத்தக்கதாக, காலம் நிறைவேறும் போது இயேசு எல்லாவற்றையும் பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுப்பார். பின்பு இஸரவேல் புத்திரரை வனாந்திரத்தில் பின்தொடர்ந்த அக்கினி ஸ்தம்பமாகிய தேவனாகிய கர்த்தர் பரிபூரணமான ராஜாங்கத்திலுள்ள சிங்காசனத்திற்கு உயர எழும்பிச் செல்வார். நம்முடைய யோசேப்பாகிய இயேசு இந்த சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார். அப்பொழுது சீயோன் மலையின் மேல் இராஜாதாமே வெளிச்சமாயிருந்து அந்த பரிசுத்த வெளிச்சம் முழு நகரத்தையும் பிரகாசமான வெளிச்சமாக்கும். அல்லேலூயா! 1500 மைல்கள் உயரமாய் 1500 மைல்கள் சதுரமாய் தேவனுடைய பரதீசுகள் நகர முழுமையும் கட்டப்பட்டதாய் அமைந்திருந்தது. அங்கே வீதிகளும், இருபுறமும் மரங்களுள்ள சாலைகளும் அமைந்திருந்தன. வெளிப்படுத்தல் 21ம் அதிகாரம் படித்து அது சரியா என்று பாருங்கள்! ஆட்டுக்குட்டியானவரே அங்கு விளக்காயிருப்பதனால் அவர்களுக்கு வெளிச்சம் தேவையில்லை. சிங்காசனத்தினின்று அது 1500 மைல்கள் நேரடியாக இருக்காது. ஆனால் சற்று சாய்வாக கூர்நுனி கோபுரம் போல் இருக்கும். அது ஒரு பட்டணத்திலிருந்து மறுபட்டணம் வரையும், நீங்கள் கவனிப்பீர்களானால் அது ஒரு பட்டணத்தின் பக்கம் துவங்கி மறுபக்கம் வரையும் இருக்கும். நான் இங்கே ஒரு சிறிய காரியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு கூடியிருக்கும் சிறு கும்பலை கவனித்தீர்களா? இவர்கள் ஜியார்ஜியா, கலிபோர்னியாவிலிருந்து சாஸ்க்கட்சிவான் (Sasakatchewan) வரையும், கான்ஸாஸிலிருந்து (Kansas) கற்பாறை கடற்கரையான மெயின் வரையும் உள்ள இடத்திலிருந்து வந்தவர்கள். 1500 மைல்கள் சதுரம் பரப்பளவிலிருந்து தான் இவர்கள் வந்துள்ளனர்.  ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருகிறார்கள் தூர தேசத்தினின்றும் அவர்கள் வருகிறார்கள்; நம்முடைய ராஜாவோடு விருந்து உண்ண விருந்தினராக வருகிறார்கள் (எதை உட்கொள்ள? மனித அப்பத்தினால் மாத்திரம் அல்ல - வார்த்தை அப்பத்தினால்) இந்த யாத்திரீகர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (அவர்களைப் போல் ஒரு ஜனத்தையும் நான் பார்த்ததில்லை என்று நான் கூறுவேன்) திவ்விய வெளிச்சம் பிரகாசிக்கும் அவர் முகத்தை தரிசிக்கிறார்கள்; கிருபையில் பங்கேற்பவர்களாகிய ஆசீர்வதிக்கப்பட்டோர் அவரின் கிரீடத்தில் ஒளி வீசும் கற்களாயிருப்பார்". ஓ, இயேசு சீக்கிரம் வருகிறார். நம் கவலையெல்லாம் அப்பொழுது தொலையும், இந்த மலை வரும்போது ஓ, நம் இராஜா எவ்விதமாயிருப்பார்".  இன்னும் நீண்ட காலம் இல்லை. எல்லாமே பரிபூரணமாக, பூகோள அமைப்பின்படி - சோதோம், தூதன் எல்லாமே சரியானபடி அமைந்துள்ளது. அது எதைக் குறிக்கிறது? சற்று யோசித்துப் பாருங்கள், 1500 மைல் சதுர பரப்பளவிலிருந்து இந்த ஒரு சிறு கூடாரத்திற்கு ஜனங்கள் வருவதென்பது - அதே பரப்பளவு. பாஸ்தீனாவிலுள்ள அந்த சிறிய இடத்தைக் குறித்து தேவன் ஏன் அவ்வளவு அக்கரைக் கொண்டார். (பாருங்கள்?) ஆனால் அங்கு தான் தேவாலயம் கட்டப்பட்டது. அவருடைய பரிசுத்த பாதங்கள் ஒலிவமலையின் மேல் நிற்கும் போது. அது வலதாகவும், இடதாகவும் பிளந்து இடங்கொடுக்க புதிய எருசேலம் அங்கு துருத்திக் கொண்டு வெளிவரும். கவனியுங்கள். ஒரு சமயம் பிசாசு அவரை சோதிப்ப தற்காக ஓர் உயர்ந்த மலையின் மேல் கொண்டு செல்ல முயற்சித்ததை நினைவில் கொள்ளுங்கள். 1500 மைல் உயரத்தில் அவருடைய சிங்காசனம் இருந்தது. புதிய எருசலேம் பன்னிரண்டு அஸ்திபாரங்களை உடையதாயிருந்தது. 216 அடியா யிருந்த ஆரோனின் மார்பதக்கம் போலிருக்கும் மதிலின்மேல் 12 அப்போஸ்தலரின் நாமங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவருடைய பரிசுத்தவான்கள் அவரை ராஜாதி ராஜாவாக முடிசூட்டும்போது சிங்காசனத்தில் அவரே தலைக்கல்லா யமைந்திருப்பார். ஒரு டாலர் நோட்டு உங்களிடம் இருந்தால் அதை கவனித்து பாருங்கள். அதில் ஒரு முனையில் கழுகும், ஈட்டியும், ஆயுதங்களின் போர்வையும் மறு முனையில் கூர்நுனி கோபுரமும் அதின் உச்சியில் எல்லாவற்றையும் காணும் ஒரு கண்ணும் வரையப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருப்பது என்னவென்று அவர்களுக்கே புரியவில்லை. அக்கண்ணிற்குமேல், "இது தான் மகத்தான முத்திரை” என்று பொருள்படும்படி லத்தீன் பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. காய்பா கூட தான் எதை தீர்க்கதரிசன மாயுரைக் கிறான் என்பதை அறியாதவனாயிருந்தான். அந்த மகத்தான முத்திரை இங்கே காணப்படுவதைப் பாருங்கள்? புதிய நகரம் ஒரு தட்டையான சதுர வடிவம் கொண்டதல்ல. மாறாக யாவரும் காணக்கூடிய விதமாக சாய்வான கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பரிசுத்த மாமலையின் உச்சியின்மேல் கர்த்தர் தாமே இறங்குவார். ஏனோக்கின் கூர்நுனி கோபுரத்தில் தலைக்கல் வைக்கப்படவில்லை என்பதை கவனியுங்கள். ஆனால் தலைக்கல்லானது இனி வருகிறதாயிருக்கிறது. இந்த மலையானது வெளியே துருத்திக் கொண்டு வந்து, மீட்கப்பட்டவர்கள் வாழத்தக்கதான கர்த்தருடைய பர்வதமாயிருக்கும். இருபுறமும் மரங்களாகிய விஸ்தாரமான சாலைகள், நந்தவனங்கள் இவைகளைச் சுற்றி ஜீவநதி ஓடும். அங்குள்ள வீடுகளும், வீதிகளும், கண்ணாடிப் போன்று (ஊடுருவிப் பார்க்கக் கூடியதாக - தமிழாக்கியோன்) எல்லாம் பொன்னாயிருக்கும். பன்னிரண்டு விதமான கனிகளை கொடுக்கும் ஜீவ விருட்சமும் அங்கிருக்கும். பூமியின் மதிப்பிற்குரிய ராஜாக்களும், மனிதரும் மகிமையையும், கனத்தையும் அவ்வாசலின் வழியாக கொண்டு வருவார்கள். அந்த வாசல் இரவில் அடைக்கப்படுவதில்லை. ஏனெனில் அங்கு இரவு என்பது கிடையாது. "ஆட்டுக்குட்டியானவரே அந்த நகரத்தின் விளக்கு; அங்கு இரவென்று ஒன்று இல்லை; உழைப்பும் கவலையுமற்றதோர் வீடு உண்டங்கு எனக்கு ஓ, ஆட்டுக்குட்டி விளக்காயிருக்கும் இடத்திற்கே  நான் சென்றுக் கொண்டிருக்கிறேன்”  இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பட்டணங்களும், வீடுகளும் வரப்போகிற அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறியாமலிருக்கிறீர்கள். இந்த இயற்கையானக் காரியங்களெல்லாம் நிழலாயிருக்கின்றது. என்னுடைய கையின் நிழலை தூரத்தினின்று பார்க்கும்போது பன்னிரண்டு விரல்கள் அங்கு உண்டாயிருப்பது போன்று காணப்படும். ஆனால் அதனிடம் நெருக்கமாக வரும்போது, நிழலானது கையினுள் மறைந்த தத்ரூபமான ஒரே காரியத்தைத் தான் காண முடியும். ஒரு எதிர்மறை இருக்கும்போது அதன் உண்மையான தோற்றம் அங்கு உண்டாகி இருக்க வேண்டும். அநேக சமயங்களில் ஜனங்கள் மூன்று அல்லது நான்கு கடவுள்கள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அப்படியானால் நீங்கள் இன்னுமாக பழைய சீர்த்திருத்தலின் காலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருளாகிறது. பாருங்கள்? ஒரே ஒரு தேவன் தான் உண்டு என்ற காரியத்தை இங்கு வந்து புரிந்து கொள்ளுங்கள். பல ஸ்தாபனங்கள் அல்ல. ஒரே ஒரு மணவாட்டி தான் இருக்கப் போகிறாள். இவ்வுலகத்தினின்று அவள் பிரித்தெடுக்கப்பட்டு இக்காரியத்திற்காக முன்குறிக்கப்பட்டி ருக்கிறாள். அவர்கள் மட்டுமே தேவனுடைய இராஜ்ஜியத்தில் தங்கள் ஸ்தானத்தை அறிந்து கொள்வார்கள். புதிய நகரத்திற்கு பன்னிரண்டு அஸ்திபாரங்களும், பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கின்ற அப்போஸ் தலராகிய பன்னிரண்டு வாசல்களும் உண்டாயிருக்கும். இந்த சிங்காசனமானது மிகவும் உயரத்தில் அமைந்து அங்கு தலைக் கல்லாகிய இயேசு அமர்ந்திருப்பார். ஏனோக்கின் கூர்நுனி கோபுரம் எந்த விதமான நிழலையும் பகலில் உண்டாக்குவதில்லை. எகிப்திற்கு நான் சென்ற போது அதைப் பார்த்தேன். பூகோளக் கணக்கின்படி அது அமைக்கப்பட்டு அதனுடைய அளவுகள் சூரியன் எப்பக்கம் இருந்தாலும் அதை சுற்றி ஒரு நிழலும் விழாத வண்ணம் இந்த மகத்தான உருவமான கூர்நுனி கோபுரம் பூகோள கணக்கின்படி சரியாக பொருத்தப் பட்டிருக்கிறது. புதிய எருசலேமில் இரவு இருப்பதில்லை. மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் தலைக்கல்லாகிய இயேசு வானவரே தமது மகிமையின் வெளிச்ச வெள்ளமாய் எல்லா நேரங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருப்பார். கவனியுங்கள், மீட்கப்பட்டவர்கள் வெளிச்சத்திலே நடப் பார்கள். "அந்த அருமையான வெளிச்சத்திலே நாம் நடக்கிறோம்” என்று நாம் பாடினோம். "மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குள் வந்திருக்கிறோம்” என்று ஏதோ ஒன்று நம்மிலிருந்து கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் அது நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் அந்த தன்மையாயிருக்கிறது. பாருங்கள்? நாம் எவ்விதமாய் அதை உணருகிறோம்! ஆபிரகாம் இந்த நகரத்திற்காகத்தான் உண்மையிலேயே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அந்த நகரம் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவனாயிருந்தான். வேதம் அவ்விதமாகத்தான் கூறுகிறது. தான் வாழ்ந்துக் கொண்டிருந்த பட்டணத்தை விட்டு விட்டு, சரியாக அது எந்த இடத்தில் அமையப் போகிறதோ அந்த இடத்திற்கே சென்றான். "தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபி. 11:10) என்று வேதம் கூறுகிறது. இயேசு என்ற திவ்விய சிற்பி, முன்குறிக்கப்பட்டு திவ்வியமாக பெற்றெடுக்கப்பட்ட ஜனங்களுக்காக ஒரு திவ்விய நகரத்தை தம்முடைய திவ்விய கரங்களால் ஆயத்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்திற்காக காத்திருந்து அதை அடைவதற்காக ஆபிரகாம் தன்னை பரதேசி என்று அறிக்கை செய்தான். யோவான் அது இறங்கி வருவதைக் கண்டான். ஆனால் ஆபிரகாமோ அது இந்த பூமியில் தான் எங்கேயோ இருக்கிறது என்று நினைத்தான். ஏன்? ஏனெனில் தகப்பனும், தாயும் வம்சவரலாறும் இல்லாத, நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவராகிய மெல்கிசேதேக்கு என்பவரை அவன் சந்தித்தான். மீட்கப்பட்ட வர்கள். வாழப் போகிறதான கர்த்தருடைய பரிசுத்த மலையின் நகரம் எங்கே உண்டாகப் போகிறதோ அந்த தத்ரூபமான பூமியில் ஆபிரகாமும் இந்த மெல்கிசேதேக்கும் அப்பம் பிட்கும் ஆராதனையைக் கைக்கொண்டார்கள். ஓ, இப்பொழுது நமக்கு காலம் என்னும் ஒன்று உண்டு. இதன் பின்பு முடிவில்லாத காலமான நித்தியத்திற்கு சென்றுவிடுவோம். ஓ, அந்த பரிசுத்த மலையில் இருபுறமும் மரங்களாகிய சாலைகளும், நந்தவனங்களும், வீடுகளும் பளிங்குக்கொப்பான சுத்த பொன்னாயிருக்கும் (ஊடுருவிப்பார்க்கத்தக்கதாக) (வெளி. 21:18ஐ படியுங்கள்) ஒவ்வொரு மாதமும் ஒரு வகை கனியாக பன்னிரண்டு மாதங்களுக்கு பன்னிரண்டு வகை கனிகளைத் தரும் ஜீவ விருட்சம் அங்கு இருக்கும். அந்த பழங்களை சாப்பிடுகிற ஜனங்கள் பிரதிமாதமும் தங்கள் ஆகாரத்தை மாற்றிக் கொள்வார்கள். அது ஜெயம் கொள்பவர்களுக்கு மட்டும் தான் என்பதை அறிவீர்களா? ஸ்தாபனங்களுக்கு அது கிடைக்காது. "அதை அப்படியா அர்த்தம் கொள்ளுகிறீர்கள் சகோ. பிரான்ஹாமே?" என்று நீங்கள் கேட்கலாம். வெளிப் படுத்தின விசேஷம் 27ஐ பார்த்து அதுதான் சத்தியமா இல்லையா என்று அறிந்து கொள்வோம். " ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், (அவர் யூதரிடம் பேசாமல், புறஜாதி சபைகளுக்கு பேசுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்." மிருகத்தையும், அதின் முத்திரையையும் (கத்தோலிக்க மார்க்கம், பிராடஸ்டெண்ட் மார்க்கம், ஸ்தாபன முறைமைகள்) அவனுடைய நாமத்தையும் ஜெயங்கொள்கிறவர்களே வாசல்கள் வழியாய் நுழையவும், ஜீவ விருட்சத்தில் பங்கேற்கவும் உரிமையுடையவர்களாயிருப்பர். அசுத்தமானது ஒன்றும் அதற்குள் செல்வதில்லை. இந்த ஜீவ விருட்சம் ஜெயம் கொள்ளுகிற வர்களுக்கு மட்டுமே. அதைக் குறித்து நினைத்துப் பாருங்கள்: இன்னும் சற்று ஆழமாக அதை சிறிது நேரத்தில் நாம் காண்போம்.. அங்கு வாழும் ராஜாக்கள் தேவசிங்காசனத்திற்கு முன்பாக பரிசுத்த நிலத்தின் மகிமையையும், கனத்தையும் கொண்டு வந்து வைக்கும் போது (பதினோரு கோத்திரங்களும் ஆசரிப்பின் கூடாரத்திற்கு வெளியே தங்கள் தசமபாகங்களை லேவியினிடம் கொண்டு வருவதுப் போல) அவர்கள் தங்கள் கைகளை நீட்டி ஜீவ விருட்சத்தின் ஜீவ இலைகளைப் பறித்து கொண்டு வெளி நடந்து செல்வார்கள். இனி ஒரு போதும் யுத்தம் இல்லை, எல்லாம் சமாதானமாயிருக்கிறது என்பதை அது குறிக்கிறதாயிருக்கிறது. இலைகள் தேசங்கள் சுபீட்சமாக இருப்பதற்கு அடையாளமான ஞாபகச் சின்னமாயிருக்கிறது. ஏதேன் தோட்டத்தில் ஆதாம் விழுந்திராமலிருந்தால் அங்கே இருந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசித்திருப்பான். இந்த ஜீவ விருட்சமானது புதிய பூமியின் எல்லா காலத்திலும் அவன் வாலிபனாகவே தொடர்ந்து சென்றுக் கொண்டிருக்கப் போவதை அவனுக்கு அறிவுறுத்துகிறதாயிருந்தது. அதே விதமாகத்தான் தேசங்களும் தொடர்ந்து சமாதானமாயிருந்துக் கொண்டேயிருக்கும் என்பதற்கு அந்த ஜீவ விருட்சத்தின் இலை அடையாளமாயிருக்கிறது. கவனியுங்கள், இப்பொழுது இருக்கும் வியாதியைப் போலல்ல ; ஆதாமுக்கு என்ன உரிமை இருந்ததோ அதைப் போல. புறாவானது சமாதானத்தின் அடையாளமாக பரிசுத்த இலையைக் கொணர்ந்தது போல், ஒவ்வொரு ராஜாவும் ஒரு இலையை எடுத்துச் செல்வார்கள். கவனியுங்கள், இந்த ஜீவ நதி, ஒரு வேளை பல சிறிய ஆறுகள் ஒன்று சேர்ந்து ஜீவ நதியாக உருவெடுக்கிற தாயிருக்கலாம் (ஏறத்தாழ 30 பக்க குறிப்புகள் நான் வைத்திருக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் நான் முடிக்கப் போகிறேன்) மலைகளில் கொப்பளித்துக் கொண்டு வரும் நீரூற்றுகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்கிறதை போல் வேறொன்றும் தாகத்தை தீர்க்கிறதாக நான் இதுவரை காணவில்லை. (அதை குறித்து நான் அன்றொரு இரவிலே பிரசங்கித்திருக்கிறேன்) நீங்கள் தாகமடைந்து களைப்புற்று ஒரு ஓடையினண்டை விழுந்து விடுவீர்களானால் அவ்வோடையானது உங்கள் ஜீவனை திரும்ப அளிக்கும் இரட்சகனாயிருக்கிறது. பூமியின் பல நூறு அடி ஆழங்களில் கிருமிகள் அண்டாத சுத்தமான ஜீவன் கொடுக்கும் தண்ணீரினால் பூமியானது கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. அதை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். புத்துணர்ச்சியூட்டும் அநேக நீரோடைகள் இப்பூமியுடைய தாயிருக்கின்றது. நீங்கள் தாகத்தினால் மரித்துக் கொண்டிருக்கும் போது, அதினின்று குளிர்ந்த தண்ணீரைப் பெற்றுக் கொண்டு அதனால் நீங்கள் ஜீவிக்கலாம். இந்த நதி எங்கேயிருந்து வருகிற தென்பதை கவனியுங்கள். தேவன் அமர்ந்திருக்கும் சிங்கா சனத்தின் கீழிருந்து வருகிறதாயிருக்கிறது. அதனால் தான் அது ஜீவனைக் கொடுக்கத்தக்கதான இரட்சகனாயிருக்கிறது. இந்த முழு உலகத்திலும் (நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பொழுதுள்ள பூமியில்) கிறிஸ்தவர்களோ அல்லது புறமதஸ்தரோ எல்லோரும் கோவில்களையுடையவர்களா யிருக்கின்றனர். ஆனால் இந்த புதிய நகரத்திலோ. "அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை. சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்” என்று வேதம் குறிப்பிடுகிறது (வெளி 21:22). சிங்கமாகிய ஆட்டுக்குட்டியானவரே விளக்காகவும், சிங்காசனமாகவும், ஜீவனாகவும், அவரே ஆலயமாகவும் இருக்கிறார். இந்த நகரத்தில் அவரே ஆராதனையின் பொருளாக தம்முடைய ஜனங்களோடு இருக்கிறார். மறுரூப் மலையின் மேல் பேதுருவும், யோவானும் இருக்கும் போது வெளிச்சமானது மலையை மூடி, "இவர் என்னுடைய நேசக்குமாரன்” என்ற சத்தம் பிறந்தது. அதே விதமாக கூர்நுனி கோபுரத்தை அவருடைய ஆவி - விளக்கு பிரகாசமடையச் செய்கிறது. அது மட்டுமல்ல "ஒரு பெருஞ்சத்தம் கேட்கப்பட்டு அது : இதோ மனுஷர் களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது” என்று வேதம் குறிப்பிடுகிறது (வெளி. 21:3). தேவன் மனிதனை மூன்று வழி முறைகளில் மீட்டு பின் அவனில் குடிகொண்டிருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது. தேவன் இப்பூமியை மீட்டு இப்பூமியின் மேல் தம் வாசஸ்தலத்தை வைத்து, பூமியிலிருந்து மீட்கப்பட்டவர்களாகிய தம்முடைய பிரஜைகளோடு இப்பூமியின் மேல் வாசம் செய்யப் போகிறார். பாவத்தின் காரணத்தினால் இப்பூமி விழுந்து போயிற்று. தேவன் அது அவ்விதமாகவே போகத்தான் வேண்டுமென்று. அதை விட்டார். ஆனால் விழுந்து போன பூமியையும், அதன் பாகமாகிய நம்மையும் மீட்கும்படி அவர் இயேசுவை அனுப்பினார். "உங்கள் தலையிலுள்ள மயிரில் ஒன்றும் அழிந்து போவதில்லை” அதை கடைசி நாளில் உயிரோ டெழுப்புவேன்” என்று இயேசு கூறினார், பாருங்கள்? ஏன்? ஏனெனில் நீங்கள் பூமியின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். கவனியுங்கள், என்னுடைய மயிரை நான் இழந்து போனதைக் குறித்து என் மனைவி என்னிடம் பேசின போது நிகழ்ந்த சிரிப்பான காரியம் என்னவென்றால்: நான் அவளிடம், "நான் அவைகளில் ஒன்றையாகிலும் இழந்து போகவில்லை” என்றேன். அதற்கு அவள், “அப்படியானால் அவைகள் இப்பொழுது எங்கே?" என்று கேட்டாள். அதற்கு நான், "அதை நான் பெறுவதற்கு முன்பு அது எங்கேயிருந்தது?" என்றேன். அது ஒரு பொருளாயிருந்தது. அவைகள் எங்கேயிருந்தாலும் அவைகள் எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. பாருங்கள்! ஒரு நாள் நான் அவைகளிடத்திற்குச் செல்வேன். அது தான் சரி. சுருங்கிப்போன, விழுந்துக் கொண்டிருக்கிற இந்த சரீரமானாலும், தோள்களும், முழங்கால்களும் வலியினால் பீடிக்கப்பட்டு, தொண்டை கரகரப்பாயுள்ள சரீரமானாலும் பரவாயில்லை. நீங்கள் இதை கடலினுள் அமிழ்த்தி விடலாம். ஆனால் எக்காளச் சத்தமானது அதனுடைய பெயர் என்ன வென்பதை அறிந்திருக்கும். சற்று பொறுத்திருங்கள்! ஆம் ஐயா . நாம் ஒரு நாளில் மாறிவிடப் போகிறோம். நான் மீட்கப்பட்ட இந்த உலகத்தின் ஓர் பாகமாயிருக்கிறேன். நீங்கள் இந்த உலகத்தில் தான் இருக்கிறீர்கள். ஆனால் இந்த உலக வழக்கங்களின்படியல்ல. ஏனெனில் மீட்கப்பட்ட ஒழுங்காகிய வித்தியாசமான ஒழுங்கிலே நீங்கள் வாழ்ந்து கொண்டி ருக்கிறீர்கள். மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தல மிருக்கப்போகிறதை கவனியுங்கள். கவனியுங்கள், பழையவைகள் ஒழிந்து போயின. இந்த காரியமும் ஒழிந்து போயிற்று. இந்த காரியம் என்றால், மனிதரோடு வாழத்தக்கதாக கீழிறங்கி வந்த அந்த வானம் என்று பொருள். இயேசு என்ற பூமியின் ஒரு பாகத்தின் மேல் புறா வந்து அமர்ந்த போது பரலோகமும், பூமியும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டன. அவர் இந்த பூமியின் தூளான மனிதனாயிருந்தார்; சிருஷ்டிக்கும் வல்லமையினால் தேவன் ஒரு சிறிய ஜீவனின் மூலம் வந்து, பின்பு அந்த இரத்தத்திலிருந்த ஜீவன் தேவனிடத்திற்கு திரும்பவும் எழுந்தருளிச் சென்றது. ஆனால் இரத்தம் பூமியின் மேல் சிந்தப்பட்டதன் காரணம் அதை உரிமை கோருவதற்கே; ஏனெனில் அது காயீனின் வித்தின் மூலமாய் கொண்டு வரப்பட்டதாயிருந்தது. முதல் ஆதாமை தம்முடைய சிருஷ்டிக்கும் வல்லமையினால் கொண்டு வந்தது போல் இரண்டாம் ஆதாமையும் கொண்டு வந்தார். காயீன், ஆபேல் என்னும் நீதிமானைக் கொன்று அவனுடைய அணுவை உடைத்து சிதறப் பண்ணினான். ஆபேல் பால் உணர்ச்சியின் மூலம் பிறந்தவன். ஆனால் இயேசுவோ பால் உணர்ச்சியினால் அல்ல. அதன் தொடக்கமே தேவனுடைய சிருஷ்டிப்பாயிருக்கிறது. ஆகவே பூமியையும், சுண்ணாம்பு, உப்புக்கள், எண்ணெய், வெளிச்சம் இவைகளினால் உண்டாக்கப்பட்ட உங்களையும் அவர் மீட்டுக் கொண்டார். ஆகவே, ஒரு மயிரும் பாழாய் போவதில்லை. ஏனெனில், "கடைசி நாளில் அதை நான் திரும்பவும் எழுப்புவேன்" என்று அவர் கூறினார். இனி அதைக் குறித்து கவலையென்ன? தேவன் இப்பூமியின் ஒரு பாகமாகிய தம்முடைய சொந்த சரீரத்தில் இப்பூமியின் மேல் வாசம் செய்ய வந்தார். நாம் நீதிமான்களாயிருப்பதற்காக அதை அவர் திரும்ப எழுப்பினார். அவரின் செய்கையை நாம் ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கும் போது அதனால் நாம் நீதிமான்களாகிறோம். இந்தக் காரியங்கள் சாத்தியமாவதற்காகவும், நம்மை மீட்பதற்காகவும் இயேசு மனிதனும், தேவனும் என்ற முன்குறிக்கப்பட்ட தம்முடைய இடத்தை எடுத்துக் கொண்டார். கவனியுங்கள். இந்த நகரத்தைக் கொண்டு புரிந்து கொண்டீர்களா? அது ஒரு பரிசுத்த , மலையாயிருக்கும், "என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வார் யாருமில்லை" என்று கர்த்தர் கூறுகிறார். இந்த நகரம் சதுரமானதல்ல. அது ஒரு மலையாயிருக்கும். அதனுடைய நீளமும், அகலமும், உயரமும் 1500 மைல்களாயிருக்கும். ஆகவே அது ஒரு மகத்தான கூர்நுனி கோபுரம் போன்ற மலையாயிருக்கும். அந்த மலையின் மேல் நகரம் அமைந்திருக்கும். மகிமை! அதுதான் தேவனுடைய பரதீசுகளும், அதுவே உலகத்திற்கு வெளிச்சமாகவும், ஓர் பரிபூரணமான ராஜ்ஜியமாயிருக்கும். இது ஏழாம் நாளன்று - இது நித்தியமாயிருக்கிறது - பாருங்கள். இது ஆயிரம் வருட அரசாட்சியுமன்று. மாறாக புதிய பூமியாயிருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சி நடந்துக் கொண்டிருக்கும் போது இப்பூமியானது பரிசுத்தமாகுதல் என்ற வழிமுறையில் (இரண்டாவது வழிமுறை - தமிழாக்கியோன்) சென்று கொண்டிருக்கும். ஆனால் அது இன்னுமாக எரிக்கப்பட வேண்டிய தாயிருக்கிறதென்பதை கவனியுங்கள்! இரத்தத்தினால் மீட்கப்பட்ட மணவாட்டி 1000 வருடத்தை இப்பூமியின் மேல் எடுத்துக் கொள்வாள். இக்காரியம் பூமியும் அவ்விதமாக மீட்கப்படும் என்பதற்கு நினைப்பூட்டுதலாயிருக்கிறதை காட்டுகிறது. இந்த நகரத்தின் பிரஜைகளாகிய நீங்கள் அக்கினியினால் சுத்திகரிக்கப் பட்டது போல பூமியும் அக்கினியினால் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஆகவே நீங்கள் மரித்தாலும், ஜீவித்துக் கொண்டிருந்தாலும் அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கிவிடாது. அவர் இன்றைக்கு வருவாரென்றாலும், 100 வருடங்கள் கழித்தோ அல்லது 1000 வருடங்கள் கழித்தோ வருவாரென்றாலும், அது ஒருபோதும் எந்த வித வித்தியா சத்தையும் உண்டாக்கிவிடாது. ஏனெனில் நான் என்னுடைய மாறுதல் வரும் வரைக்கும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். ஆகவே வயதாகிவிட்ட ஆணும், பெண்ணுமாகிய நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் தேவனுடைய தன்மையில் முன் குறிக்கப்பட்டவர்களாயிருப்பீர்களென்றால் நீங்கள் நித்தியத்தில் இருக்கிறீர்கள். ஏழாம் நாளிலிருந்து எட்டாம் நாளிற்குள் (பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நித்தியத்திற்குள் பிரவேசிக்கும் காரியம் ) நீங்கள் பிரவேசித்திருப்பீர்களானால் நீங்களும் நித்தியத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பீர்கள். மாறாக உணர்ச்சிகளின் பேரிலும், குதித்தல் போன்றவைகள் பேரிலும் இன்னுமாக சார்ந்திருந்து. "நான் இன்னும் ஏழாம் நாளைக் கொண்டாடுவேன்; நான் மாமிசம் உண்ணமாட்டேன் என்றெல்லாம் கூறி காரியங்களை செய்வீர்களானால் அவைகள் ளெல்லாம் அழிந்து விடும். முன் குறித்தலே காரியம். இந்த நிச்சயமானது கூடாரப் பண்டிகைக்கு பின்வருகிறதாயி ருக்கிறது. பாருங்கள்? இந்த கூடாரப் பண்டிகையானது கடைசி பண்டிகையான ஏழாவது பண்டிகையாயிருக்கிறது. இப்பொழுது நாம் ஏழாம் சபையின் காலத்தில் கூடாரப் பண்டிகையின் கீழ் தொழுது கொண்டு வருகிறோம். ஆயிரம் வருட அரசாட்சியில் இந்த கூடாரப் பண்டிகை யான ஏழாவது நாளில் இருந்துக் கொண்டு வருகிறோம். ஏழாம் நாளிற்குப் பின்பு பரிசுத்த சபை கூடுதல் உண்டு. திரும்பவுமாக நித்தியத்திற்கு செல்லும் காரியம். எப்படி? நாம் இதிலே பாகமாயிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள செய்வதற்காக நித்தியமானவர் வந்து நம்மை திரும்பவும் எடுத்து மீட்டிருக்கிறார். அவருடைய ஒருபாகம் நீங்கள் என்று எப்படி அறிந்து கொள்வீர்கள்? இந்த மணிநேரத்திற்கு உரிய வார்த்தையினாலேயே, அந்த வார்த்தை என்ன? முதல் நாளுக்குத் திரும்பிச் செல்லும் காரியமே. "அவன் வந்து பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” (மல். 4:6 இரண்டாம் பாகம்). உணர்ச்சிகளினாலல்ல, திரும்ப அளிக்கும் ஊழியத்தின் மூலம் உண்மையான பெந்தெகொஸ்தேயின் நாட்களுக்குக் கொண்டுச் செல்லுதல்... காலையில் பிரகாசித்த அதே சூரிய வெளிச்சம், மாலை நேரத்தின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தப்படும். அதுதான் இந்த நாளிற்காக கொடுக்கப்பட்ட வார்த்தை. ஆமென்! ஆமென்! நாம் இப்பொழுது எங்கிருக்கிறோம் நண்பர்களே? நாம் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுதலுக்காக காத்திருக்கிறோம், ஏனெனில் அப்பொழுது தான் வெளி. 11ம் அதிகாரம் யூதருக்கு காண்பிக்கப்படும். அது சரியானது. எடுக்கப்படுதல் வந்துக் கொண்டிருக்கிறது. கவனியுங்கள், புதிய நகரத்தின் வெளியே மதில் சுவர் களும், வாசல்களும், பரந்திருக்கும், தேசங்கள் சமாதானத்தோடு சஞ்சரித்திருக்கும். ராஜாக்கள், தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள் கொண்டு வருவார்கள். இனி ஒருபோதும் மயிர் கத்தரிக்கப்பட்ட பெண்கள் அதற்குள் வருவதில்லை. நான் அதற்கு உத்திரவாதம் அளிக்கிறேன். குறைவான ஆடை உடுத்து வோர்கள், புகைப்பிடிப்போர். விபச்சார இச்சைக் கொண்டவர். விபச்சாரர். பொய்யர், விக்கிரக ஆராதனைக்காரர் (யாராயிருந் தாலும்) நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் அழிந்து விட்டிருக்கும். அவருடைய பரிசுத்தத்தைக் குலைக்கும் எக்காரியமும் அங்கு காணப்படாது. அவைகள் முற்றிலுமாக ஒழிந்து போயின என்று அதைதான் அவர் கூறினார். அதனுடைய நிலங்களிலும் அதன் வாசல்களைக் சுற்றிலும் பாருங்கள்: "கரடி சாதுவாயும், ஒநாய் சாந்தமுள்ளதாயும்; சிங்கம் ஆட்டுக்குட்டியுடன் படுத்துக்கொள்வதாயும்; ஒரு சிறு பிள்ளை துஷ்ட மிருகத்தை வழி நடத்தும், நானும் அவ்வாறே மாற்றப்படுவேன்”.  முதுமை என்னில் வந்தடைந்து, மரணமானது இந்த அழிவுக்குரிய சரீரத்தில் கிரியை செய்யும். அப்பொழுது நான் மாறிவிடுவேன். அந்த பாடலை நீங்கள் கேட்டதுண்டா ? "கரடி சாந்தமுள்ளதாயும், ஓநாய் சாந்தமுள்ளதாயும் .... அது உங்கள் மேல் பாய்ந்து உங்களை பீறி கொல்ல முயற்சிக்காது. மாறாக உங்களோடு கூட பாதையில் நடந்து வரும். யார் அதை சுதந்தரிக்கப் போகிறார்கள்? மீட்கப்பட்டவர்கள் அல்லவோ? கவனியுங்கள், உதாரணப்படுத்திக் காண்பிக்கும் காரியத்தை தான் நான் உங்களுக்கு போதிக்க முடியும். சகோ. லீ அவர்களே, தீர்க்கதரிசியான நோவாவோடு இந்த புதிய பூமியில் யார் வெளியே வந்தார்கள்? நோவாவோடு கூட பேழைக்குள் சென்றவர்கள் தான் வெளியே வந்தார்கள். அது சரியா? நோவாவின் செய்தியினால் நோவாவோடு உள்ளே சென்றவர்கள் தான் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்ற புதிய பூமியின் மேல் அவனோடு வெளி நடந்து வந்தார்கள். அதே விதமாக யார் இயேசுவோடு இப்பொழுது செல்கிறார்களோ அவர்களே வெளி வருவார்கள். அவருக்குள் நீங்கள் எவ்விதம் நுழைகிறீர்கள்? ஒரே ஆவியினால் அவருக்குள் நீங்கள் நுழைந்து. அவரே வார்த்தையாயிருப்பதனால் நீங்கள் அவரின் பாகமா யிருக்கிறீர்கள். அவருடைய எந்த பாகமாய் நீங்கள் இருக்கிறீர்கள்? இந்த மணி நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற வார்த்தையைப் புரிந்துக் கொள்ளும் பாகமாய் நீங்கள் இருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அவரோடு வெளியே வந்து ஆயிரம் வருட அரசாட்சியில் இருப்பீர்கள். கவனியுங்கள், புதிய சந்ததியல்ல, பெயர்ந்து நடுதல். "ஆ சகோ. பிரான்ஹாமே அது இல்லை” என்று கூறலாம். கவனியுங்கள், 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எலியாவை உயிர்ப்பித்து அவனை யூதர்களுக்கு திரும்பவும் தீர்க்கதரிசியாக இப்பூமிக்கு அனுப்பத்தக்கதாக பெயர்த்து நட அவரால் கூடுமென்றால் தம்முடைய மணவாட்டிக்கு எவ்வளவு அதிகமாக அவரால் செய்யக் கூடும்! நோவா பேழையினின்று வெளி வந்த பின்பு அவரிடத்தில் சொல்லப்பட்டக் காரியம் என்ன? நோவா வெள்ளத்திற்கு பின்பு இப்புதிய பூமியின் மேல் வந்தபோது, ஆதாமிடம் சொல்லப்பட்ட வார்த்தையான, "நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” (ஆதி. 9:1) என்ற வார்த்தையே சொல்லப்பட்டது. கனி கொடுக்கிறவர்களாய் இப்பூமியை நிரப்ப வேண்டும். ஆதாமிடம் அதுதான் சொல்லப்பட்டது. இப்பொழுது மிகவும் நெருக்கமாக கவனியுங்கள்! ஆதாம் பலுகி, பெருகி பூமியை நிரப்ப வேண்டும். அது சரியா? அதே விதமாக நோவாவும் (பழைய உலகம் அழிக்கப்பட்ட பின்பு) பலுகி பெருகி பூமியை நிரப்ப வேண்டும். புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது சர்ப்பத்தின் வித்து என்னவென்பதை பார்க்க முடிகிறதா? எது பூமியை நிரப்பிற்று? புரிந்துக் கொண்டீர்களா? சரி, சாத்தான் எவ்விதம் ஏவாளிடம் வந்தான் பாருங்கள். அதன் காரணமாகவே மரணமானது அன்றிலிருந்து இன்றுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. வானங்களும் பூமியும், மிருகங்களும், சூழ்நிலைகளும், எல்லாம் அதன் காரணமாகவே சபிக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் சாத்தான் அதில் முந்திக் கொண்டான். பிதாவினிடத்தில் அதை திரும்ப அளிக்கத்தக்கதாக இயேசு வந்து அதை மீட்டார். இதை செய்வதற்காக அவர் அதன் பாகமாக மாறினார். (நான் அதை குறித்து சற்று முன்பு பேசினேன்). அதே மண்ணிலிருந்து மீட்கப்பட்டவராக (இயேசுதாமே அதன் பாகமாக இருந்தார்) அவர் மூலமாக பூமியோடும் கூட தேவனுடைய எல்லாத் தன்மைகளையும் மீட்டுக் கொண்டார். அவர் உரைக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார். மீட்கப்பட்டவர் களாகிய நாம் அவரின் பாகமாயிருக்கிறோம். ஆக உங்களால் புரிந்துக் கொள்ள முடியுமானால் அதுதான் காரியம். பாருங்கள்? பரிசேயர்கள் தாங்கள் தேவ ஊழியக்காரர் என்று உரிமை பாராட்டினார்கள், நான் முதல்விசை உதாரணப்படுத்திக் காண் பித்ததை பாருங்கள். அவர்கள் மூளை அறிவினால் மட்டும் அறிந்து வார்த்தையானது அவர்களுக்கு முன்பாக வெளிப் படுத்தப்பட்ட போது அவர்களால் வார்த்தையைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. “இந்த மனிதன் பிசாசின் ஆவியை யுடையவன்” என்று அவர்கள் கூறினார்கள். இன்றைக்கோ நாம் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுகிறோம். மகத்தான தாலந்துகள் கொண்ட பெரிய மனிதர்களாலும், மதபக்தியுள்ளவர்களாலும் நாம் அசுத்தர்களாக அழைக்கப்படு கிறோம். அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாருங்கள்? பூமிக்கு தண்ணீர் ஞானஸ்நானம் அதை சுத்திகரிப்பதற்கு போதுமானதாய் இருக்கவில்லை. அதை போலவே, அவர்களுக்கு தண்ணீர் ஞானஸ்நானம் உதவவில்லை... இரத்தத்தின் பரிசுத்தமாக்கப்படுதல் மூலம் அது திரும்பக் கொண்டு வரப்பட்டு பின் உரிமை கோரப்பட்டது. நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற விதமாய் அவருடைய மணவாட்டி பரிசுத்தமாக்கப்பட்டது போல, அக்கினி ஞானஸ்நானம் அவளை சுத்திகரித்தது போல பூமியையும் அக்கினி பரிசுத்தமாக்கும். நான் முன்பு கூறியது போல் புதிய சந்ததியை அவர் உருவாக்காமல், விழுந்து போனதை மீட்க அவர் வாக்குத்தத்தம் செய்தார். யார் யார் வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க வேண்டும் மென்று முன் குறிக்கப்பட்டார்களோ அவர்கள் மீட்கப்படுவார்கள். அவர் வாக்குமாறாத தேவன் என்று நாம் அறிவோம். தேவன் எடுக்கப்படுதல் மூலம் எலியாவை எடுத்து கொண்ட பின்பு தம்முடைய ஜனங்களுடைய மத்தியில் அவன் தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை எடுக்கும்படி திரும்பவும் அவனை பெயர்த்து நடுகிறார். அதிசீக்கிரமாய் அதை செய்யப் போகிறார். 2500 வருடம் அவனை உயிரோடு வைத்திருந்து அவன் தன்னை திரும்பவுமாக காண்பிக்கப்பட இருக்கிறான். மோசேயை மரித்தோரிலிருந்து எழுப்பினார். திரும்பவும் நிகழ்வதை கவனியுங்கள். அவனுடைய கல்லறை எங்கிருக்கிறது? யாராகிலும் அதைக் கண்டு பிடிக்க முடியுமா? யூதா 9ம் வசனத்தை படித்து பாருங்கள். பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயின் சரீரத்தைக் குறித்து பிசாசுடனே தர்க்கித்து பேசின் போது, "கர்த்தர் உன்னைக் கடிந்துக் கொள்வாராக என்றான்”. ஆனால் பேதுரு, யோவான், யாக்கோபு, மணவாட்டி வாழப் போகிறதான அதே மலையின் மேல், மறுரூப் மலையின் மேல் சரியாக நின்றுக் கொண்டு மோசேயை கண்டார்கள். எடுத்துக்கொள்ளப்பட்ட சபையும், நித்திரையாயிருந்த சபையும் அங்கு அடையாளங்காட்டப்பட்டது. அந்த மூன்று சாட்சிகளையும் அந்த மலையின் மேல் பேதுருவும், யோவானும், யாக்கோபும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரலோக சாட்சிகளாக எலியாவும், மோசேயும். இயேசுவும் அங்கே நின்று கொண்டிருந்தனர் பாருங்கள்? மரித்தோர் உயிரோடு எழும்புவதற்கு உதாரணமாக மோசேயும், எடுக்கப்பட்ட சபைக்கு உதாரணமாக எலியாவும் இன்னுமாக உயிரோடு அங்கு நின்று கொண்டிருந்தனர். இந்த பரிசுத்த மலையிலிருந்து அதை பிரதிநிதிப்படுத்தினார்கள். அங்கு இயேசுவாகிய மீட்பரை தேவன் நிழலிட்டு. "இவர் என்னுடைய நேசக்குமாரன்" என்றார். மறுரூபமலையின் சாட்சிக்கு முந்தின நாள் இயேசு, "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்ஜியத்தில் வருவதைக்காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் (மத். 16:28). அது என்ன? மரித்து உயிரோடு எழுந்தவர்களோடும், மறுரூபமாக்கப்பட்ட பரிசுத்தவான்களோடும் ஒன்றுகூடி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மத்திய ஆகாயத்தில் அவரை சந்திக்க, தேவன் இயேசுவை நிழலிட்டு, "இதோ என்னுடைய நேசக்குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்றார். புதிய இராஜ்ஜியத்தின் ஒழுங்குமுறை இதுதான். ஓ. சகோதரனே, சகோதரியே, மரணம் உங்களை மாற்றிப் போடுவதில்லை. மரணம் உங்கள் வாசஸ்தலத்தை மட்டுமே மாற்றுகிறது. பாருங்கள்? சாமுவேல் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, பரதீசுக்கும் சென்று, இரண்டு வருடம் கழிந்த பின்பு எந்தோர் (Endor) தேசத்து குறி சொல்பவள் சாமுவேலை அழைத்தபோது. சவுல் அவனை யார் என்று அறிந்துக் கொண்டான். அந்த குறி சொல்பவளும் கூட தரையில் முகங்குப்புற விழுந்தாள் என்று காண்கிறோம். சாமுவேல் ஒரு சிறு அணுவும் மாறவில்லை. அவன் அதே சாமுவேலாகவே இருந்தான். அவன் மரித்து இரண்டு வருடம் ஆன பின்பும் அவன் தீர்க்கதரிசியாகவே இருந்தான். ஏனெனில் அவன் சவுலைப் பார்த்து, "நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்” என்றான் (I சாமு. 28:19). அது அப்படியே நடந்தது பாருங்கள்? ஆகவே வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தின் நிறைவேறுதலுக்காக மோசேயும் எலியாவும் திரும்ப வரும் போது அவர்கள் தீர்க்கதரிசிகளாகவே இருப்பார்கள். அல்லேலூயா! அங்கே அந்த நகரத்திற்கு ஆட்டுக்குட்டியானவரே விளக்காயிருப்பார். சகோ. மெக்கின்னி அவர்களே, உங்களையும் என்னுடைய கிரீடத்தில் பதியும் கற்களாகிய ஜனங்களே, உங்களையும் நான் அறிந்து கொள்வேன். நான்கு பக்க சதுர பரப்பளவில் கட்டப்பட்டதான 1500 மைல்கள் அளவாய் அமர்ந்திருக்கும் அவளிடமாக கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அங்கே இயேசு மலையின் மேல் சிங்காசனத்திலே வீற்றிருக்கும் போது அங்கே பொன் எக்காளம் ஊதப்படும் போது யோசேப்பானவர் பரதீசினூடே நடந்து வரும்போது தேவ புத்திரர்கள் தங்கள் முழங்காலிலிருந்து தாங்கள் மீட்கப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்தவர்களாய் அவரைத் தொழுதுக் கொள்வார்கள். ஆமென் அல்லேலூயா! பரலோக வீடு செல்ல அநேக சமயம் நான் மிகுந்த ஆவல் கொண்டவனாயிருக்கிறேன் அந்த அழகான பொன் நகரத்தில், அந்த மகிமையையும், என் இரட்சகரையும், நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்.” "கர்த்தர் எனக்கு ஆயத்தமாக்கியுள்ள அந்த அழகு வீட்டிற்கு நான் போகப் புறப்பட்டு  விட்டேன்"  ஏசாயா, "கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும், அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, அவருடைய நாமம் அதிசய மானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்று கூறினார் (ஏசா. 9: 6.7). அங்கே மிருகங்களும் உண்டாயிருக்கும். ஓ, என்னே ! கரடி சாதுவாகவும், ஒநாய் சாந்தமாகவும், சிங்கம் ஆட்டுக்குட்டியுடனே படுத்துக்கொள்வதாயும்,  ஒரு சிறுபிள்ளை துஷ்ட மிருகத்தை வழிநடத்தும், (நான் வேறொன்றிற்கு மாறப்போகிறேன்) நானும் அவ்வாறே மாற்றப்படுவேன்".  அந்நாள் வரும்போது நான் அந்த நகரத்திற்கு செல்வேன். அந்த அழகுள்ள நகரத்திற்கு செல்ல நான் ஆயத்தமானேன். மீட்கப்பட்ட வல்லமையை என்னுடைய முழு இருதயத்தாலும் நான் இப்பொழுது உணர்கிறேன். அப்படி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் என் ஜீவனை நான் எறிந்து விடுவேன், ஏனெனில் நான் வாஞ்சிக்கும் ஓர் காரியத்தை ஜனங்களுக்கு போதித்தவனாக இருப்பேன். அவர் வாக்குத்தத்தம் செய்த இந்த நாளின் வாக்குத்தத்தத்தை நான் நோக்கிப் பார்த்து அது நிறைவேறுவதைக் காணும்போது, எல்லா ஸ்தாபனங் களினின்றும், மார்க்க வழிபாடுகளினின்றும் முன் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு 1500 மைல்கள் சதுர பரப்பளவிலிருந்து ஒன்று கூடியிருக்கும் இந்த சபைக் கட்டிடத்தை நான் பார்க்கும் போது, வார்த்தை தன்னில் தானே நிரூபணமாகிறதை நான் பார்க்கும் போது, இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட அந்த நாளில் என்னுடைய கிரீடத்தில் நீங்கள் முத்துக்களாக ஜொலிப்பீர்கள் என்பதற்கு யாதொரு சந்தேகமுமில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.. நாம் இங்கு விருதாவாக கூடி வருவதில்லை. ஒரு நாள் வரப்போகிறது. அந்த நாளுக்காக நாம் காத்துக் கொண்டி ருக்கிறோம். காலம் அதிகமாக தாமதமாகி விட்டது. ஆனால் இயேசு இன்னும் நெருங்கி இருக்கிறார். அவருடைய மகிமை அதிசயமாயிருக்கிறது. அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தா. அந்த நகரத்தை உங்களால் காண முடிகிறதா? அங்கே தான் மணவாட்டியும், மணவாளனும் வாழப் போகிறார்கள். அவருடைய வார்த்தையில் போஷிக்கப்படுவதற்காக பல நூறு மைல்கள் நீங்கள் பிரயாணம் செய்து இங்கு வருவதை அற்புதமாக நினைப்பீர்களானால், இது ஒரு நிழலாக மட்டுமே இருக்கிறது. நாம் அந்த நகரத்தில் வாழ்ந்து. நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்து. நாம் அந்த மரத்தின் கனிகளைப் புசித்து, அந்த பொன்னான வீதியில் நடந்து நீரூற்றிற்குச் சென்று நீர் அருந்தி, தேவனுடைய பரதீசுக்குள் தூதர்களோடு இப்பூமியை . மகிழ்ச்சியின் கீதங்களோடு சுற்றி வரும்போது அது எப்படிப்பட்ட நாளாயிருக்கும்! இந்த பிரயாணத்தில் பாதை கரடுமுரடாயிருக்கிறது. சில நேரங்களில் அது கடினமாகவும் ஆகிவிடுகிறது. ஆனால் அவரை நான் பார்க்கும்போது அவைகளெல்லாம் மிகவும் அற்பமானவை களாக தோன்றும். என்னவிதமான மோசமான பெயர்களால் அவர்கள் அழைத்தாலும் அந்த அழகான தேவ நகரத்தில் நான் அவரைக் காணும்போது அது என்னவாயிருக்கும்?  நாம் இப்பொழுது தலைவணங்குவோம்:  "என் கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்த அந்த அழகு வீட்டிற்கு நான் போகப் புறப்பட்டேன், எல்லாக் காலங்களிலும் மீட்கப்பட்டோர், வெள்ளை சிங்காசனத்தைச் சுற்றி, 'மகிமை' என்று பாடுவர் ) பரலோக வீடு செல்ல அநேக சமயம் நான் மிகுந்த ஆவல் கொண்டவனாயிருக்கிறேன் அந்த அழகான பொன் நகரத்தில் அந்த மகிமையையும், என் இரட்சகரையும், நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்!  பத்மூ தீவிலே யோவான் அதை கண்டானே..." அன்பின் இயேசுவே - அந்த நகரத்தையும் மகத்தான ராஜாவையும் குறித்ததான என்னுடைய நம்பிக்கை அது என் இருதயத்தினுடையதாயிருந்து அதன் மேலேயே குறைவர கட்டப்பட்டிருக்கிறது. என் கர்த்தாவே, தேவனே, இங்குள்ள ஒருவராகிலும் தயவு செய்து அழிந்து போக வேண்டாம். உம்முடைய வருகைக்காக காத்திருக்கும் இந்நாளில் நாங்கள் எங்களை ஆராய்ந்து பார்க்கட்டும், கர்த்தாவே, மீட்கப்பட்ட உம்முடைய கிறிஸ்தவர்கள் அங்கே ரோமாபுரியில் ஒரு அரங்கிலே சிங்கங்களினால் பீறப்பட்டு உயிரிழந்தவர்கள் ஒரு நாளில் புழுதி வெடித்து அவர்கள் வெளிவருவார்கள். அங்கே மகிமையின் மலையோரத்தில் கல்லறைகள் இருக்காது: மலர் வளையங்களின் மீது சிந்தப்படும் கண்ணீர் இனி இருக்காது, குவிக்கப்பட்ட மண் மேடு அங்கிராது: புயல் காற்றுகள் அதை இனி தாக்காது; அங்கு எல்லாம் மகிமையாயிருக்கும். எங்களுக்கு உதவி செய்யும், கர்த்தாவே, ஆட்டுக்குட்டி யானவரின் கலியாண விருந்திற்கும், ஆயிரம் வருட அரசாட்சிக்கும், தேனிலவிற்கு பின்பு சம்பவிக்கும் அந்த நகர பிரவேசத்திற்கும் அழைக்கப்பட்டவர்கள் இங்கிருப்பார்க ளென்றால் உதவி செய்யும், கர்த்தாவே, மணவாளன் மணவாட்டியை வீட்டிற்கு அழைத்துச் செல்வீர். அது அவளுடையது; அவளுடைய மணவாளன் நீர், அவள் உம் மணவாட்டியாயிருக்கிறாள். ஓ, நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் நீர் ஓர் வீட்டை ஆயத்தம் செய்ய சென்று விட்டீர். வார்த்தையான அவருக்கு நாங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கட்டும். ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். மற்றவர்கள் என்னதான் கூறி அதனிடமிருந்து பிரிக்க நினைத்தாலும், கர்த்தாவே, என்னை இன்னுமாக நெருக்கமாக சேர்த்துக் கொள்ளும்.  "பரலோக வீடு செல்ல அநேக சமயம் நான் மிகுந்த ஆவல் கொண்டவனாயிருக்கிறேன் அந்த அழகான பொன் நகரத்தில், அந்த மகிமையையும் என் இரட்சகரையும் நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்.  மணவாளன் கலியாண விருந்திற்குள் வருவார். அது //' வருடங்களாக இருக்கும். பின்பு எங்களுடைய தேனிலவிற்காக ஆயிரம் வருட அரசாட்சிக்கு வருவோம். மணவாளன் தன் மனைவிக்கு வியப்புண்டாக காரியம் செய்வது போல் அவர் அந்நகரத்தைக் காட்சியில் கொண்டு வருவார். தன்னுடைய வருங்கால இருப்பிடத்தை அவள் பார்க்கும்போது எவ்வளவாய் அந்த சிறிய மணவாட்டி வியப்புற்றவளாய் நிற்பாள்! விசுவாசத்தினாலே கர்த்தாவே, அதை நாங்கள் இன்று தூரத்திலே காண்கிறோம். அது இந்த பூமியில் இருக்கப் போகிறது. நீர் அவ்விதமாக வாக்குரைத்திருக்கிறீர். ஒரு நாளிலே உம்முடைய சபையானது முழுவதுமாக மீட்கப்பட்டுவிடும். அதன் பின்பு உம்முடைய பூமியும் அதன் பாகங்களும் மீட்கப்படும். இப்பூமியினின்று உருவாக்கப்பட்ட உம்முடைய ஜனங்களின் சரீரங்களை நீர் முதலில் மீட்கப்போகிறீர். அதைக் குறித்து இன்னும் நிச்சயமில்லாதவர்களாக யாராயினும் இங்கிருப்பின், தேவனே, அவர்கள் இப்பொழுதே அதை பெற்றுக் கொள்ளட்டும். எங்களுக்கு உதவி செய்யும் கர்த்தாவே, இந்த ஆராதனை மிகவும் நீளமானதும் இங்கு உஷ்ணமாயுள்ளதையும் நானறிவேன். ஆனால் நாங்கள் எப்பொழுதும் இங்கே நின்றுக் கொண்டேயிருக்கப் போவதில்லை; நான் எப்பொழுதும் உங்கள் மேய்ப்பனாய் இருக்கப் போவதில்லை. அதை நிச்சயப்படுத்திக் கொள்வோம். "வழியுண்டா சகோ. பிரான்ஹாமே?" என்று கேட்கலாம். ஆம், வார்த்தையின் பாகமாக மாறுவதே, அதுவும் இந்த நாளிற்குரிய வார்த்தையின் பாகமாக மாறுவது தான் வழி. மோசேயின் நாட்களின் வார்த்தையின் பாகமாக நீங்கள் இருக்க முடியாது. மோசேயின் காலம் முடிந்து விட்டது. அது பாகமாயிருக்கிறது. நாம் இப்பொழுது தலைபாகமாகிய கிறிஸ்துவின் நாட்களில் இருக்கிறோம். லூத்தரின் காலமான கைகளின் காலமல்ல, மாறாக இதுதலையின் நேரமாயிருக்கிறது. தலைக்கல்லானது சரீரத்தின் மேல் இணையும் நேரம் இது. இதைக் குறித்து சரியாக இன்னும் உணரவில்லையென்றால், நீங்கள் எங்கேயிருந்தாலும் நான் பார்க்கும்படியாக உங்கள் கைகளை உயர்த்துங்கள். நாம் யாவரும் தலைவணங்கி இருப்போம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "சகோ. பிரான்ஹாமே, உங்கள் ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள்” என்று கூறுங்கள். சகோ. பிரான்ஹாமே, அது எனக்கு அவசரமாக தேவையாயிருக்கிறது. அதை தவறவிட நான் விரும்பவில்லை. நான் என்னை ஆராய்கிறேன். என்னால் முடிந்தவரை செய்கிறேன். எனக்காக இப்பொழுது ஜெபம் செய்யுங்கள், செய்வீரா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஜெபம் செய்யுங்கள். அது உங்களுடைய இருதயத்திலுள்ளது. பாருங்கள்? ஏதோ ஒன்று உங்கள் இருதயத்தில் துள்ளுகிறதா? அதுதான் அது. அதுதான் அந்த தன்மையாயிருந்து, தன்னை வெளிப்படுத்த முயற்சிக்கிறது.  "என் கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்த, அந்த அழகு வீட்டிற்கு நான் போக புறப்பட்டேன்; எல்லாக் காலங்களிலும் மீட்கப்பட்டோர், வெள்ளை சிங்காசனத்தைச் சுற்றி 'மகிமை' என்று பாடுவர் பரலோக வீடு செல்ல அநேக சமயம் நான் மிகுந்த ஆவல் கொண்டவனாயிருக்கிறேன் அந்த அழகான பொன் நகரத்தில் அந்த மகிமையையும், என் இரட்சகரையும், நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்".  பரலோகப் பிதாவே, எங்களை எடுத்துக் கொள்ளும். மகிமையை விட்டு வந்த மகத்தான மீட்பராகிய மேய்ப்பரே, உம்முடைய சில தன்மைகளாகிய ஆடுகள் பாவம் என்னும் பள்ளத்தாக்கிலே கைவிடப்பட்டு ஓநாய்களும், மற்ற மிருகங்களும் பீறத்தக்கதான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்று நீர் அறிவீர். பொன்னாலான மாளிகைகளை விட்டு பூமிக்கு வந்து எங்களில் ஒருவரைப் போலாகி தேவனுடைய அன்பை வெளிப்படுத்த சாத்தியமானார். அங்கே அவர்களை கண்டு பிடித்தார். அவர்களில் சிலர் ஸ்தாபனங்களிலும், சிலர் அழிவான இடங்களிலும், சிலர் வீதிகளிலும், சிலர் குருடராயும், சிலர் பெருஞ்சாலைகளிலும் இருந்தனர். யார் மீட்கப்படுவ தற்கென்று பிதாவினால் நியமிக்கப்பட்டார்களோ அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் மீட்டார். எங்களுடைய காலத்தின் பாகமாகிய வார்த்தைக்காக நாங்கள் வாழ வேண்டுமென்று எங்களுக்கு கட்டளைக் கொடுத்துள்ளார். லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினரின் மகத்தான சீர்திருத்தங்களை நாங்கள் கண்டோம். இப்பொழுதோ நாங்கள் நகரத்தின் தலைக்கல்லுக்காகக் காத்திருக்கிறோம். ஓ தேவனே, இவைகளெல்லாம் எப்படி மீட்கப்பட வேண்டும் என்று இந்த நாட்களுக்காக கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தத்தையும், அதன் காலத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். மாலை நேரத்து வெளிச்சமானது கனியை அறுக்கிறதாய் இருக்கிறது. ஏனெனில், "ஒரு நாள் உண்டு. அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல, இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்” (சகரி. 14:7) என்று வேதம் கூறுகிறது. மகிமையின் தேவக்குமாரன் தம்மை மனித சரீரத்தில் இப்பூமியின் மேல் வெளிப்படுத்தி வாக்குத்தத்தத்தை சரியாக நிறைவேறச் செய்தபோது, அன்று வாழ்ந்த பரிசேயர், வேதபாரகர், ஏரோதியர் ஆகியோரின் கண்கள் அதற்கு குருடாயிருந்தது. அதே காரியம் இன்னும் திரும்ப சம்பவிக் கின்றது. வசனத்தில் கூறப்பட்டது போல் வார்த்தையானது அன்று செய்தது போலவே இருதயத்தின் இரகசியங்களை அறிந்து தன்னை வெளிப்படுத்தி வார்த்தை சிதறிப்போக முடியாது என்பதை நிரூபித்தது. அதை உணர்ந்துக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும், தேவனே . இங்கே தங்கள் கரங்களை உயர்த்தினவர்களுக்கு உதவி செய்யும். சமாதானத்தின் சுவிசேஷத்தோடு இன்னும் தங்களை இவர்கள் நெருக்கமாக இணைத்துக் கொண்டு; தலைச்சீராவை இழுத்து மூடி ; விசுவாசம் என்னும் கேடகத்தையும் எடுத்துக் கொண்டு தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கத்தையும் தரித்தவர்களாக தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டு; இன்றிலிருந்து அணிவகுத்துச் செல்ல அருளிச் செய்யும், கர்த்தாவே. நாம் அழைக்கப்படுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. அப்பொழுது எடுக்கப்படுதல் உண்டாகும். ஏனோக்கைப் போன்று ஒரு சிறியக் கூட்டம் எடுக்கப்படும். தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொண்டவர்களும் (யூதர்கள்), இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியையுடையவர்களும் (புறஜாதிகள்) ஆகிய கைவிடப்பட்டதோர் கூட்டம் நாய்களைப் போல் வேட்டையாடப்பட்டு, தாங்கள் கொண்டிருக்கிறதான சாட்சிக்காக தங்கள் ஜீவனை விடுவார்கள். பின்பு மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி ஒரு நாள் காலையில் மலர்ந்து தேனிலவு ஆரம்பமாகும். மரித்த மற்றவர்களோ ஆயிரம் வருடங்கள் வரை எழுந்திருக்க மாட்டார்கள். அதன் பின்பு நியாயத்தீர்ப்பு ஏற்படும். காமும் பேழையில் இருந்தான் என்பதை இந்நியாயத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அந்த சிறியக் கூட்டத்துடனே காமும் இருந்தான். ஒரு தரம் செய்தியைக் கேட்டு பின்பு அதை மறுதலித்துப் போனவர்கள் நியாயத்தீர்க்கப்பட வேண்டும். ஆண்டவரே, நாங்கள் அவர்களில் ஒருவராக எண்ணப்படாமல் கலியாண விருந்திற்கு அழைக்கப்பட அருளிச் செய்யும். ஏனெனில் அந்த நாளில் இயேசு எங்கள் மத்தியில் இருப்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். நாங்கள் அவரோடு சென்று இவ்வுலகத்தினின்று வெளி வந்து அந்த நகரத்திற்குள் நடக்கச் செய்யும். இனியும் அநேக பிரசங்கங்களை உடையவனாக நான் இல்லை. நான் வயது சென்றவனாகிவிட்டேன், கர்த்தாவே, நான் உம்மையே சார்ந்திருந்து என் பிதா ஆபிரகாம் அந்த நகரத்தைப் பார்த்தது போல நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் ஏதோ ஒன்று வருகின்றதை எனக்கு அறிவிக்கிறது. இந்த வெளிச்சத்தை நான் எல்லாவிடங்களிலும் பரப்ப முயற்சிக்கிறேன். கர்த்தாவே... 1500 மைல்கள் பரப்பளவுள்ள தாயிருக்கும் என்ற காரியத்திலிருந்து, இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக என்றவிதமாய் இன்று ஒன்று கூடியிருக்கும். காரியத்தை சற்று முன்பு எனக்கு வெளிப்படுத்தின் போது அது எவ்வளவு அழகாயிருந்தது. அவர்கள் ஒரு சிறிய இடத்தில் ஒன்று கூடி அந்நகரத்திற்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் யாத்திரீகர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிடுகிறோம்; அது மட்டுமல்ல, நாங்கள் புறம்பாக்கப்பட்டவர்களாயிருக்கிறோம். அஞ்ஞானிகளும், இந்த உலகமும், மத சம்பந்தமான ஸ்தாபனங்களும் எங்களைப் பார்த்து சிரித்து, பரிகாசமாக எண்ணி நிந்திக்கிறார்கள். ஆனால் அவைகளால் எங்களை அசைக்க முடியாது. அசைக்க முடியாதபடிக்கு எங்களை வார்த்தையின் பாகமாக்கியருளும். இவைகள் கடைசி நாளில் சம்பவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அசைக்கப்பட முடியாதவர்களோடு நாங்கள் எண்ணப்படச் செய்யும், கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை வேண்டிக் கொள்கிறோம். ஆமென். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கைகளை இவ்விதமாக உயர்த்துங்கள்.  "என் கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்த, அந்த அழகு வீட்டிற்கு போக நான் புறப்பட்டேன்; எல்லாக் காலங்களிலும் மீட்கப்பட்டோர்; வெள்ளை சிங்காசனத்தைச் சுற்றி, 'மகிமை' என்று பாடுவர் பரலோக வீடு செல்ல அநேக சமயம் நான் மிகுந்த ஆவல் கொண்டவனாயிருக்கிறேன் அந்த அழகான பொன் நகரத்தில் அந்த மகிமையையும், என் இரட்சகரையும், நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்!  இப்பொழுது நாம் அந்த நகரத்தில் ஒன்றாய் வாழப் போகிறோம் என்றால் உங்கள் பக்கத்திலிருப்பவரின் கரம் குலுக்கி, "யாத்திரீகரே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? லூயிசியானாவிலிருந்தா? ஜியார்ஜியாவா? அல்லது மிசிசிபியா? நானும் கூட யாத்திரீகனே, அந்த நகரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுங்கள் (சகோ. பிரான்ஹரம் திரும்பி தம்மை சுற்றியுள்ளவர்களின் கைகளைக் குலுக்குகிறார்). ".... அந்த அழகான பொன் நகரத்தில், அந்த மகிமையையும், என் இரட்சகரையும், நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்! ஓ, கரடி சாதுவாகவும், ஓநாய் சாந்தமாகவும் சிங்கம் ஆட்டுக்குட்டியுடனே படுத்துக் கொள்ளவும் (ஓ, அப்படித்தான்) ஒரு சிறுபிள்ளை துஷ்ட மிருகத்தை வழிநடத்தும் நானும் அவ்வாறே மாற்றப்படுவேன்” "ஓ, எனக்காக பள்ளத்தாக்கிலே. சில காலம் சமாதானம் உண்டாயிருக்கும்; ஓ, பள்ளத்தாக்கில் சமாதானம் உண்டாயிருக்கும் என்று ஜெபிக்கிறேன் இனியும் அங்கே வருத்தமும், சங்கடங்களும் நான் காண்பதில்லை, ஓ, எனக்காக பள்ளத்தாக்கிலே சமாதானம் உண்டாயிருக்கும்”.  கண்களுக்கு தென்படாத நம்முடைய ராஜா இந்த காலையில் தம்மை வெளிப்படுத்துவார். சகோ. பில் டோவை 90 வயது உடையவராக நான் காண மாட்டேன். அதே விதமாக சகோதரனே, நீங்களும் என்னை 50 வயதுடையவனாகக் காண மாட்டீர்கள். ஏனெனில் அந்த நாளில் நான் மாறிவிடுவேன். "... ஒரு சிறு பிள்ளை துஷ்ட மிருகத்தை வழிநடத்தும்; நானும் அவ்வாறே மாற்றப்படுவேன்.” நீங்கள் அதைக் குறித்து சந்தோஷமாயிருக்கிறீர்களா? சரிந்த தோள்களும், நரைமயிரும் ஒழிந்து விடும். ஆனால் அழகு, அழியாமை என்னும் அவருடைய சாயல் சூரியனைப் போல் நம்மில் பிரகாசிக்கும். ஓ, அற்புதமே! ..... எனக்காக கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன்; இனியும் அங்கே வருத்தமும், சங்கடங்களும் நான் காண்பதில்லை;  எனக்காக பள்ளத்தாக்கிலே சமாதானம் உண்டாயிருக்கும்”. அதற்காகத்தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். பிரயாணத்திற்காக உங்களில் எத்தனை பேருக்கு பலன் தேவையாயிருக்கிறது? தேவனே, அதை எங்களுக்குத் தாரும். எத்தனைப் பேர் சரீரத்தில் வியாதியுள்ளவர்களாகவும், காயமுற்ற யுத்த வீரர்களாகவும் இருக்கிறீர்கள்? 12 பேருக்கு மேல் உள்ளனர். கண்களுக்குத் தென்படாத ராஜா இங்கிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? கண்களுக்குத் தென்படாதது தென்படு பவைகளால் வெளிப்படுத்தப்படுகிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், இச்சரீர ஊழியத்தின் மூலம் அவருடைய ஆவி என் மூலமாக இதை பிரசங்கித்திருக்குமானால், அவர் பூமியில் இருந்தபோது என்னக் கிரியைச் செய்தாரோ அதையே செய்ய வேண்டும். ஓ. எவ்வளவு அற்புதமாயிருக்கிறது!  "வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன்; யார் என்னோடு கூட வருகிறீர்கள்; வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன், "விரிவாயுள்ள அந்த சமவெளிகளில் ஒரு நித்திய நாள் ஜொலிக்கிறதாயிருக்கும்; தேவ குமாரன் என்றென்றும் அங்கு வாழ்ந்து; இரவை தகர்த்தெறிவார்” ஓ, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன்; யார் என்னோடு கூட வருகிறீர்கள்; வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேத்திற்கு நான் போகப்புறப்பட்டேன்”  500 பேர் ஆற்றிற்கு நடந்து வந்தார்கள், அந்த முதல் நாளிலே என்னை சந்தித்த அந்த கர்த்தருடைய தூதன் சீனாய் மலையில் செய்தது போல் நிரூபிக்கத்தக்கதாக காணகூடியவரானார். ஞானஸ்நானத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாடிக் கொண்டிருந்தார்கள், அங்கே நான் ஆற்றினருகே நடந்து போனேன். அப்பொழுது நீங்கள் இங்கே பார்க்கிறதான அதே அக்கினி ஸ்தம்பம் கீழிறங்கி அந்த ஆற்றின் மேல் வந்து, "யோவான் ஸ்நானன் அவருடைய முதல் வருகைக்கு முன்னோடி யானது போல் செய்தியானது இரண்டாம் வருகைக்கு முன்னோடும்” என்று ஒரு சத்தம் விளம்பினது. "ஓ, யார் என்னோடு கூட வருகிறீர்கள்; வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போக புறப்பட்டேன்” அங்கே அதே அக்கினி ஸ்தம்பம் இங்கே நம்மோடி ருக்கிறது. அதை உணருகிறீர்களா? நம்மில் சிலரை அவர் தற்பொழுது ஒரு விதமாகவும் சிலரை வேறு விதமாகவும் செய்திருக்கிறார். அவர் இந்த கட்டிடத்திற்குள் நம் மத்தியில் இருக்கிறாரென்று நீங்கள் ஒரு சிறிய சந்தேகமும் கொள்ளாமல் விசுவாசிப்பீர்களென்றால் உங்களுக்கு அவர் தம்மை நிரூபித்து காண்பிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது உங்களை திருப்தியாக்குமல்லவா? நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆராய முடியாவிட்டாலும் (2 மணி ஆகிக் கொண்டிருக்கிறது - நேரம் 1.00 மணிக்கு அப்பாற் சென்று விட்டது). நீங்கள் விசுவாசிப்பீர் களென்றால், அவர் நம்மேல் வந்திறங்கட்டும். உங்கள் விசுவாசம் எங்கே? ஒரு சந்தேகமும் இல்லாமல் அதை நீங்கள் விசுவா சிக்கத்தான் வேண்டும். அது நடக்கப் போகிறது. கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். அந்த வார்த்தை இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவாக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிற அந்த கிறிஸ்துவின் திவ்விய பிரசன்னத்தை நான் புரிந்துக் கொண்டேன். பல வருடங்களாக இது எனக்கு தெரியாமலிருந்தது. நான் என்ன சொல்கிறேன் என்பதை அறியாமல், நான் சொன்னேன். அவர் எனக்கு என்ன செய்தார் என்பதை பாருங்கள். "ஜனங்களின் கையை நீ எடுத்து ஒன்றையும் குறித்து சிந்தனை செய்யாமல், தன்மைகள் உன்னிடம் என்ன சொல்கிறதோ, உதாரணமாக அது கட்டியாயிருக்கிறது (எதுவா யிருந்தாலும்) என்று சொல்லுமானால் அதைக் கூறு” என்றார். "அது அவர்களுக்குள் இருக்கும் காரியத்தை ஆராய்ந்து வகையறுத்து நிறைவேறுதலைக் கொண்டுவரும்” என்றார். கூடு மானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக இன்று நிறைய விதமான போலிக்களை நாம் பெற்றிருக்கிறோம். அதைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். அவர்களுடைய மற்றக் காரியங்கள் வார்த்தையோடு ஒன்றிப் போகிறதா என்று பாருங்கள். அப்பொழுது தான் அது சரியா அல்லது தவறா என்பதை புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் இயேசு இன்னுமாக நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எத்தனை பேர் இங்கு எனக்கு அந்நியராக இருந்து இந்நேரத்தில் வியாதியுள்ளவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எல்லா இடங்களிலும் கைகள் உயர்த்தப் பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். என்னை உங்களுக்கு தெரியாது என்று நானறிவேன். நீங்கள் செய்ய வேண்டுவ தெல்லாம் விசுவாசிக்க வேண்டியதே. "நம்பிடுவாய், நம்பிடுவாய்; யாவும் கைகூடிடும் நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைகூடிடும், நம்பிடுவாய். "சோதோமின் நாட்களில் நடந்தது போல கடைசி நாளில் மனுஷகுமாரன் பூமியின் மேல் தன்னை வெளிப்படுத்தும் போதும் நடக்கும்” என்று இயேசு கூறினார். அது மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்தும்போது அல்லது கடைசி நாட்களில் தம்மை வெளிப்படுத்துதல் என்று பொருளாகும். முந்தின நாட்கள் அல்லது மத்திய நாட்களென்று அல்ல, கடைசி நாளில் தம்மை வெளிப்படுத்துவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது கடைசி நாட்களில் இருக்கிறோம். சோதோம் சரியாக அமைந்து அதன் தூதர்களும் சரியாக அமைந்துள்ளனர். ஆபிரகாமுக்கும் அவனோடு அழைக்கப்பட்டு வெளி வந்த அந்த சிறிய கூட்டத்திற்கும் என்ன சம்பவித்தது? அவர்கள் மத்தியிலே மாமிசக் கோலமெடுத்த ஒருவர். அவர்கள் சாப்பிட்ட அதே ஆகாரத்தை சாப்பிட்டு, அவர்களோடு குடித்து அவர்கள் மத்தியில் நின்று செய்தியைக் கூறினார். பின்பு, அவர், "நான் இந்த மகத்தான காரியத்தைச் செய்யப்போகிறேன்" என்று கூறினார். "இதுதான் அக்காரியமா? நான் ஒரு நகரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன், அதன் இராஜா இவர்தானா?" என்று எண்ணியவாறு ஆபிரகாம் அதை ஆராய்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவர், "சாராள் ஏன் இதைக் குறித்து சந்தேகப்படுகிறாள்?" என்றார் (சாராள் அவருக்கு பின்னாக கூடாரத்தில் இருந்தாள்). "கர்த்தரும் தேவனுமாகிய ஏலோகிம் அவர் என்று ஆபிரகாம் கூறினான். ஏனெனில் அவர் சாராளின் சிந்தனைகளைப் பகுத்தறிந்தார். மீட்டுக்கொள்ளப்படுபவர்கள் மீட்கப்பட்டு, அவருக்கு சொந்தமானவர்களை தமக்கென்று பிரித்தெடுத்துக் கொள்ளவும், தலைக்கல்லானது சரீரத்தில் பொருத்தப்படும்படியாகவும், அவர் வந்து கொண்டிருக்கிற வேளையில் அதே காரியம் திரும்பவும் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். இங்கே அவர் நம்மோடு இருக்கிறார். இப்பொழுது இங்கே 12 கரங்கள் அல்லது அதற்கு மேற்பட்டோரின் கரங்கள் மட்டுமே உயர்த்தப்பட்டதை நான் கண்டேன். உங்களில் ஒவ்வொருவரையும் தேவனால் சுகப்படுத்த முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். இத்தகைய சூழ்நிலையில், இத்தகைய இடத்தில் ஒரு மனிதன் அமர்ந்துக்கொண்டு காரியங்களை அறியாமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்க முடியாது என்று நான் விசுவாசிக்கிறேன். உங்கள் இருதயங்களில் என்ன தவறு இருக்கிறதென்பதை நான் அறிய விரும்புகிறேன். ஆகவே நீங்கள் ஜெபம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடம் பேசுகிறேன். என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறதென்பதை வெளிப்படுத்தும். உம்மைக் குறித்து இன்று அவர் பேசின இந்த செய்தி சத்தியம் தான் என்பதை நிறைவேற்றுவதற்காக உம்முடைய பரிசுத்த ஆவியை சகோ. பிரான்ஹாமிடம் அனுப்பும். அது சத்தியம் தான் என்று நான் அறிந்திருக்கிறேன். எனக்கு அதை வெளிப்படுத்தும், என்னோடு பேசும்” என்று ஜெபியுங்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் (கைகளை உயர்த்தினவர்கள் - தமிழாக்கியோன்) சுற்றிலுமிருக்கிறார்கள். ஆகவே ஜெபித்து அதை கர்த்தர் தாமே அருளும்படி உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் என்னைப் பார்த்து ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில், "எங்களை நோக்கிப் பார்” என்று பேதுருவும், யோவானும் கூறினார்கள். அவனுக்கு ஏதோ ஒன்று தேவையாயிருந்தது. அவன் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிற வேளையாயிருந்தது. அதே விதமாக நீங்கள் எதையோ விரும்பு கிறீர்கள், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். "எங்களை நோக்கிப்பார், வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்" (அப். 3:4, 6) என்றான். அதேவிதமாக சுகமாக்குதல் என்ற ஏதொன்றும் என்னிடத்தில் இல்லை. அது கிறிஸ்துவில் இருக்கிறது. ஆனால் என்னிடத்திலுள்ள தேவ வரத்தினால் நீ அவரை விசவாசிக்கத்தக்கதாக விசுவாசத்தைத் தருகிறேன். இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் ஒவ்வொருவரும் சொஸ்தமாகுங்கள். இதை விசுவாசியுங்கள். இதை உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றால், ஒரு பெண்மணி அங்கே அமர்ந்து என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சற்று முன்புதான் அவர்கள் அழுது ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். முன் கழுத்துக்கழலை நோய் (தைராய்ட்) அவர்களை தொந்திரவு செய்து கொண்டி ருக்கிறது. உங்களை எனக்கு தெரியாது. எனக்கு அந்நியராக இருக்கின்றீர்கள். அது உண்மை . நீங்கள் இங்கேயிருப்பவர்கள் அல்ல. சிக்காகோ பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் திருமதி அலெக்சாண்டர் அவர்களே, அது உண்மைதான் என்றால் உங்கள் கையை அசையுங்கள். இப்பொழுது நீங்கள் சிக்காகோ சென்று சுகமாயிருங்கள். அவர்கள் எதைத் தொட்டார்கள்? அந்த உதிர ஊற்று பெண்மணி அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட அதே காரியத்தைத் தான் இவர்களும் செய்தார்கள். என்னுடைய வஸ்திரத்தையல்ல. இங்கு கூட்டத்தின் மத்தியில் ஒரு சிறு பெண்மணி அமர்ந்திருக்கிறார்கள். என்னை அவர்கள் புரிந்துக் கொள்ள வைக்கக் கூடுமானால், நலமாயிருக்கும். உங்கள் தலையை பக்கவாட்டில் உயர்த்திய நீங்கள் தான் அது. உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எனக்கு அந்நியர். ஆனால் நீங்கள் வயிற்றுத் தொந்தரவினால் கஷ்டப்படுகிறீர்கள், உங்கள் கணவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்; அவருடைய காதில் ஏதோ தொந்தரவு இருக்கிறது. உங்களுடைய பெயர் சாப். நீங்கள் எனக்கு அந்நியர்களாயிருக்கின்றீர்கள். நீங்கள் இந்த இடத்தைச் சார்ந்தவர்களல்ல; நீங்கள் மிச்சிகன் என்னும் இடத்தைச் சேர்ந்த வர்கள். அது உண்மையானால் உங்கள் இருவரின் கைகளையும் அசையுங்கள். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. மிச்சிகனுக்குத் திரும்பிச் சென்று சுகமாயிருங்கள். விசுவா சிக்கிறவர்களால் எல்லாம் கூடும். அங்கு ஒரு பெண்மணி தொண்டை தொந்திரவில் இருக்கிறார்கள். வெள்ளை உடை உடுத்திக் கொண்டு அந்த கடைசியில் உட்கார்ந்திருக்கும் அப்பெண்மணி ஜியார்ஜியாவை சேர்ந்தவர்கள். ஜியார்ஜியாவிற்கு திரும்பிச் சென்று சுகமா யிருங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு பெண்மணி அந்தக் கடைசியில் உட்கார்ந்துக் கொண்டு என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சைனஸ் தொந்திரவு இருக்கிறது. அவர்கள் விசுவாசத்தால் தேவன் அவர்களை சுகப்படுத்துவார். திருமதி பிரெளன் அவர்களே, முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து சுகமாக்குவார். நீங்கள் எனக்கு அந்நியர். ஆனால் அவர் உங்களை அறிந்தவராயிருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கைகளை உயர்த்துங்கள். அது சரியானது. இங்கே இந்த கட்டிலில் ஒரு பெண் படுத்திருக்கிறார்கள். அவர்களை இங்கே பார்க்கும்படி கூறுங்கள். அவர்கள் அநேக காலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னால் சுகபடுத்த முடியுமானால் நான் அதை செய்வேன். ஐயா, ஆனால் என்னால் சுகபடுத்த முடியாது. அவர்கள் வெகுதூரத் திலிருந்து வந்திருக்கிறார்கள். நீங்கள் மிச்செளரியிலிருந்து வந்திருக்கிறீர்கள். தொந்தரவு உங்கள் சரீரத்தின் உட்பாகத் திலுள்ளது. ஆனால் உங்கள் முழு இருதயத்தோடும் சந்தேகப்படாமல் விசுவாசிப்பீர்களென்றால் இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்க முடியும், பின்பு நீங்கள் மிச்செளரிக்கு திரும்பிச் சென்று சாட்சி பகரலாம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், அதை ஏற்றுக்கொண்டு உங்கள் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து சுகமாக்குகிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதுதான் நித்திய ராஜாவின் பிரசன்னத்தின் அடையாளம். இதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது அவர் நிச்சயமாக இந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நீங்கள் முழு இருதயத்தோடும் இதை விசுவாசிக்கிறீர்களா? அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருடைய இராஜ்ஜியத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக இருக்கின்றீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கின்றீர்களா? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று இயேசு கூறினார் (மாற்கு 16: 17, 18). நீங்கள் என்னில் பாகமாயிருக்கிறீர்கள்; நான் உங்களில் பாகமாயிருக்கிறேன். நாம் எல்லாரும் கிறிஸ்துவில் பாகமாயிருக்கிறோம். இப்பொழுது, நாம் ஒன்றாக கூடி ஒருவர் மேல் ஒருவர் நமது கைகளை வைப்போமாக. கட்டிலில் கிடந்த அந்த பெண்மணி அதிலிருந்து எழுந்து, அங்கே சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் வீட்டிற்குச் சென்று சுகமாயிருக்கப் போகிறார்கள். ஆமென். நீங்களும் விசுவாசிக்கக் கூடுமானால் அப்படியே நீங்களும் சுகமாக்கப்படுவீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் இந்தப் பகுதியாயிருப்பதனால் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். யார் மேல் கைகளை வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்காக நீங்கள் விரும்புகிறபடி ஜெபம் செய்யுங்கள். கர்த்தராகிய இயேசுவே, நீர் இங்கே இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிகிறோம். நீரே ராஜாவாயிருக்கிறீர். எங்கள் மத்தியில் உம்மை அடையாளப்படுத்தும். இந்த பிரசன்னத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். "எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ' என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர், கர்த்தாவே (மாற்கு 11:23). ஆகவே 1500 மைல்கள் சதுர நகரத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் தவறிப் போகாத தேவனுடைய வார்த்தை என்னும் இந்தக் கட்டளையை கீழ்படிதலோடு ஏற்றுக் கொண்டபடியால், நாங்கள் தோற்பிக்கப்பட்ட சாத்தானைப் பார்த்து, "ஆட்டுக்குட்டியானவரே விளக்காயிருக்கிற நான்கு சதுர நகரத்தின் பிரதிநிதிகள் நாங்கள். இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் மீட்கப்பட்டு சர்வ வல்லமையுள்ள தேவனின் வெளிப்படுத்தப்பட்ட தன்மைகளாக நாங்கள் இருக்கிறோம்” என்று. நாங்கள் கூறட்டும். ஆகவே சாத்தானே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஒவ்வொரு வியாதியஸ்தரிலிருந்தும் நீ வெளியே புறப்பட்டு போ. ஏனெனில் அவர்களுடைய பரிசுத்த சிகரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தேவனுடைய சிந்தனையின் தன்மைகளாக இருந்து வார்த்தையை விசுவாசிக்கிறார்கள். இப்பொழுது ஒருவரின் மேல் ஒருவர் அவர்கள், தங்கள் கைகளை வைத்திருக்கிறார்கள். இனியும் நீ அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெளியே வா. இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார். அவர் இங்கிருக்கிறார் என்று அவர் வார்த்தை கூறுகிறது. உங்களுடைய விசுவாசமும் நீங்கள் இங்கு இருக்கின்ற காரியமும் நீங்கள் பிரதிநிதிகளில் ஒருவர் என்பதை அறிவிக்கிறது. பூகோள கண்க்கின்படியும் கூட நாம் அந்த அளவாயிருக்கிறோம் என்பதை நம்மால் காண்பிக்க முடியும். நீங்கள் தேவனுடைய குமாரரும், மாரத்திகளுமாயிருக்கின்றீர்கள் என்பதை புரிந்துக்கொண்டீர்களா? இதுதான் உங்கள் இருப்பிடம் என்று புரிந்து கொண்டீர்களா? இங்குதான் நீங்கள் செல்லப் போகிறீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் இங்கும் கிறிஸ்துவிலும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையில் போஷிக்கப் பட்டிருக்கிறீர்கள். அவருடைய தன்மையின் வெளிப்படுத்தலாக மட்டும் இருந்து, இத்தகைய நேரம் உங்களுக்கு இங்கே உண்டாயிருக்குமென்றால், அவருடைய பிரசன்னத்தில் நாம் வரும்போது காரியம் எப்படியிருக்கும்? ஓ, அது அற்புதமா யிருக்கும். வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்த உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஆகவே வியாதியஸ்தரின் மேல் கைகளை வையுங்கள். ஞானஸ்நானத்திற்கு உங்களில் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இயேசு கிறிஸ்து நாமத்தில் இன்னுமாக ஞானஸ்நானம் பெறாதவர்கள் இங்கிருப்பின் குளமானது திறந்திருக்கிறது, ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிப்பதற்கு அது ஒன்றே வழியாகும். ஆதியிலே வார்த்தையின் ஒரு சிறுபாகமே இவ்வுலகத்தின் எல்லா பாவங்களுக்கும் காரணமாயிற்று என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; "ஒருவன் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டாலும் அல்லது எதையாகிலும் கூட்டினாலும் அவன் அதற்குள் பிரவேசிப்பதில்லை. அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தினின்று எடுக்கப்பட்டு போகும். அதுதான் காரியத்தின் முடிவாயிருக்கிறது.” இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி வேறு எவ்விதத்திலாகிலும் சபையில் யாரும், எப்பொழுதாகிலும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பதற்கு வேதத்தில் எங்கும் சான்றில்லை. நீங்கள் அந்த விதமாக ஞானஸ்நானம் பெறவில்லை யென்றால், நீங்கள் அதை பெற்றுக்கொள்வது நலமாயிருக்கும், "அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்காது” என்று நீங்கள் கூறலாம். ஏவாளிடம் அது வித்தியாசத்தை உண்டாக் கிற்று. ஏனெனில் சாத்தான் "தேவன் சொன்னது உண்டோ 'நீங்கள் சாவதில்லை .... ” என்று ஏவாளிடம் கூறினான். பரேலாக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை அவர் பேதுரு வினிடம் தந்து பெந்தெகொஸ்தே நாளில் எது கட்டப்பட்டதோ அது என்றென்றும் கட்டப்பட்டதாயிருக்கிறது. ஆகவே தான் மணவாட்டி இரண்டாம் விசை அணிவகுத்து வந்தாள். ஏனெனில் கடைசி நாளுக்கென்று ஒரு சபை அழைக்கப்பட்டு முதலாம் நாளை சரியாக அது ஒத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய சிற்பவேலை நகரத்திற்குக் கொண்டு போகப்பட அன்று நடந்ததுப் போல மரமானது வேரிலிருந்து புறப்பட்டு வந்து மணவாட்டி மரமாக திகழ வேண்டியுள்ளது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன் என்பதை அவர் அறிவார். சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றித் திரிகிறான், இன்னும் சிறிது காலத்தில் அவன் முடிந்து விடுவான். அவனுடைய நேரத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித் திரிகிறான். ஆனால் சமாதானத்தின் ராஜா நின்று கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகத்தான திவ்வியர், என்னையும், உங்களையும் நாம் எப்படி இருக்க வேண்டுமோ அவ்விதம் உருவாக்கின கட்டிடச் சிற்பி இங்கிருக்கிறார். கட்டிடத்தை சரியான இடத்தில் பொருத்த கட்டிடச் சிற்பியினால் தான் முடியும். கட்டிடச் சிற்பியைக் காட்டிலும் யார் நலமாக காரியத்தை அறிய முடியும்? தம்மை நிரூபிப்பதற்கென்று அவர் இங்கிருக்கிறார். அது உங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. விசுவாசியுங்கள்,  "என் கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்த, அந்த அழகு வீட்டிற்கு நான் போகப் புறப்பட்டேன்; எல்லாக் காலங்களிலும் மீட்கப்பட்டோர், வெள்ளை சிங்காசனத்தைச் சுற்றி 'மகிமை' என்று பாடுவர் பரலோக வீடு செல்ல அநேக சமயம் நான் மிகுந்த ஆவல் கொண்டவனாயிருக்கிறேன் (இவைகளெல்லாம் முடிந்த பின்பு) அந்த அழகான பொன் நகரத்தில் அந்த மகிமையையும் என் இரட்சகரையும், நான் பார்க்கையில் அந்த மகிழ்ச்சி எவ்விதமாயிருக்கும்!  இன்றிரவு சபையில் அப்பம் பிட்கும் ஆராதனை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இன்னுமாய் பட்டணத்தில் இருப்பீர்களென்றால், உங்களுக்கு அவ்வாரா தனையில் கலந்துக் கொள்ள விருப்பம் இருக்குமானால், நீங்கள் எங்கள் மத்தியில் கலந்து கொள்ள நாங்கள் வாஞ்சையுள்ளவர் 'களாயிருக்கிறோம். நாம் ஒரு நாளில் அவரோடு பந்தியிருக்கப் போவதை அது அடையாளப்படுத்துகிறதாயிருக்கிறது. நான் உங்களை நேசிக்கிறேன், அதை எவ்விதமாக வெளிப் படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் உலகத்தின் மத்தியில் உங்கள் நடக்கையைக் குறித்து நான் கேள்விப்படுகையில் அது உங்களைப் பற்றி எனக்கு மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. வருகின்ற ஓர் நாளில் இந்த சிறு கூட்டம் (அன்புள்ளவர்களாயிருக்கும் நாம்) உடைந்து விடும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதைக் குறித்ததான சொப்பனம் உண்டு. ஆனால் முன்பதாகவே நம்மில் யாராகிலும் கடந்து செல்வோமென்றாலும் நாம் திரும்பவும் சந்திப்போம். "துன்பங்கள் எல்லாம் கடந்து விடும்போது இச்ஜீவியத்தின் களைத்துப்போன நாட்களின் முடிவு வரும்போது ஆற்றினருகே ஓர் பிரகாசமான காலையில் நான் சந்திப்பேன் கதவு விரிவாக திறக்கப்படும்போது, நான் மறுகரையில் நின்றுக் கொண்டிருப்பேன் ஆற்றினருகே ஓர் பிரகாசமான காலையில் நான் சந்திப்பேன் பழைய உறவுகள் புதுப்பிக்கப்பட்ட எடுக்கப்படுதலோடு (நான் உங்களைப் பார்த்து யாரென்பதை அறிந்து கொள்வேன்) நான் ஆற்றினருகே அநேகம் தடவை அமர்ந்திருக்கிறேன் நான் கொண்டிருக்கும் புன்னகையினால் அக்காலை என்னைக் கண்டுக் கொள்வீர்கள் நான்கு சதுரமாக்கப்பட்ட அந்த நகரத்தில் ஓர் காலை நான் உங்களை சந்திப்பேன்”.  நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நாம் மீண்டும் சந்திக்கும் வரை; இப்பொழுது எழுந்து நின்று "இயேசுவின் நாமத்தை உங்களோடு கொண்டு செல்லுங்கள்” என்ற பாட்டை பாடு வோம். அதற்குரிய இசையை ஆரம்பியுங்கள். அவர் அற்புத மானவரில்லையா? அவரை நேசிக்கிறீர்களா? தேவனுடைய கிருபையால் அந்த வழியாகப்போக புறப்பட்டு விட்டீர்களா? அங்கே நாம் சேரும் மட்டாக பிசாசின் எல்லா கண்ணி களினின்றும் நம்மை சுற்றிலும் கூடுகிற சோதனைகளினின்றும் பாதுகாக்கப்பட இயேசுவின் நாமம் என்கிற கேடயத்தை எடுத்துக் கொண்டு அப்பரிசுத்த நாமத்தை ஜெபத்தினால் ஊதுவோம். திரும்பவும் நாம் சந்திக்கும் வரை அதை தான் நாம் செய்ய முடியும்.  "துன்பத்தினாலும் துக்கத்தினாலும் பீடிக்கப்பட்ட பிள்ளையே இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல்; நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல், அது சந்தோஷத்தையும் ஆறுதலையும் உண்டாக்கித்தரும்”. "பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம் அந்த விசேஷித்த நாமம், ஓ, எவ்வளவு இனிமையாயிருக்கிறது; பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம் அந்த விசேஷித்த நாமம், ஓ, எவ்வளவு இனிமையாயிருக்கிறது".  என்னுடைய செய்தியின் சில காரியங்களை நான் விட 'வேண்டியிருந்தது. கர்த்தருக்குச் சித்தமானால் ஏதாகிலும் ஓர் நாளில் நமக்கு அதிக நேரம் கிடைக்கும்போது நான் திரும்பவும் வந்து இந்த இருபுறமும் மரங்களிடையே சாலைகள் முதலானவைகளைக் குறித்து பேசுவேன். நான் இன்னும் நேரம் எடுத்துக் கொள்ளாததைக் குறித்து நீங்கள் கூக்குரலிடுகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பாடுவதை நான் விரும்புகிறேன். அன்றொரு இரவு வெளிப்புற ஒலிப்பெருக்கிகளை திறந்துவிட்டிருந்தார்கள். அப்பொழுது அங்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர், "நான் அந்த செய்தியைக் கேட்டு மிகவும் களிகூர்ந்தேன். ஆனால் அந்த பாடல் ஆராதனையின் சமயம் ஏன் ஒலிபெருக்கியை அணைத்து விட்டீர்கள்” என்று கேட்டார். இந்த ஜெபர்சன்வில்லில் நமக்கு நல்லவிதமான அயலகத்தார் இருக்கிறார்கள். நம்முடைய வாகனங்களை அவர்களின் வீடுகளுக்கு முன்பெல்லாம் நிறுத்தி வைக்கிறோம். ஆனாலும் அதைக் குறித்து அவர்கள் ஒன்றும் கூறுவதில்லை. அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி கூறுவோம். ஓ, அவர் எவ்வளவு அற்புதமானவரா யிருக்கிறார்! தேவன் தாமே உங்களோடு இருப்பாராக.  "அது பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம் அந்த விசேஷித்த நாமமம், ஓ, எவ்வளவு இனிமையாயிருக்கிறது” மீண்டும் நாம் சந்திக்கும் வரை (மேய்ப்பர் இப்பொழுது கூட்டத்தை முடிப்பார். நாம் தலைவணங்குவோம். தேவன் உங்களோடு இருப்பாராக). இயேசுவின் பாதத்தண்டை சந்திப்போம் (மகத்தான நகரத்தின் சிங்காசனத்தண்டை ) மீண்டும் நாம் சந்திக்கும் வரை, மீண்டும் நாம் சந்திக்கும் வரை மீண்டும் நாம் சந்திக்கும் வரை, தேவன் உங்களோடு இருப்பாராக...